Muslims Uttar Pradesh

உபி: தர்காவில் நுழைந்து பாசிஸ்டுகள் வெறியாட்டம்; முதியவர் தாக்கப்பட்டு விரட்டியடிப்பு ..

உபி மாநிலம் , அம்பேத்கர் நகரில் உள்ளது வரலாற்று சிறப்புமிக்க “ஷாஹ்நூர் பாபா” தர்கா. இந்த பாபாவுடைய தர்கா அப்பகுதியில் மிகப்பிரபலமில்லை என்ற போதும் இந்துக்களும் முஸ்லீம்களும் அங்கே மிக இணக்கமாக சகோதர பாசத்தோடு பழகிவந்துள்ளனர். உரூஸ் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் அங்கு நடக்கப்பெறாது காரணம் அது மிகவும் பின்தங்கிய பகுதியில் இருக்கும் ஒர் இடம் ஆதலாலும் மக்கள் பரவலாக வந்துபோகாத இடம் என்பதாலும் அங்குள்ளவர்கள் மட்டுமே வழிபடுவார்கள்.

இந்நிலையில் நூற்றாண்டு காலமாக பாபாவின் தர்காவினை பராமரித்து வரும் முகம்மது சாகீப் அங்கு காதீமாக இருந்து வருகிறார், அவரது மனைவியும் இருமகள்களும் என அவர்களது குடும்பம் மட்டுமே பலகாலங்களாக இருந்து வருகின்றனர்.

நேற்று மதியம் அப்பகுதிக்குள் அதிரடியாக நுழைந்த பாஜக தலைவர் அரிஹந்த் பாண்டே என்பவர், காதிமையும் அவரது குடும்பத்தாரையும் அவ்விடத்தை விட்டு வெளியேறும்படி கூச்சலிட்டு முகம்மது சாகிபை அடித்து உதைத்தார், இதில் வயதான அந்த சாகிப், எவ்வளவு கெஞ்சியும் அவர் விடுவதாக இல்லை. அவரது குடும்பம் தர்காவை விட்டு இப்பொழுதே வெளியேற வேண்டுமென கூறி வெறியாட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் வந்த அரசு அலுவலர் போன்ற தோரணையுடைய ஒரு ஆள், கையில் ஏதோ ஆவணங்கள் வைத்துள்ளது போல இருந்தவர் இவ்விடம் யாரோ ஒரு தனியாருக்கு சொந்தம் எனவும், சாகிபின் குடும்பத்தினர் தர்காவையும் சுற்றுள்ள இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கூறி அவரை சரமாறியாக அடித்துள்ளனர்.

இவ்வாறு செய்வது கலவரத்தை தூண்டவே என்ற கருத்தை தெரிவிக்கிறார் அப்ரீன்.

இதை கண்டு அங்கு குழுமிய பொதுமக்கள் சிலர் இதனை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு வைரலாக்கிய நிலையில் அங்கு விரைந்த அம்பேத்கர் நகர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் , பாஜக தலைவருடைய ஏவலாள் போல நடந்து கொண்டதும் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. மேலும்பாதிக்கப்பட்ட காதிமின் மீதே தேசிய கொடியை அவமதித்து உள்ளீர்கள் என உபி போலீஸ் சம்பந்தமில்லாமல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்தியஸ்த்தம் செய்து பிரச்சனையை நேர்மையாக கையாளவேண்டிய காவலர்கள், அரிஹந்த் பாண்டே கூறக்கூற அந்த முதிய வயது காதீம்மினை அடித்து உதைத்து இடத்தை காலி செய்யும்படி கட்டாயம் செய்த கையோடு தர்கா ஷரீஃபில் இருந்த அரபு புத்தக பிரதிகளையும், போர்த்தப்பட்டிருந்த புனித போர்வைய வீசி எரிந்து,கொடி மரத்தையும் சேதப்படுத்தி வாயிற்கதவை சாத்தி பூட்டுப்போட்டனர். இவ்விபரம் மேலும் பெரிதாகவே சாகீபிற்கு ஆதரவாக வந்த இந்து மக்களையும் அரிஹந்த் பாண்டே கேவலமாக திட்டித்தீர்க்க ஆரம்பித்துவிட்டார்.

https://twitter.com/RepublicThugs/status/1363070302322761732?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1363070302322761732%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.qyadatmedia.com%2Findia%2Fe0a489e0a4a4e0a58de0a4a4e0a4b0-e0a4aae0a58de0a4b0e0a4a6e0a587e0a4b6-e0a495e0a587-e0a485e0a4aee0a58de0a4ace0a587e0a4a1e0a495e0a4b0%2F

சாகிபிற்கு ஆதரவாக களமிறங்கிய சோசலிஸ்ட் லீடர் வந்தனா குப்தா என்பவர் உபி போலிசுக்கு ஒரு ட்வீட்டினை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார், இத்தனை ஆண்டு காலமும் இந்த அம்பேத்கர் நகர், ஷாஹ்நூர் பாபா தர்கா என்பது இந்து – முஸ்லிம் நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்ந்துவரும் நிலையில், அந்த தர்காவின் காதிமை அடித்து உதைத்து அவ்விடத்தை விட்டு புறந்தள்ளும் ஒரு பாஜக தலைவருக்கு எதுக்காக ஆதரவளிக்க வேண்டும்.

போலீஸ் என்பது கட்சி சாராதது, பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய சமநீதியை உரிமையை பெற்றுத்தர வேண்டியது. இத்தனை வருடமும் இல்லாத வகையில் திடீரென நிலத்திற்கு உரிமை கொண்டாடும் நபர் சம்பவ இடத்திற்கு வராமல் எதற்காக பாஜக தலைவரை ஏவி விட வேண்டும் என சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட காதிமின் மீதே தேசிய கொடியை அவமதித்து உள்ளீர்கள் என உபி போலீஸ் சம்பந்தமில்லாமல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உபி மற்றும் வட இந்தியாவில் தர்கா வழிபாடு அதிக அளவில் காணப்பட்டாலும் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.