Indian Judiciary

‘நீதிமன்றத்திற்கு சென்றால் தீர்ப்பு கிடைப்பதில்லை; நீதித்துறை மோசமான நிலையில் உள்ளது’- ரஞ்சன் கோகோய் !

மாநிலங்களவை உறுப்பினரும், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், ரஞ்சன் கோகோய் இந்திய நீதித்துறையை கடுமையாக விமர்சித்துள்ளனர். “ஒருவர் இந்திய நீதிமன்றங்களுக்குச் சென்றால் அவர் தீர்ப்புக்காக காலவரையறை இல்லாமல் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

“ஒருவர் நீதிமன்றத்தை அணுகுவதால், அவரின் தனிப்பட்ட விவகாரங்களை பொது தளத்தில் அம்பலப்படுத்தி கொள்வதை விட வேறு ஒன்றும் நடப்பதில்லை, தீர்ப்பு கிடைப்பதில்லை. . இந்தியாவில் நீதித்துறை “மோசமான” நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

“5 டிரில்லியன் டாலர் பொருளாதாரேம்ரம் வேண்டும் என்கிறீர்கள், ஆனால் உங்கள் நீதித்துறை மோசமான நிலையில் உள்ளது”

என வியாழக்கிழமையன்று இந்தியா டுடே கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு.கோகோய் கூறினார்.

நிலுவையில் உள்ள வழக்குகள்:

2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் துணை நீதிமன்றங்களில் 60 லட்சம் புதிய வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதேபோல், உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சமாக உயர்ந்துள்ளது, முந்தைய ஆண்டில் 6,000-7,000 புதிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புக் கொண்டது, என கோகோய் கூறினார்.

துணை நீதிமன்றங்களில் சுமார் 4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன, உயர் நீதிமன்றங்களில் 44 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சுமார் 70,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை இது குறிக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஏன் இந்த திடீர் கருத்து ?:

ப்ளூம்பெர்க் கூற்றுப்படி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது கோகோய் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

முன்னாள் சி.ஜே.ஐ மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய போது நீதித்துறையின் புனிதத்தன்மை குறித்து எம்.பி. மஹுவா மொய்ட்ரா திங்களன்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பாபர் பள்ளி- ராமர் கோவில் சர்ச்சையில் இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த பின்னர் கோகோய் எம்.பி.யாக நியமிக்கப்பட்டதாகவும், ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்திற்கு எதிரான விசாரணையை துவக்கப்படுவதை ஏற்காமல் நிராகரித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

நீதிமன்றத்திற்கு யார் செல்வார் ? நீங்கள் ஒரு கார்ப்பரேட் என்றால் மட்டுமே நீதிமன்றத்திற்குச் சென்று அங்கு தீர்ப்பு பெற முயற்சிக்கிறீர்கள் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தன்மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பொய் எனவும், எம்.பி மஹுவாக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.