உலக புகழ் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் “பெரும்பான்மை அரசியல் மற்றும் இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள்” என்ற தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், பாரதீய ஜனதா (பாஜக) கட்சியின் எழுச்சிக்கும், வெறுப்புக் குற்றங்களின் அதிவேக அதிகரிப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளது.
கடந்த 2009- 2018 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வெறுப்புக் குற்றங்கள் குறித்து உதவி பேராசிரியர் தீபங்கர் பாசு ஆய்வு மேற்கொண்டார். அதில் கடந்த 2009 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் அரங்கேறிய வெறுப்பு குற்றங்களின் எண்ணிக்கையை கடந்த 2009முதல் 2014 ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெறுப்பு குற்றங்கள் 786 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கண்டறிந்துள்ளார்.
இந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியிடப்பட்ட ஆய்வில், 2009-2018 ஆம் ஆண்டில் மொத்தம் 275 மத வெறுப்புக் குற்றங்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 275 சம்பவங்களில் 22 சம்பவங்கள் 2009-2014 கிலும் மீதமுள்ள 195 மத வெறுப்பு வன்முறை சம்பவங்கள் மோதி பொறுப்பேற்ற பிரகிலான 2014-2018 ஆண்டுகளில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள மொத்தம் 275 மத வெறுப்புக் குற்றங்ககளில் 217 (80 சதவீதம்) சம்பவங்கள் மத சிறுபான்மையினருக்கு (முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள்) எதிரான வெறுப்பு குற்றங்களாக இருந்தன . மேலும் மத சிறுபான்மையினருக்கு எதிரான மொத்த வெறுப்புக் குற்றங்களில், 78.34 சதவீதம் முஸ்லிம்களுக்கு எதிராகவும், 19.35 சதவீதம் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், 2.3 சதவீதம் சீக்கியர்களுக்கு எதிராகவும் இருந்தன ”என்று பாசு தனது ஆய்வில் குறிப்பிடுள்ளார்.
நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு 2014 ல் ஆட்சிக்கு வந்த பின்னர், 80 சதவீதத்திற்கும் அதிகமான வெறுப்புக் குற்றங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேறியுள்ளது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. “மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் (2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு) பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:
முஸ்லிம்கள் (83: 08%),
கிறிஸ்தவர்கள் (14: 87%),
மற்றும் சீக்கியர்கள் (2: 05%).
வெறுப்பு குற்றங்களில் பெரும்பாலானவை தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கின்றன.அதேசமயம் கிறிஸ்தவர்ககளையும் சீக்கியர்களையும் குறிவைத்து நடக்கும் வெறுப்புக் குற்றங்கள் சரிந்துள்ளன. ” என்று கூறப்பட்டுள்ளது.
பாஜகவின் அரசியல் ஆதிக்கத்திற்கும் மத சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்களின் அதிகரிப்புக்கும் இடையே நெருங்கிய இருப்பதாக பாசு தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வு முறை :
சுமார் 27 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான டெல்லியில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. வெறுப்பு குற்றங்களின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 10 மாநிலங்கள் இறங்கு வரிசையில் வகைப்படுத்த பட்டன: உத்தரபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியானா, ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, பீகார், டெல்லி, மற்றும் ஜம்மு-காஷ்மீர் (மற்றும் மத்திய பிரதேசம்). இந்த முதல் பத்தில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் இப்போது பாஜக ஆட்சியில் கீழ் உள்ளன.
கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து, பெரும்பான்மை சமூகத்தினருக்கும் (இந்துக்களுக்கும்) எதிரான வெறுப்புக் குற்றங்களும் சிறிதளவு அதிகரித்துள்ளது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிறுபான்மை எதிர்ப்பு வன்முறையின் பின்னணியில் பாஜகவின் பங்கு குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும், கும்பல் வன்முறை மற்றும் வெறுப்பு குற்றங்களுக்கு எதிராக சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பாசு பரிந்துரைத்தார்.
Courtesy –Waquar Hasan | Caravan Daily