பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் அட்டூழியங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குஜராத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50 லச்சம் தலித் சமூகத்தவர் வாழ்ந்து வருகின்றனர்,அவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் உள்ளது.
மஞ்ச் குழுத்தலைவர் (கன்வீனர்) கிரிட் ரத்தோட் தலித்துகளின் ரச்சகராக கொண்டாடப்படும் டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பெயரை தேசிய தலைவர்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வடோத்ரா பாரதீய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். எனினும் நிர்வாகம் கோரிக்கையை ஏற்காததை தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள தலித் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
திங்கள்கிழமை (மார்ச் 1) குஜராத் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து சபையின் கூட்டத்தொடர் ஏப்ரல் 1 ல் முடிவடைவதற்கு முன்னர் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி அம்பேத்கார் பெயரை சேர்க்கவில்லை என்றால் பாரிய போராட்டத்தை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ரத்தோட் தெரிவித்துள்ளார்.
தலித் தலைவர்கள் வடோத்ரா மாவட்ட ஆட்சியரை சந்தித்து முதல்வரிடம் வழங்குமாறு கோரிக்கை மனுவை வழங்கியதாக ரத்தோட் தெரிவித்துள்ளார். எனினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை, எனவே மாநில அளவிலான போராட்டத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதற்காக டாக்டர் அம்பேத்கர் ஸ்வபிமான் சங்கர்ஷ் சமிதியை அவர் உருவாக்கியுள்ளார்.
டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் முகமாக மற்ற தேசிய தலைவர்களுடன் அம்பேத்கரின் புகைப்படத்தையும் இணைக்குமாறு கல்வி நிறுவனங்கள், காவல் துறை, மாவட்ட நிர்வாகம் என பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்து ரத்தோட் மற்றும் பிற தலித் தலைவர்கள் கோரிக்கை வைத்தும், அது செவிசாய்க்க படவில்லை.
ஆனால், கடந்த நவம்பர் 21 ஆம் தேதி, ரூபானி தலைமையில் GAD இலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையை கண்டு ரத்தோட் அதிர்ச்சியடைந்தார். 146,385 சொற்களை கொண்டு உலகின் மிக நீண்ட சட்டப்புத்தகத்தை உருவாக்கிய நபரான அம்பேத்கார் பெயரை, 1996 அரசாங்கத்தின் தீர்மானத்தை மேற்கோள்காட்டி அங்கீகரிக்கப்பட்ட தேசிய தலைவர்களின் பட்டியலில் இணைக்கப்பட வில்லை.
இந்தியாவில் 2019 ல் மட்டும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் மொத்தம் 45,935 ஆக இருந்தது, இது 2018 ம் ஆண்டை விட 7.3% அதிகமாகும்.
தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) அறிக்கையின் படி கற்பழிப்பு, கொலை, வன்முறை மற்றும் நிலம் தொடர்பான தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேச மாநிலம் முதலாம் இடத்திலும், குஜராத் மாநிலம் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.