ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரவு 11 மணியளவில் குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் கோத்ராவில் மூன்று முஸ்லீம் மாணவர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று நண்பர்கள், சமீர் ஹபீஸ் ஃபகத், சோஹல் ஹபீஸ் பகத் மற்றும் சல்மான் ஆகியோர் தேநீர் அருந்துவதற்காக இரவில் வெளியே சென்றிருந்தபோது, சுமார் ஆறு அல்லது ஏழு ஆண்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிடுமாறு கட்டாயப்படுத்தி பிறகு கூற மறுத்ததால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.மூன்று முஸ்லீம் வாலிபர்களும் மதரஸா மாணவர்கள்.ஹாஃபிழ்கள் .
நடந்த சம்பவம் :
“சமீரும், சோஹலும் நானும் கோத்ரா நகரில் உள்ள பாபா நி மத்தி என்ற இடத்திற்கு இரவு 11 மணியளவில் தேநீர் அருந்த சென்றோம் அப்போது ஆறு அல்லது ஏழு நபர்கள் திடீரென வந்து எங்களைச் சூழ்ந்தார்கள். அவர்கள் எங்களை ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட கட்டாயப்படுத்தினர், பின்னர் எங்களைத் கடுமையாக தாக்கத் தொடங்கினர். நாங்கள் எங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடினோம், அவர்கள் எங்களைத் துரத்தினார்கள். உள்ளூர்வாசிகள் கூட்டம் சேர்ந்ததும் அவர்கள் எங்களை விட்டு ஓடி விட்டனர், ”என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சமீர் ஃபகத் நியூஸ் கிளிக் ஊடகத்திடம் தெரிவித்தார். “நான் என் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளானேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
போலீஸ் மறுப்பு:
இருப்பினும், எதிர்பார்த்தபடியே பஞ்சமஹால் காவல் கண்காணிப்பாளர் லீனா பாட்டீல், தாக்குதலுக்கு உள்ளான அப்பாவி இளைஞர்கள் கூறுவதை மறுத்தார்.மூன்று முஸ்லீம் இளைஞர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிகாலை 3 மணிக்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
கோத்ரா பகுதியிலும் ஒரு நல்ல மனிதர் !
“கோத்ரா மத உணர்வால் பிரிக்கப்பட்டுள்ளது, ஆனால் கோத்ர கலவரத்திற்கு பின்பு நகரத்தில் எந்தவிதமான பதட்டமும் ஏற்படவில்லை. இந்த முஸ்லிம் இளைஞர்கள் இரவில் முஸ்லீம்கள் ஆதிக்கம் இல்லாத ஒரு பகுதிக்கு டீ குடிக்க சென்றுள்ளனர், அப்போது தான் தாக்குதல் நடைபெற்றுள்ளது . எனினும் முஸ்லீம் அல்லாத ஒருவர் முஸ்லீம்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் இரவில் சுற்றிக் கொண்டு தேநீர் அருந்துவது சாதாரணமான ஒன்று தான். இந்த சிறுவர்கள் திடீரென சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது, ”என்று ஒரு உள்ளூர் ஆர்வலர் கூறினார்.
எனினும், நடந்த சம்பவத்தை முழுமையாக திசை திருப்ப உள்ளூர் காவல்துறையினர் முயற்சி செய்கிறார்கள். மூன்று முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆதரவாக நின்று காவல்துறையினரை எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யும்படி கட்டாயப்படுத்தியதற்காக என்னை கோத்ரா துணை போலீஸ் சூப்பிரண்டு அச்சுறுத்தினார், ”என்று அவர் கூறினார்.