ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மோடி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் “பாரபட்சமானது” , “அபாயகரமான பிரிவினையை” ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டம் என கூறி 5 பக்கங்கள் கொண்ட தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
போராட்டக்காரர்களை சந்தித்து, சட்டத்தை ரத்து செய்வதற்கான அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என இந்திய அரசாங்கத்கத்தை வலியுறுத்துகிறது இந்த தீர்மானம்.
தீர்மானம் எப்போது நிறைவேற்றப்படும்?
இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) “உலகின் மிகப்பெரிய நிலையற்ற நெருக்கடியைத் தூண்டக்கூடும், மிக பெரிய அளவில் மனித துன்பங்களை ஏற்படுத்தும்” என்று 154 ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய வலிமைவாய்ந்த குழு எச்சரித்துள்ளது.
24 நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் 154 உறுப்பினர்களைக் கொண்ட எஸ் அண்ட் டி குழு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என்றும் இது குறித்த வாக்கெடுப்பு ஜனவரி 30 அன்று நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிற தமிழ் ஊடகங்களில் வெளிவராத செய்திகளை உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டுவரும் எங்களுக்கு உதவிடுங்கள்
இந்த தீர்மானம் நிறைவேறும் பச்சத்தில் மோடி அரசுக்கு நெருக்கடி முற்றும் என்பதில் ஐயமில்லை .
கடும் கண்டனம்:
பிராசாவுரிமை மூலம் இந்திய குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு அடிப்படையாக ஆக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சிஏஏ, என்ஆர்சி என இரண்டும் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் போது பல இந்திய முஸ்லிம்கள் குடியுரிமையை இழந்து நாடற்றவர்களாக ஆகிவிடுவார்கள்” என்ற அச்சத்தை தீர்மானம் வெளிப்படுத்துகிறது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி இனம், நிறம், வம்சாவளி போன்றவற்றின் அடிப்படையில் குடியுரிமை இழப்பதைத் தடுக்கும் பல சர்வதேச கொள்கைளின்படி நடப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டுகிறது இந்த தீர்மானம்.
மேலும் அமைதியான முறையில் மக்கள் போராட்டம் நடத்தும் உரிமையை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
போராட அனுமதியுங்கள்:
போராட்டத்தை ஒடுக்க அதிகப்படியான சக்தி (போலீஸ், துணை ராணுவப்படை) பயன்படுத்தப் பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அமைதியாக நடத்தும் போராட்டங்களை ஏதோ “குற்றச்செயலில் ஈடுபடுவதை போல சித்தரிப்பதை நிறுத்த வேண்டும்” எனவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல் ஜெஎன்யு பல்கலை மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்திற்கும், கோரக்பூர் தலைமை பூசாரியான ஆதித்யநாத் ஆளும் மாநிலமான உபி யில் அப்பாவி மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அராஜக அத்துமீறல்களுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா மட்டுமல்ல அமெரிக்காவும் கண்டனம்:
மோடி அரசின் குடியுரிமைச் சட்டம் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் காங்கிரஸால் கண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் வாக்களிப்பதற்காக செனட்டில் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், பிரதிநிதி ரஷீதா மற்றும் பிரதிநிதி பிரமிலா ஜெய்பால் ஆகியோர் இந்த தீர்மானத்தை இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்தனர்.
முன்னதாக, சிஏபி குறித்து சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.ஐ.ஆர்.எஃப்) இந்திய மாநிலங்களவை ஒப்புதல் அளிப்பதற்கு முன்பே இது குறித்து கவலைகளை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பும் கண்டனம்:
இது தவிர, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) 57 உறுப்பு நாடுகளும் மோடி அரசின் இந்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், இது குறித்த கவலையை வெளிப்படுத்தியது.
அது மட்டுமின்றி நாடு முழுவதும் மோடி அரசின் சிஏஏ, என்ஆர் சி திட்டடங்களுக்கு எதிராக போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.