சர்ச்சை பேச்சுக்களில் முதன்மை இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வரும் பாஜக தேசிய செயலாளர்.திரு. ஹெச் ராஜா வுக்கு திமுக தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மோடி அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல தமிழகத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்டாலின், மத வெறியை தூண்டி (!), கலவரம் செய்ய நினைப்பதாக ஹெச்.ராஜா பேசியுள்ளார். மேலும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சில சட்ட அறிவிலிகள் அரசியலமைப்புக்கு எதிரானது என பேசி வருவதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் குறித்து இழிவாக பேசிய ஹெச்.ராஜா மன்னிப்பு கோர வேண்டும் என தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி ஹெச்.ராஜாவுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி ஹெச்.ராஜா வருத்தம் தெரிவிக்காவிட்டால் அவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் எனவும் அதற்கான செலவும் ஹெச்.ராஜாவிடமே வசூலிக்கப்படும் எனவும் வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.