Article 370 Kashmir

பிபிசியின் காஷ்மீர் மக்கள் போராட்ட வீடியோவை முதலில் பொய் என மறுத்து , பிறகு ஒப்பு கொண்ட மோடி அரசாங்கம்!

Image credit-BBC

மோடி அரசாங்கம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. எனினும் அங்குள்ள மக்கள்  இதுகுறித்து எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிய ஒரு வழியும் இல்லாதபடி அனைத்து தொலைதொடர்பு சாதனங்களையும் முற்றிலுமாக  மோடி அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

மக்கள் தங்கள் எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக தெரிவிப்பதற்கோ, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கோ,  ஏன் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவதற்கோ கூட இயலாத ஒரு மிகப்பெரும் சிறைச்சாலையில் அடைபட்ட கைதிகளைப் போன்று உள்ளனர் என்று அங்கு சென்று பார்வையிட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு முரண்பட்ட தகவல்கள் !

காஷ்மீரில் தற்போது நிலவிவரும் நிலையைக் குறித்து இரண்டு முரண்பட்ட தகவல்கள் மீடியாவில் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று மோடி அரசாங்கமும், இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மீடியாக்களும் காஷ்மீரில் முழுமையான அமைதி நிலவி வருவதாகவும், காஷ்மீர் மக்கள் தங்களின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து ‘மகிழ்ச்சி’ அடைந்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மறுபுறம்  பிபிசி ,  அல்ஜசீரா போன்ற சர்வதேச மீடியாக்கள் கஷ்மீரில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் மக்கள் வெகுண்டெழுந்து போராட்ட களத்தில் ஈடுபட்டதாகவும் தக்க வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது.

எனினும் இதை மோடி தரப்பு முற்றிலுமாக மறுத்து, போராட்டம் எல்லாம் பெரிதாக எங்கும் நடைபெறவில்லை. 20 பேருக்கும் அதிகமாக எவரும் எங்கும் கூடவில்லை என்று தெரிவித்தது .

மேலும் உலக புகழ்பெற்ற பிபிசி வெளியிட்ட அந்த வீடியோ மற்றும் புகைப்பட ஆவண ஆதாரங்களை மோடி அரசாங்கம் முற்றிலுமாக மறுத்தது. இது குறித்து பிபிசி தாங்கள் எந்த விதமான பொய்யான செய்தியையும் வெளியிடவில்லை என்றும் தங்கள் ஊடக தர்மத்திற்கு ஒருபோதும் பங்கம் விளைவிக்கவில்லை , நாங்கள் எது உண்மை என்று உலகிற்கு கூறினோமோ அது விஷயத்தில் நாங்கள் உறுதியுடன் இருக்கின்றோம். நாங்கள் இது விஷயத்தில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க முடியாது என்று கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு அழுத்தமாக தெரிவித்தது. இது மோடி அரசாங்கத்திற்கு மிகப்பெரும் ஒரு பின்னடைவாக அமைந்தது.

சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து மத்திய அரசாங்கத்தை கடுமையாக ஏளனம் செய்து பல பதிவுகள் பகிரப்பட்டன.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட 2 தினங்களுக்கு பிறகு மோடி அரசாங்கம் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள “சவுரா”  எனும் இடத்தில் போராட்டம் நடைபெற்றது உண்மை தான் என்று வேறு ஒப்புக் கொண்டது. இது இதுகுறித்து இந்திய உள்துறை  அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். அதை காண்க..

ReplyForward