Pic credit: Beyond Headlines
சர்ச்சைகளுக்கு பெயர்போன பாஜக தலைவர் திரு. சுப்பிரமணியன் ஸ்வாமி அவர்கள் 1991ம் ஆண்டு தூர்தர்ஷனிற்கு பேட்டி கொடுத்திருந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது..
அதை வீடியோவில் காண..
எழுத்து வடிவில்…
பாஜகவின் தேசியவாதம் குறித்தான பார்வையில் உள்ள பிரச்சனையே அவர்களின் முழுமையான எதிர்மறை அணுகுமுறை தான்.
முஸ்லிம்கள் எந்த அளவிற்கு இழப்பிற்கு உள்ளாகிறார்கள் என்பதை வைத்து தான் அது தீர்மானிக்கப்படுகிறது.
அவர்களின் எல்லா நகர்வுகளும் அதை சார்ந்தே இருக்கும். உதாரணத்திற்கு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையான சட்டப்பிரிவு 370ஐ எடுத்து கொள்ளுங்கள்! (அதை பாஜக எதிர்க்கும்)
எனினும் (காஷ்மீருக்கு சிறப்பு-உரிமை அந்தஸ்தை வழங்கும்) சட்டப்பிரிவு 370ற்கு போலவே இந்தியாவின் வட கிழக்கு மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 371ஐ குறித்து ஒருபோதும் இவர்கள் பேசமாட்டார்கள்.
அதே போல தான் அயோத்தி ராமர் கோவில் விவகாரமும்.. இந்துக்களுக்கு அதை விட மிகவும் புனிதமாக உள்ள கைலாஷ் மன்சோவர் குறித்து பேசமாட்டார்கள்.
எனவே அவர்களின் மொத்த செயல்திட்டமும் ஆக்கபூர்வமாக இருப்பது இல்லை.
மாறாக முஸ்லிம்களை எப்படி வீழ்த்துவது என்பதை வைத்து தான் அவர்களின் முழு செயல்திட்டமும் வரையறுக்க படுகிறது.
இது தான் அவர்களின் தேசியவாதம் குறித்தான பார்வையில் உள்ள தவறே ! என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.