இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் தங்கள் மாணவர்களை ‘காம்தேனு கவ் விக்யன் பிரச்சர்-பிரசார் தேர்வு’ எடுக்க ஊக்குவிக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) கேட்டுக் கொண்டுள்ளது. அது என்னப்பா இதுவரை கேள்வி படாத தேர்வாக உள்ளதே என்கிறீர்களா ? கவ் விக்யான் அதாவது மாட்டு அறிவியல் குறித்த தேசிய அளவிலான பரீட்சையின் பெயர் தான அது..
பிப்ரவரி 25 ஆம் தேதி ஆன்லைனில் நடத்தப்படும் இந்தத் தேர்வு, தொடக்க, இடைநிலை , மூத்த இடைநிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பங்குகொள்ளும் விதத்தில் வடிவமைக்க பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தவிர்த்து 12 பிராந்திய மொழிகளில் நடைபெற உள்ள இந்த 1 மணிநேரத் தேர்வை பொது மக்களும் கூட எழுதலாம்.
திங்கள்கிழமை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்ட அறிவிப்பில், யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் “இத்தேர்வு குறித்து பெரிய அளவில் பப்லிசிட்டி” செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு ஆர்வமுள்ளவர்களுக்கு வேண்டியே 54 பக்க “குறிப்புகளை” மாடு பாதுகாப்பு நிறுவனம் தமது இணையதளத்தில்பதிவேற்றியது. அந்த குறிப்பேட்டில் , பசு சாணத்தை “ஆண்டிசெப்டிக்”, என்றும் “பல் பாலிஷ்” என்றும் “கதிரியக்க எதிர்ப்பு” சக்திகள் கொண்டதாக விவரிக்க பட்டிருந்தது. இருப்பினும், தற்போது அந்த குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.