உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ளவர்களிடம் முஸ்லிம் விற்பனையாளர்களிடமிருந்து காய்கறி வாங்க வேண்டாம் என்று பாஜக எம்எல்ஏ சுரேஷ் திவாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
“இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள், இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன், யாரும் முஸ்லிம்களிடமிருந்து காய்கறிகளை வாங்கக்கூடாது” என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த வீடியோவில் பர்ஹாஜ் தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் திவாரி கூறுகிறார்.
எனினும் இவ்வளவு மோசமான வெறுப்பு பேச்சு பேசியது குறித்து அவரிடமே விளக்கம் கேட்கப்பட, ஆம் அதை நான் சொன்னது உண்மை தான் என திமிராக கூறியுள்ளார். மேலும் முஸ்லிம்கள் தாங்கள் விற்கும் பழங்களில் எச்சிலை தடவி கொரோனா வைரஸ் பரப்புகிறார்கள் என பல புகார்கள் வருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இது அனைத்துமே பொய் பித்தலாட்டம், முஸ்லிம்கள் அவ்வாறு செய்யவில்லை என்று பல ஊடகங்கள் உன்மையை தெளிவுபடுத்தியும் இந்த செய்திகள் பொதுமக்களுக்கு பெருமளவுக்கு போய் சேரவில்லை, காரணம் தொலைக்காட்சி ஊடகங்கள் ஆளும் அரசுக்கு அடிமை சேவகம் செய்வது தான் என விமர்சிக்க படுகிறது.
மேலும் சுரேஷ் திவாரி மீது இதுவரை எந்த ஒரு வழக்கும் போட படவும் இல்லை, போடவும் படாது என்று புதிய இந்தியாவில் வாழும் மக்கள் விளங்கியே உள்ளனர். அதுவும் தலைமை பூசாரி அஜய் பிஷ்த் சிங் ஆளும் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைத்து விடுமா என்ன? என்ற ரீதியில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.