Refugee Rohingya

‘முஸ்லிம் அகதிகளை முஸ்லீம் நாடுகளே கூட ஏற்றுக்கொள்வதில்லை’ – உண்மையா?

முஸ்லிம் அகதிகளை முஸ்லீம் நாடுகளே கூட ஏற்றுக்கொள்வதில்லை என்ற கருத்தை தொடர்ந்து இந்துத்துவ கொள்கை கொண்டவர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

சிரிய அகதிகளுக்கு சவூதி அரேபியா புகலிடம் அளிக்காமல் இருப்பதையும், ஐரோப்பிய நாடான ஜெர்மனி சிரியர்களுக்கு கதவைத்திறந்து கொடுத்ததையும் வைத்து எழும் பொத்தாம் பொதுவான கருத்து இது. இவர்களின் இதர வாதங்களைப் போலவே இதுவும் ஆதாரமற்றது என்று கூறி தான் தெரிய வேண்டிய அவசியமில்லை.

உலகிலேயே அதிக அளவு சிரிய அகதிகளை கொண்டிருக்கும் நாடு ஜெர்மனி இல்லை. துருக்கி. இரண்டாவது ஜோர்டான், மூன்றாவது லெபனான். மூன்றுமே இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். ஜெர்மனி நான்காம் இடத்தில்தான் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்கள் ஐக்கிய அமீரகம் (UAE), ஈராக், எகிப்து…என்று பட்டியல் போகிறது.

ரோஹிங்கிய அகதிகள் மிக அதிக அளவில் புகலிடம் பெற்றிருக்கும் நாடு பங்களாதேஷ். அடுத்தது மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா.

Rohingya

ஆப்கானிஸ்தான் அகதிகள் அதிக அளவில் குடியிருக்கும் நாடு பாகிஸ்தான்.

சொல்லப்போனால் இந்து அகதிகளுக்கு சரியான மரியாதை தராத நாடு இந்தியாதான். கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஓடிப்போன வடஇலங்கைத் தமிழர்கள் அங்கே குடியுரிமை பெற்று வசதியோடும் மரியாதையோடும் வாழ்கிறார்கள். இந்தியாவுக்கு ஓடி வந்த வடஇலங்கைத் தமிழர்கள் இன்றுவரை பெரிய உரிமைகளின்றி வாடுகிறார்கள். இந்த CAAவால் கூட அவர்களுக்கு விடிவு காலம் பிறக்கவில்லை.

ஈழ தமிழர் படுகொலை

‘இஸ்லாமியர்கள் கொடூரர்கள்’ என்ற பிம்பத்தை கட்டமைக்கும் நோக்குடன் நீங்கள் கொண்டு வந்த சட்டத்தினால் உண்மையில் உலகுக்கு கொடுக்கப்பட்ட பிம்பம் என்னவென்றால் ‘இந்தியர்கள் மனசாட்சி அற்றவர்கள்,’ என்பதுதான்

ஆக்கம் : ஸ்ரீதர் சுப்ரமணியம்