டெல்லியில் உள்ள நிஜாமுதீன் மார்க்கஸில் உள்ள டேபேகி சபைக்கு வருகை தந்த பின்னர் சத்தீஸ்கருக்கு திரும்பிய உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 159 பேரின் பட்டியலில் இருந்து 108 பேர் முஸ்லிமல்லாதவர்கள் என ஒரு பிபிசி இந்தி செய்தி அறிக்கை கூறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பெயர் பட்டியல் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு சத்தீஸ்கருக்கு திரும்பிய 159 பேர்களில் 108 பேர் முஸ்லிம் அல்லாதவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக பிபிசி அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.
தப்லீக் பெயர் பட்டியலில் முஸ்லிமல்லாதவர்கள் பெயர் :
சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் 159 பேர்களை கொண்ட பெயர் பட்டியலை மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில் 52 பேர் காணவில்லை, எனவே அவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த பெயர் பட்டியலை ஆய்வு செய்ததில் தான் 108 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற செய்தியை பிபிசி அறிந்து கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து பெயர் பட்டியலில் குறிப்பிடபட்டுள்ள சிலரையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளது பிபிசி.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு:
நிஜாமுதீன் மர்க்கஸில் இருந்து திரும்பிய 159 பேரில் 107 பேர் மட்டுமே கோவிட் -19 க்கு பரிசோதிக்கப்பட்டதாகவும், அதில் இதுவரை 87 பேரின் சோதனை முடிவுகள் மட்டுமே வந்துள்ளதாகவும், மேலும் 52 நபர்கள் காணவில்லை என்றும், அவர்களை கண்டுபிடிக்க மாநில அரசு தவறிவிட்டதாகவும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பட்டியலில் குறிப்பிடப்பட்திருந்தும் காணாமல் போயுள்ள 52 பேரைக் கண்டுபிடிக்குமாரு உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது, மேலும் இதுவரை சோதனை முடிவுகள் கிடைக்கப்படாத 23 பேரின் சோதனை முடிவுகளையும் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்தது. இதன் பின்னர் 159 பேரின் பட்டியலை மாநில அரசுக்கு வழங்கியது, அதில் 108 பேர் முஸ்லிமல்லாதவர்கள்.
இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுடன் பிபிசி தெடர்பு கொண்டுள்ளது. தப்லீகி ஜமாத்துடன் எந்த தொடர்பும் தங்களுக்கு இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியதாகவும், மார்ச் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில் தில்லிக்கு தங்கள் சொந்த வேலை நிமித்தமாக டெல்லி சென்றிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிபிசி தொடர்பு கொண்டவர்களின் ஒருவர்
“நான் ஒரு பிராமண இந்து. எனக்கும் தப்லீகி ஜமாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆம். எனது சொந்த வேலை காரணமாக மார்ச் மாதத்தில் டெல்லிக்குச் சென்றேன்.ஆனால் நிஜாமுதீன் மர்க்ஸுக்கு எல்லாம் செல்லவில்லை. பிலாஸ்பூர் செல்ல நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து பயணம் மேற்கொண்டேன்” என பாண்டே (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறியுள்ளார்.
இந்த செய்தி வைரல் ஆனதை தொடர்ந்து தப்லீகி ஜமாத்துக்கு மாநிலத்தில் வைரஸ் பரவி உள்ளதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங்தேவ் தெரிவித்தார். எனினும் இதன் மூலம் ஆளும் அரசு முஸ்லிம்களின் மீது பழியை சுமத்தி விட்டு, இதோ பாருங்கள் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டதால் தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது, மற்றபடி மாநிலத்தில் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்ற பிம்பத்தை கட்டமைக்கவே இவ்வாறு செய்துள்ளது என பலரும் குற்றம் சுமதி வருகின்றனர்.