Corona Virus Islamophobia

குஜராத்:கொரோனா நோயாளிகளிடையே இந்து, முஸ்லிம் என பிரித்து தனி தனி வார்டில் சிகிச்சை..

அகமதாபாத்: பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக 1,200 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ள அகமதாபாத் சிவில் மருத்துவமனையில், இந்து மற்றும் முஸ்லிம் நோயாளிகளுக்கு தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவின் படியே நோயாளிகள் பிரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் குன்வந்த் எச் ரத்தோட் இந்தியன் எக்ஸ்பிரஸ், செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

ஆனால், மாநில துனை முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சருமான நிதின் பட்டேலிடம் விளக்கம் கேட்டால், அப்படி எந்த ஆனையும் பிறப்பிக்கவில்லை என்றும், இதை இப்பொழுது தான் அறிவதாகவும், தான் இது குறித்து விசாரிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், பெயர் கூற விரும்பாத ஒரு மருத்துவர், அங்கிருந்த இந்து கொரோனா நோயாளிகள், இசுலாமிய கொரோனா நோயாளிகளுடன் இருக்க விரும்பாத காரணத்தால், இந்து கொரோனா நோயாளிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இவ்வாறு பிரிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்த விஷயம் பெரிதாகவே, அரசு இவ்வாறு நடைபெற்றுள்ளதை மறுத்துள்ளது, எனினும் ஒட்டுமொத்த மக்களையும் மூடர்களாக்குவது கடினம்.

நன்றி: தி ஸ்க்ரோல் செய்திகள்