முன்னாள் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி மீது வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணுடன் பாலியல் சல்லாபத்தில் ஈடுபட்டதாக வழக்கு தொடுத்த சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி ஞாயிற்றுக்கிழமை, தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
இவரது புகாரை தொடர்ந்து கர்நாடகாவில் பரபரப்பான சூழல் நிலவியது.ரமேஷின் சகோதரரும் பாஜக எம்எல்ஏவுமானபாலச்சந்திர ஜர்கிஹோலி இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி இருந்தார்.
பாஜக தலைவர் ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகும் பல வீடியோக்கள் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன, அடுத்த நாளே ரமேஷ் ராஜினாமா செய்ய இது வழிவகுத்தது.
புகாரை ஏன் வாபஸ் பெறுகிறார்?:
தனது புகாரை வாபஸ் பெற்று அவர் கப்பன் பார்க் போலீசாருக்கு சமர்ப்பித்த கடிதத்தில், தான் வீடியோவில் உள்ள பெண்ணின் நலனுக்காக தான் இதைச் செய்வதாகக் கூறியுள்ளார். ஆபாச காணொளி கசிந்த பின்னர் , தனக்கும் பெண்ணுக்கும் எதிராக சமூக ஊடகங்களில் ஒரு திட்டமிடப்பட்ட பிரச்சாரம் தொடங்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.