மே.வங்க தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ள கருத்து கீழே வழங்கப்படுகிறது.
மேற்கு வங்க தேர்தல் அறிக்கையில் பாஜக தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பாஜக அரசு அமைக்கப்பட்டு முதல் நாளில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த ஒப்புதல் வழங்குவோம் என பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நாட்டைப் பிளவுபடுத்துகிறது, முஸ்லிம்களுக்கு பாகுபாடு காண்பிக்கிறது. பல லச்ச கணக்கான இந்தியர்களின் குடியுரிமையை பறிக்கும்.லச்ச கணக்கான ஏழைகள், சட்டத்தை மதிக்கும் குடிமக்கள், குறிப்பாக முஸ்லிம்களை மிரட்டி அவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவீர்கள் என அச்சுறுத்துவதே சிஏஏ வின் நோக்கம்.
பாஜகவையும் அதன் விஷ அஜெண்டாவையும் தோற்கடிக்க அசாம் மற்றும் வங்காள மக்கள் நன்கு யோசித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.