மோடி அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பஞ்சாப், உபி மற்றும் ஹரியானா மாநில விஷசாயிகள் கோடி கணக்கில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் உயிர் இழந்துள்ளனர். விவசாயிகள் அனைவரும் ஒருமித்த குரலாக புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் மோடி அரசு செவிசாய்த்தபாடில்லை.
எனினும் மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் நல்ல சட்டங்களே என நாட்டுமக்களிடம் பரப்ப, கடந்த நான்கு-ஐந்து மாதங்களில் மட்டுமே வெவ்வேறு ஊடக தளங்கள் மூலம் விளம்பரங்களுக்கு கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது.
ஐ & பி அமைச்சகத்தின் பணியகம் அவுட்ரீச் அண்ட் கம்யூனிகேஷன் (பிஓசி) விளம்பரங்களுக்காக அதிகபட்சமாக ரூ .7.25 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் , நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேளாண் சட்டங்கள் தொடர்பான விளக்கங்கங்களை இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி செய்தித்தாள்களில் பிஓசி மூலம் அச்சு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று அரசு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் வெபினார்கள் மூலம் விளம்பரப்படுத்துவதற்காக வேளாண் சட்டங்கள் குறித்த மூன்று விளம்பர மற்றும் இரண்டு கல்வித் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு கிட்டத்தட்ட ரூ .68 லட்சம் செலவிட்டுள்ளது.
இதற்கான பொருளாதாரத்தை வேளாண் ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத் துறை சுமந்துள்ளது.
இது தவிர அமைச்சர்கள் மற்றும் அரசாங்க செயற்பாட்டாளர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்புகள் என இது தொடர்பாக 8 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது.
இப்படி பொருளாதார வீண் விரயத்தில் ஈடுபடுவதை தவிர்த்துவிட்டு விவசாயிகளின் கோரிகையை ஏற்பதுவே சரி என அரசை விமர்சிப்பவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.