“அயல்நாட்டு பா.ஜ.க நண்பர்கள்” ( Overseas Friends of BJP) என்ற அமைப்பின் சீனா மற்றும் ஹாங்காங்கிற்கான துணைத்தலைவராக இருக்கக் கூடியவர் ராஜூ சுப்னானி.
ஹிஸ்புல்லாஹ் இயக்கத்திற்கு நிதியும், ஆயுதங்களும் சப்ளை செய்ததற்காக பராகுவே நாட்டில் தீவிரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ராஜூ சுப்னானியின் தீவிரவாதத் தொடர்பு பற்றிய ஒரு அலசல்…
சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து பா.ஜ.கவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தல், நிதி திரட்டுதல் போன்ற காரியங்களைச் செய்யக்கூடிய ராஜூ சுப்னானியை 2002-ல் ஹாங்காங்கிற்கு சென்றிருந்த மோடி சந்தித்து உரையாடி இருக்கிறார்.
தீவிரவாத குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராஜுவுடன் மோடி:
அதேபோல் 2015-ல் சீனா சென்ற மோடி ஷாங்காயில் வைத்து ராஜூவை மீண்டும் சந்தித்து இருக்கிறார். அந்த சமயத்தில் ராஜூவின் 9 வயது மகள் மெலோடி கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக மோடியிடம் 1 லட்ச ரூபாய் நன்கொடை அளித்தார்,எனினும் அவர் யாருடைய மகள், அவரது பின்புலம் என்ன என்று யாருமே ஆராயவில்லை.
மோடியின் நட்பு வட்டத்தில் உள்ள இந்த ராஜூ சுப்னானி, ”ஹாங்காங்கிலுள்ள மாஃபியாக்களுக்கும், ஹிஸ்புல்லாஹ் இயக்கத்திற்கும் இடைத்தரகராக செயல்பட்டு, சட்டவிரோத கடத்தல் மூலம் நிதி திரட்டி அளித்து, இதற்காக தினமும் 2 லட்சம் அமெரிக்க டாலர் தொகையை பெற்றவர்.
மேலும், ஹிஸ்புல்லாஹ்வின் நிதியைக் கையாளுபவராகவும், தென் அமெரிக்காவில் ஹிஸ்புல்லாஹ்வின் ராணுவ செயல்பாட்டிற்கான தலைவராகவும் இருந்த ஆசாத் அஹமத் பரக்கத் என்பவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்”, என அமெரிக்க அரசு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு இருப்பவர் ஆவார்.
ஆயுதங்களுடன் சிக்கிய தீவிரவாதி ராஜு:
2002-ல் பராகுவே போலீஸ் ராஜூ சுப்னானி வீட்டை திடீர் சோதனையிட்ட போது அங்கிருந்து வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள், AK-47 துப்பாக்கி வேண்டிய ஃபேக்ஸ் ஆர்டர், இஸ்ரேலிய தயாரிப்பான கையெறி குண்டு அடங்கிய பெட்டி, இரு முகமூடிகள், வேறு சில வெடிபொருட்கள் மற்றும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆயுத வியாபாரத்தில் பயன்படுத்திக் கொள்ள அங்கீகாரக் கடிதம் ஆகியவற்றைக் கைப்பற்றி ராஜூவை தீவிரவாத சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அப்போது, 2002-ல் ஆட்சியில் இருந்த வாஜ்பேய் தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, அர்ஜென்டினாவில் இந்தியத் தூதரக அதிகாரியாகப் பணியாற்றிய ரின்ஜூங் வாங்க்டி என்ற உயர்மட்ட அதிகாரியை பராகுவேவுக்கு அனுப்பி பயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ராஜூ சுப்னானியை பத்திரமாக விடுவித்தது.
அத்தகைய ராஜூதான் இப்போது அயல்நாட்டு பா.ஜ.க ( Overseas Friends of BJP) நண்பர்கள் அமைப்பின் சீனா-ஹாங்காங்கின் துணைத்தலைவராக செயல்படுகிறார்.
வேறு இருவரோடு சேர்ந்து ஹாங்காங்கில் ‘நமோ ரெஸ்டாரண்ட்’-ஐ 10 மில்லியன் டாலர் முதலீட்டில் 2014-ல் நிறுவி, அதை இந்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்தன் மூலம் திறப்புவிழா நடத்தி மோடிக்கு அர்ப்பணித்தார். இதற்கான முதலீடு பயங்கரவாதத் தொடர்பு மூலம் கிடைத்ததா என்பதை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்.
கீழ்கண்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கப் போவது யார்?:
1)பயங்கரவாதத் தொடர்புக்காக கைதான ஒரு குற்றவாளி சீனாவில் பா.ஜ.கவுக்கு நிதி திரட்டவும், பிரச்சாரம் செய்யவும் முதன்மையான நபராகச் செயல்படுவது ஏன்?
2)பராகுவேயில் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் ராஜூ கைது செய்யப்பட்ட போது வாஜ்பேயும், பா.ஜ.கவும் அவரைக் காப்பாற்ற பிரயத்தனப்பட்டது ஏன்?
3)இவருடைய கடந்தகால பயங்கரவாதத் தொடர்பு அமெரிக்க அரசு அறிக்கை மூலம் பகிரங்கமான பின்பும் மோடிக்கும், இவருக்கும் நெருங்கிய தொடர்பு நிலவுவது ஏன்?
4)ஆர்எஸ்எஸ்-பா.ஜ.கவுக்காக சீனாவிலிருந்து தவறான முறையில் திரட்டப்பட்ட எவ்வளவு நிதி ராஜூ மூலம் இங்கு குவிக்கப்படுகிறது?
இவற்றிற்கான விடை கிடைக்கும் போது பா.ஜ.கவிற்கும், பயங்கரவாதத்திற்குமான கள்ளத் தொடர்பு பற்றிய பல உண்மைகள் வெளிவரும்.
அதனால்தான் ராஜூ சுப்னானி பற்றி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்புவதைக் கண்டு பா.ஜ.க பதறுகிறது.