அசைவ உணவு உண்டால் கொரோனா வைரஸ் தாக்கும் என்று வந்த வதந்திகளை தொடர்ந்து தேசிய அளவில் சிக்கன் மற்றும் முட்டை விற்பனை குறைந்து விட்டிருக்கிறது. விளைவு: இதுவரை கோழித்துறை சுமார் 2000 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது.
இதனை சரி செய்ய மீன்வளம் மற்றும் பண்ணைத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ‘அசைவ உணவுகளுக்கும் கொரோனா வைரசுக்கும் சம்பந்தம் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்.’ என்று அறிக்கை விடுத்திருக்கிறார்.
இப்படி கொரோனா வந்து திடீரென்று விற்பனை படுத்த உடன்தான் இவர்களுக்கு தாங்கள் செய்யும் பிரச்சாரங்கள் எப்பேர்ப்பட்ட பொருளாதார விளைவுகளை உருவாக்குகின்றன என்று தெரிய வருகிறது. இல்லாவிடில் சைவம் சாத்வீக உணவு, அசைவம் சாப்பிட்டால் மூளை வளராது, சிக்கன் சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்காது என்றெல்லாம் ஆளாளுக்கு ஜல்லியடிகளை பரப்பி திரிந்து கொண்டுதானே இருந்திருப்பார்கள்?