கோவையில் நடக்கும் அநீதிகளை வெளிக்கொண்டு வந்த ‘சிம்பிளிசிட்டி’ பத்திரிக்கையின் உரிமையாளரை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதமானது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என மே 17 இயக்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.. கோவையில் நடக்கும் பல்வேறு அநீதிகளையும் அக்கிரமங்களையும், அரசின் ஊழல்களையும் மக்களுக்கு ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வந்த ‘சிம்பிளிசிட்டி’ பத்திரிகையை முடக்குவதற்காக தமிழக அரசு திட்டமிட்டு அதன் உரிமையாளரை கைது சிறையில் அடைத்தும், அதன் ஒளிப்பதிவாளரை கைது செய்து சுமார் 10மணிநேரம் அலைகழித்து பின்னர் விடுவித்திருக்கிறது. […]
Tamil Nadu
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ..
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளிலும் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 29.4.2020 இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும். சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 28.4.2020 இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும். மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், காவல், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை, […]
சத்தியம் தொலைக்காட்சிக்கு ஒரு நீதி பாலிமருக்கு ஒரு நீதியா?- மமக தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி!
📍கொரோனா பாதிப்பு காரணமாக சத்தியம் தொலைக்காட்சி முடக்கப்பட்ட நிலையில் பாலிமர் தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்? என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 📍சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்பட்டுள்ளது. அதேவேளை பாலிமர் தொலைக்காட்சி ஊழியருக்கும் கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்? 📍ஒரு ஊரில் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அந்த ஊரையே முடக்கும் அரசு […]
‘இனி ஒரு மருத்துவர் கரோனா நோயால் இறந்தால், அரசு மரியாதையோடு, குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட வேண்டும்’ – மருத்துவர். இரா.செந்தில்..
உயிர்த் தியாகத்தைப் போற்றுவோம், தீண்டாமையை ஒழிப்போம்! சென்னையில் அப்போலோ மருத்துவர் கரோனா நோயால் இறந்தபோது மயானத்திற்குள் அவருடைய பிணம் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல நேற்று முன் தினம் ஒரு நரம்பியல் மருத்துவர் கரோனா நோயால் இறந்த போது, அவருடைய உடலை எடுத்துச் செல்ல முயன்ற ஆம்புலன்ஸ் வாகனம் தாக்கப்பட்டது. அவரோடு வந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள். அவருடைய உடலை தகனம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது.இது தீண்டாமையின் புதிய வடிவம். சாதி அடிப்படையில் பிணங்களுக்கு வழி மறுக்கப்பட்டது. இப்பொழுது நோயின் அடிப்படையில். மனிதர்களுக்குள் […]
முஸ்லிம் என்பதால் பிரசவம் பார்க்க மறுப்பு; களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ..
காங்கயேம் :காங்கயத்தை சேர்ந்தவர் பல்கீஸ். நிறைமாத கர்ப்பிணியான அவர் தனது கணவரை அழைத்து கொண்டு திவ்யா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் முஸ்லிம் என்ற காரணத்தால் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இருவரும் வழக்கமாக பரிசோதனை செய்து வந்த சென்னிமலை ரோடு காங்கேயத்தில் அமைந்துள்ள திவ்யா மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பிரசவம் பார்க்க வேண்டிய நாள் என்பதால் மருத்துவமனையில் அட்மிட் செய்யும் நோக்குடன் சென்றுள்ளனர். எனினும் கடந்த 8 மாதங்களாக (கொரோனா குறித்து முஸ்லிம்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக் கருவி எத்தனை வாங்கப்பட்டது, அதன் விலை என்ன ? வெளிப்படை தன்மை வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்..
கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். நாடே உயிர் காக்கப் போராடிவரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சேலம்: ராஜகணபதி மற்றும் சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை, அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு..
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மத ரீதியான எந்த வித நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் ராஜகணபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதையடுத்து அக்கோவில் அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சித்திரை திருநாளையொட்டி, சேலம் ராஜகணபதி கோவிலைத் திறந்து அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். வரிசையில் நின்று பக்தர்களும் வழிபட்டனர். தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பூஜை நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அர்ச்சகர்கள் விஸ்வநாதன், ராஜா […]
ஜல்லிக்கட்டு காளை மரணம்; இறுதி ஊர்வலத்தில் 3000 பேர் பங்கேற்பு!
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டியில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளையின் இறுதிச்சடங்கில் 3000 பேர் பங்கேற்றதால் அப்பகுதியில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. முடுவார்பட்டியிலுள்ள செல்லாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்துள்ளதால் அக்காளைக்கு கிராம மக்கள் சார்பில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது. அப்போது, காளையின் உடலை ஏற்றிச்செல்ல வண்டிக்கு ஏற்பாடு செய்து, காளையை சுற்றி மலர் மாலைகளும், ரொக்கப் பணமும் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இந்தக் காளை பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் வெற்றிபெற்று பரிசுகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை வென்றுள்ளது. ஆகவே, காளையின் […]
திருச்சியில் மருத்துவர் மீது கொரோனா நோயாளி எச்சில் துப்பியது உண்மையா?
தமிழ்நாட்டில் இயங்கும் பெரும்பாலான ஊடகங்களில் திருச்சியில் மருத்துவர் மீது கொரோனா நோயாளி எச்சில் துப்பியதாக செய்தி வெளியிடப்பட்டது. சில ஊடகங்கள் காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில் அதில் தெரிவிக்கப்பட்ட விசயங்களை குறிப்பிட்டுள்ளனர். ஆனால், வேறு சில ஊடகங்கள் சம்பவத்தை நேரில் பார்த்ததை போல் பதிந்துள்ளனர். தந்தி டிவி செய்தியிலும் நேரில் சென்று பார்த்ததை போல் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தி டிவி செய்தி: ‘திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 42 பேர் சிகிச்சை பெற்று […]
கொரோனா: குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக அவதூறு பரப்பிய நபர் கைது ..
வரதராஜன், வயது 45 நாமக்கல் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர். குறிப்பிட்ட மதத்தினரே கொரோனா வைரஸ் பரப்புவதாக அண்மையில் அவர் அவதூறான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனையடுத்து களத்தில் இறங்கிய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 45 பேருக்குக் கொரோனா நோய் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வரதராஜன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ”நாமக்கல் சந்தைப்பேட்டைப் புதூர்ப் பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த 4 […]
‘முஸ்லீம்கள் அப்படிபட்டவர்கள் இல்லை என்பது எனக்கு தெரியும்’.. பிராமணரின் கண்கலங்கவைத்த பேச்சு ..
போன மாதம் எனது கடை வழியாக போன பிராமண சமுதாயத்தை சேர்ந்த 85வயது மிக்க பெரியவர் ஒருவர். சிறு உதவியை (பணம், பொருள் உதவி அல்ல) என்னிடம் நாடினார், அதற்கான முயற்ச்சி மேற்கொண்டு அந்த வேலை முடிந்தவுடன் எனது கடைக்கு வந்து என் கையை பிடித்து நன்றி சொன்னார், நான் மெய்சிலிர்த்து போய் நீங்களெல்லாம் இப்படி செய்வதற்கு உங்கள் வேதம் தீட்டு என்று அதற்கு பெயர் வைத்துள்ளார்களே என்று கேட்டேன்… ( குறிப்பு:எனக்கு பிராமண நண்பர்கள்,கஸ்டமர்கள் ஏராளமானவர்கள் […]
பி.எஃப்.ஐ நிர்வாகிகள் மீது பொய் வழக்கு; கோவை மண்டல தலைவர் அ.அன்வர் உசேன் கண்டனம் !
பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு புனைந்த கோவை காவல்துறையின் நடவடிக்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மண்டல தலைவர் அ.அன்வர் உசேன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா என்ற உயிர்க்கொள்ளி தொற்றுநோய் இந்தியாவிலும் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் இந்த நோயை பரவாமல் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள், அனைத்து ஜனநாயக சக்திகள் மற்றும் அனைத்து மக்களும் ஜாதி, மத பேதமின்றி உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு […]
கோவை:காவல்துறையினருக்கு உணவு விநியோகம் செய்துவந்தவருக்கு கொரோனா; காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை!
கோவை துடியலூரைச் சேர்ந்த 61 வயதான தன்னார்வலர் ஒருவர் காவல்துறையினருக்கு உணவு வழங்கிவந்துள்ளார். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 40 காவலர்களுக்கு கொரானோ பரிசோதனை இன்று (ஏப்.14) மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக இருமுறை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இரண்டு முறையும் கொரோனா இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவர, மூன்றாம் முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட துடியலூர் காவல்துறையினருக்கு உணவு விநியோகம் செய்து […]
‘கொரொனோ, இந்துத்துவ சக்திகள் எனும் இந்த இரண்டில் சங்கிகளே மிக மிக ஆபத்தானவர்கள்’ – திருமுருகன் காந்தி கண்டனம்!
கிராமப்புறங்களிலும் ஆர்.எஸ்.எஸ் மக்களை வீடுவீடாக சந்திக்கின்றனர். கபசுரகுடிநீர் தருவதாக சொல்லி சிங்கம்புணரி மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்லும் ஆர்.எஸ்.எஸ் ரவுடிகள் அங்குள்ள மக்களிடம் ‘ இந்நோய் முஸ்லீம்களால் பரவியது என்றும், இதை விரட்டுவதற்காக சுலோகங்களைச் சொல்லலாம்’ என்றும் சொல்லி இருக்கிறார்கள். இந்த சுலோகத்தை அவர்கள் சொல்லும் போது ஆண்கள் மட்டுமே வீட்டில் இருக்க வேண்டுமென்றும், பெண்கள் வீட்டில் இருந்து வெளியே நிற்கவேண்டுமென்றும் சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாது ஆர்.எஸ்.எஸ் ஒவ்வொரு சாதிக்காரர்களிடமும் அவரது சாதிக்காரரை அனுப்பி, […]
தன்னார்வலர்கள் உணவு விநியோகிக்க தடை; ஆனால் ஆர்.எஸ்.எஸ் க்கு மட்டும் விதி விலக்கா?
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடை அறிவித்துள்ளது. நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. எனினும் இதற்கு முரணாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் சென்னை மாநகராட்சியுடன் இனைந்து உணவு விநியோகத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று தி இந்துவில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு தன்னார்வலர்கள், காட்சிகள் மற்றும் இயக்கத்தினர் ஊரடங்கு உத்தரவால் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய […]