Modi

பிரதமர் மோடி வீட்டருகே தீ விபத்து!!

இன்று சுமார் 7.15 மணி அளவில் டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் வீட்டருகே உள்ள சிறப்பு பாதுகாப்பு பிரிவின் (SPG) வரவேற்பு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு 17 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

சார்ட் சர்க்கியூட் காரணமாக லோக் கல்யானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தீ விபத்து ஏற்பட்டது பிரதமர் இல்லத்திலோ/அலுவலகத்திலோ அல்ல, SPG காவல் படையினரின் வரவேற்பு அறை உள்ள LKM காம்ப்ளக்ஸில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என மேலுள்ள செய்தி தெரிவிக்கிறது.