உபி,ஆக்ரா: புதிய ஆக்ரா போலீஸ் அதிகார எல்லைக்குட்பட்ட ஆக்ராவின் மவு கிராமத்தில் 55 வயதான கோயில் பூசாரி ஒருவர் கோடரியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, குற்றம் நடந்த சில மணி நேரங்களுக்குள் சந்தேக நபரை கைது செய்தனர்.
புதன்கிழமை காலை 6:30 மணியளவில் கோயில் வளாகத்தில் ரத்தக் கறை படிந்த நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறை சம்பவ இடத்தை அடைந்து விசாரணையைத் தொடங்கியது. கொலை நடைபெற்ற முந்தைய நாள் இரவு இந்து துறவியான சிவ் கிரியுடன் 29 வயதான உள்ளூர் இளைஞரான ஜீது காணப்பட்டார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சந்தேகத்தின் பேரில் ஜீதுவை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது, அவர் சாதுவை கொன்றதாக ஒப்புக்கொண்டார். மது அருந்திய பின்னர் அவரும் அவரது கூட்டாளிகளும் கோயிலுக்குச் சென்றதால் கிரி ஆட்சேபனை தெரிவித்தார். இது ஒரு சூடான வாதத்திற்கு வழிவகுத்தது. ஆத்திரத்தில், ஜீது கிரியை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.
எஸ்பி (நகரம்) போட்ரே ரோஹன் பிரமோத் கூறுகையில், குற்றம் நடந்த இடத்திலிருந்து கோடாரி மீட்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கொலை தொடர்பாக இந்துத்துவாவினர் கள்ள மவுனம் சாதிப்பது ஏனோ? கொலை நடைபெற்ற மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது என்பதாலா ? அல்லது கொலை செய்தவர் முஸ்லிம் இல்லை என்பதாலா? ஒரு வேலை முஸ்லிமாக இருந்து இருப்பாரானால் ஒரு கலவரமே நடந்து முடிந்திருக்கும். ட்விட்டரில் ட்ரெண்டிங் முதல் இடம் பிடித்து இருக்கும். ஆனால் இப்போது இந்துத்துவா மற்றும் ஆர்எஸ்எஸ் வகைறாக்கள் வாயை திறக்காமல் உள்ளனர் என்பன போன்ற கருத்துக்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.