ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் மனைவிகளில் ஒருவரை துருக்கி அரசாங்கம் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன்று (6-11-19) தெரிவித்துள்ளார். அமெரிக்க இராணுவ படையினர் பாக்தாதியை பிடிக்க முயன்றபோது உடையில் அணிந்திருந்த குண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி அமெரிக்க அரசு ஒரு பெரும் பிரச்சாரத்தையே நடத்தியது.
நாங்கள் அவருடைய மனைவியைக் கைது செய்துள்ளோம், எனினும் அவர்களைப் போல பரபரப்பு ஆக்கி கொண்டு அலையவில்லை என்று எர்டோகன் கூறியுள்ளார்.