டில்லி முதல்வர் கெஜ்ரிவால் டென்மார்க்கில் நடக்கவிருக்கும் சர்வதேச ‘பருவநிலை மாற்றம் ‘குறித்தான உச்சநிலை மாநாடுட்டில் கலந்துகொண்டு அவரது சாதனைகள் குறித்து பேச அழைக்கப்பட்டார்.
எனினும் அதில் கலந்து கொள்ள மோதி தலைமையிலான அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இது குறித்து “அனுமதியைப் பொருத்தவரை அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அக்டோபர் 9 முதல் 12 வரை நடைபெறவிருக்கும் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்ள முடியாது ”என்று தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி முதலமைச்சர், டேனிஷ் தலைநகரில் வைத்து , பாரிஸ் மேயர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ், கோபன்ஹேகன், போர்ட்லேண்ட், ஜகார்த்தா மற்றும் பார்சிலோனா நாட்டு தலைவர்களுடன் “தூய்மையான காற்று” குறித்து ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்ற திட்டமிடப்பட்டது. மேலும் கெஜ்ரிவால் இரண்டு அமர்வுகளில் உறுதிப்படுத்தப்பட்ட பேச்சாளராகவும் தேர்வாகி இருந்தார். ‘ஆழமாக சுவாசிக்கவும்’ என்ற தலைப்பில், நகரத்தில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் தனது அரசாங்கத்தின் அனுபவத்தைப் பற்றி பேசுவதோடு, நகரத்தில் காற்று மாசுபாட்டை 25% குறைக்க வழிவகுத்த தில்லி அரசு எடுத்த முயற்சிகளின் தொகுப்பை வழங்க திட்டமிடபட்டிருந்தது.
ஒரு வேலை கெஜ்ரிவால் செல்வதற்கு அனுமதி கிடைத்திருப்பின் அவர் உலக அளவில் புகழ் பெற்றிருப்பார் . எனினும் இந்திய அரசு அனுமதி வழங்காததை அடுத்து முதலமைச்சர் பங்கு கொள்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்ட்டுள்ளன.
இவ்வாறு நடப்பது இது முதல் தடவையல்ல, கடந்த ஆண்டு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆஸ்திரியாவில் கல்வி குறித்த ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார் எனினும் மோதி அரசாங்கம் அதற்கும் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.