பசு காவலர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் ஒரு தீவிரவாத கும்பல் கடந்த 2017ம் ஆண்டு பெஹ்லு கானை கொடூரமாக அடித்தே கொலை செய்தது. பெஹ்லு கான் இறுதி வாக்குமூலமாக , மரண தருவாயில் யார் மீது குற்றம் சுமத்தினாரோ அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும் முறையாக ஆவணங்களுடன் மாட்டை கொண்டு சென்ற மாட்டு பண்ணை விவசாயிகளான பாதிக்கப்பட்ட பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் மீதே பாஜக ஆட்சியில் இருந்த சமயத்தில் மாட்டை கடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
தற்போது 2 ஆண்டுகளுக்கு பின்னர் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் வேலையில் தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ‘பெஹ்லு கானின் மகன்கள் உரிய ஆவணங்களுடன் தான் பயணித்தனர், மட்டை அறுக்க அவர்கள் மாடுகளை கொண்டு செல்லவில்லை எனவும் மாறாக மாட்டு சந்தையில் விற்பனை செய்யத்தான் மாட்டை ஏற்றி சென்றனர்’ என்று கூறி இன்று(30-10-19) பெஹ்லு கானின் மகன்கள் மற்றும் ஓட்டுநர் மீதான வழக்கை ராஜஸ்தான் உயர் நீதி மன்றம் ரத்து செய்தது உத்தரவிட்டது.