கீழே பதிவில் கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பாருங்கள். பரிசோதனைகள் அதிகம் செய்யும் மாநிலங்கள் மேலேயும் குறைவாக செய்யும் மாநிலங்கள் கீழேயும் உள்ளன. கொரோனா தொற்று இருப்போர் எண்ணிக்கை மிக தாமதமாக உயரும் மாநிலங்கள் வலது புறமும் அதிவேகமாக உயரும் மாநிலங்கள் இடது புறமும் உள்ளன.
அதாவது மேல்-வலது புற பெட்டியில் இருப்பது நல்ல நிலைமை. கீழ் இடது பெட்டியில் இருப்பது மோசமான நிலைமை.
இந்த வரைபடம் சில விஷயங்களை சொல்கிறது.
- வழக்கம் போல மபி, பீகார், உபி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் அடி மட்டத்தில், கீழ் இடதில் இருக்கின்றன.
- பரிசோதனைகள் அதிகரிக்க அதிகரிக்க தொற்று உறுதியானோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
- ஒரே விதிவிலக்கு குஜராத்: இருப்பதிலேயே அதிவேகத்தில் தொற்று எண்ணிக்கை உயரும் மாநிலங்களில் குஜராத் முதலில் இருக்கிறது. அதே சமயம் பரிசோதனைகளும் அவர்கள் குறைவாகவே செய்கிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் பரிசோதனைகள் அதிகரித்தால் இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு உயரும் சாத்தியக்கூறு இருக்கிறது.
- கேரளா வழக்கம் போல முன்னணியில் இருக்கிறது. தொற்று எண்ணிக்கை இருப்பதிலேயே மிக மிகத் தாமதமாக உயருகிறது.
- தில்லி, ஆந்திரா, ஜம்மு & கஷ்மீர் ஆகிய மாநிலங்கள் அதிக அளவு பரிசோதனைகள் செய்வதால், உயரும் எண்ணிக்கையில் கட்டுப்பாட்டுக்குள் (இப்போதைக்கு) இருக்கிறார்கள்.