அருணாச்சல பிரதேசம்: 30 வயதான மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அருணாச்சல பிரதேச பமேங் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ கோருக் பர்துங் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியபட்டுள்ளது.வழக்கு தொடுக்கப்பட்டதை தொடர்ந்து எம் எல் ஏ தலைமறைவாகி உள்ளார்.
அக்டோபர் 12ம் தேதி மாலையில் இட்டானகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இட்டாநகரில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு டும்மே அமோ கூறியுள்ளார்.
“நாங்கள் இது குறித்து விசாரித்து வருகிறோம், காவல் துறையினர் எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கு சென்ற போது அங்கு அவர் காணப்படவில்லை. இப்போதைக்கு நாங்கள் அவரைக் கைது செய்யத் திட்டமிடவில்லை, வழக்கின் விசாரணையை தொடங்கவே விரும்புகிறோம் . எனினும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை ” என்று சூப்பிரண்டு அமோ தெரிவித்துள்ளார்.
இரண்டு தொலைபேசிகளும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் பாஜக எம்.எல்.ஏ பர்துங்கைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக கருத்து கேட்பதற்காக எம்.பி.யும், பாஜகவின் மாநிலப் பிரிவின் தலைவருமான தபீர் காவை தொடர்பு கொள்ள முயன்றோம் எனினும் அவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Image: AOP