Kerala

வெள்ள பாதிப்பிற்கு 4,432 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு- கேரளா, தமிழகம் புறக்கணிப்பு!

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல மாநிலங்களில் அளவிற்கும் அதிகமாக மழைபெய்ததாலும் சரியான நீர் மேலாண்மை திட்டங்கள் இல்லாததாலும் வெள்ளம் ஏற்பட்டது. அதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சில கேரளா, ஒடிஷா, ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகாவாகும்.

இன்றைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழுவில் கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு கூடுதலாக 4432 ரூபாய் ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஃபானி சூறாவளி புயலால் பாதிக்கபட்ட ஒடிஷாவிற்கு 3338.22 கோடி ரூபாய் , வரட்சியால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவிற்கு 1029.39 கோடியும், இமாச்சல பிரதேசத்திற்கு 74.49 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

கேரளாவில் கடும் பாதிப்பு – ஆனால் நிதி ஒதுக்கீடு அறிவிப்பு இதுவரை இல்லை:

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் கேரளாவில் இதுவரை 121 நபர்கள் மழை வெள்ளத்தால் அளித்துள்ளனர் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 1789 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. 26 ஆயிரம் நபர்களுக்கும் மேலாக தற்காலிக முகாம்களில் மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கேரளாவிற்கு இதுவரை மத்திய பாஜக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.இது கேரள மக்களிடம் மிகவும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.

தொடர்ந்து புறக்கணிக்கபடும் கேரளா,தமிழகம் :

முன்னதாக ஜனவரி (2019) மாத இறுதியில் 7214 கோடி ரூபாயை மத்திய அரசாங்கம் வெள்ள நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்தது. அதில் மஹாராஷ்டிரா. கர்நாடகா, ஆந்திரா ஹிமாச்சல் பிரதேசம், உபி , குஜராத் இடம் பெற்றன. ஆனால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த கேரளா இடம் பெறவில்லை.

https://twitter.com/CarDroidusMax/status/978576088409493504

2018 ஆம் ஆண்டு ‘ஒக்கி’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட (இதில் 250 நபர்கர்களுகும் மேல் உயிர் இழந்தனர்) தமிழகம், கேரளா விற்கு தலா 133 மற்றும் 169 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது மத்திய அரசாங்கம். அதே சமயம் குஜராத் 1056 கோடியும் , ராஜஸ்தான் 421 கோடியும் , மத்திய பிரதேசம் 836 கோடியும் நிவாரண நிதியாக பெற்றன.