டெல்லி பல்கலையில் கடந்த 26ம் தேதி CAA , NRC, NPR ஆகியவற்றை எதிர்த்து போராட்ட உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியதாவது , ” NRC – NPR ஆகியவற்றிற்காக அதிகாரிகள் உங்களிடம் கணக்கெடுக்க வந்தால் பொய்யான பெயரையும், போலியான தகவலையும் கொடுத்து அவர்களை விரட்டிவிடுங்கள், பிறந்த சான்றிதழ், ஆதார் கார்டு, முகவரிச்சான்று, டிரைவிங் லைசன்ஸ் என எது கேட்டு வந்தாலும் அவர்களுக்கு காண்பிக்காதீர்கள். போலீசாரிடம் லத்தி அடி வாங்கவும், புல்லட்டுகளால் துளைக்கப்படவும் நாம் இங்கே பிறக்கவில்லை. (Image:PTI)
NRC பதிவேடு என்பது முஸ்லிம்களுக்கும் மட்டும் தான் பாதகமானது என்பது்போல ஒரு அனுமானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உபியிலும் டெல்லியிலும் போலீசாரால் நடத்தப்படும் கலவரங்களில் முஸ்லிம்கள் மட்டும் தேடித்தேடி வேட்டையாடப்படுவதை வைத்து மோடி அரசு அவ்வாறு உங்களுக்கு சித்தரிக்கிறது. இந்த தேசிய குடிமகன் பதிவேடு முதலில் முஸ்லிம்களை குறிவைத்தால், பிறகு தலித்துகள், பிறகு ஆதிவாசிகள், அதன்பிறகு ஆதரவில்லா ஏழைகள் என நீண்டுகொண்டே போகும்.
NRC யை அமல்படுத்தமாட்டோம், NPR தான் கணக்கெடுப்பிற்கு உட்படுத்தப்படும் என்றும், அகதிகள் முகாம் என எதுவும் எங்கும் கட்டப்படவில்லை என்றும் மோடி பச்சையாக பொய்யுரைக்கிறார். ஊடகங்களை தனது வீட்டு ஏவல்நாய்களாக மாற்றிக்கொண்டு அவர் மக்கள் சபை முன் நின்று பொய் பேசுகிறார். மோடி வாயால் ஒரு விஷயம் இல்லை என்றால் அது பரிசீலனையில் உள்ளது என்று அர்த்தம். மக்களே இனிவரும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் நீங்கள் ஜாக்கிரதையாகவே இருங்கள், இங்கே யாருக்கும் பாதுகாப்பில்லை என்று பேசினார்.
கணக்கெடுக்கவரும் அதிகாரிகளுக்கு போலி பெயர்களை கூறுங்கள் என்ற போது ஜனத்திரளில் பெரிய சிரிப்பலை உருவானது. ஆனால் அதனை சீர்படுத்திய அவர், நான் விளையாட்டாக சொல்லவில்லை , நிஜமாகவே சொல்கிறேன் என்றார் அழுத்தமாக.
இவரின் பேச்சை தொடர்ந்து இவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளார் வழக்கறிஞர் ராஜீவ் ரஞ்சன்.
ஆக்கம்: நஸ்ரத்