BJP Intellectual Politicians

மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தை கொண்டு கொரோனா நோயை குணப்படுத்தலாம் – பாஜக எம்எல்ஏ பேச்சு

உலகம் முழுவதும் மிக தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரசால் இதுவரை 3000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், லச்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இதை தடுக்க விஞ்ஞானிகளே இரவு பகலாக போராடி வரும் நிலையில், அஸ்ஸாம் ஹஜோ சட்டமன்றத் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா இந்த பிரச்சனைக்கு தீர்வு வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது. மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரை குணப்படுத்த முடியும். ” என அவர் கூறியுள்ளார்.

மேலும் முத்துக்கள்:

“மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. பண்டைய காலத்தில் முனிவர்கள் தங்கள் ஆஷ்ரமங்களில் மாடுகளை வைத்திருந்தனர், அவர்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தனர், ஆனால் இது எப்படி சாத்தியமானது?

Image result for Suman Haripriya
பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா

அவர்கள் மாட்டுசிறுநீர், பால், தேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி பஞ்சாமிருதத்தை உருவாக்கினர், அதை பயன்படுத்தி நோய்கள் அனைத்தில் இருந்தும் குணப்படுத்தி கொண்டனர்.” எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கேன்சர் நோயும் குணப்படுத்தலாம்:

சுமன் ஹரிப்ரியா மேலும் கூறியதாவது: “புற்றுநோயைக் குணப்படுத்த மாற்று மருத்துவ முறையை பயன்படுத்தலாம். குஜராத்தில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில், புற்றுநோயாளிகளுக்கு மாட்டு சாணம் பயன்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு மாட்டு சிறுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பஞ்சாமிருதம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பலர் குணம் அடைந்துள்ளனர். பல ஆயுர்வேத நிறுவனங்கள் மற்றும் கோசாலாகளில் (மாட்டு கொட்டகை) இது பயன்படுத்தபடுகிறது.”

அரசாங்கத்திற்கு வேண்டுகோள்:

இது மட்டுமல்லாமல், மாட்டு சாணத்தைப் பயன்படுத்தி ஒரு ‘ஹவான்’ (நெருப்புக்கு முன் நின்று தெய்வங்களிடம் பிரார்த்திப்பது), செய்தால் சீனாவின் காற்றைச் சுத்திகரிக்க முடியும் என்று பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா கூறினார்.

Image result for Suman Haripriya

“ரிஷி முனிஸ் (முனிவர்கள்) மாட்டு சாணத்தைப் பயன்படுத்தி ஹவானை நிகழ்த்தினர், இதனால் சுமார் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு பகுதியின் காற்று சுத்திகரிக்கப்பட்டது … இதனை நமது அரசாங்கமும் செய்வதற்கு முன் வர வேண்டும்” என்று சுமன் ஹரிப்ரியா கூறியுள்ளார்.