BJP Maharashtra

மும்பை: பாஜக தலைவர் மோஹித் மீது ரூ.52 கோடி வங்கி மோசடி வழக்கு பதிவு !

மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மோஹித் கம்போஜ் பாரதியா மீது மோசடி புகாரை பதிவு செய்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து ரூபாய் 52 கோடி கடனை பெற்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், பாஜக இளைஞர் பிரிவின் முன்னாள் மும்பை யூனிட் தலைவர் மோஹித் என்று வங்கியின் மேலாளர் தெரிவித்தார். கடனைப் பெறும்போது மேற்கோள் காட்டப்பட்ட நோக்கங்களுக்காக அல்லாமல் அவர்கள் அந்தத் தொகையை வேறு நோக்கத்திற்காக […]

Corona Virus Maharashtra

‘கும்பமேளாவிலிருந்து திரும்புபவர்கள் கொரோனாவை ‘பிரசாதமாக’ விநியோகிப்பார்கள்..’ மும்பை மேயர் கிஷோரி கருத்து ..

கும்பமேளாவில் பக்தர்களுக்கும், சாதுக்களுக்கு தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும், அதாவது அடையாளம் என்ற வகையில் மட்டும் கும்பமேளாவை கொண்டாடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கும்ப மேளாவில் இருந்து திரும்புபவர்கள் தத்தம் மாநில மக்களுக்கு கொரோனாவை தான் பிரசாதமாக வழங்குவார்கள் என கருத்து தெரிவித்துள்ளார். கும்பமேளாவிலிருந்து அந்தந்த மாநிலங்களுக்குத் திரும்புபவர்கள் கொரோனாவை ‘பிரசாதமாக’ விநியோகிப்பார்கள் “என்று பிஎம்சி மேயர் […]

Election Commission Maharashtra Shiva sena

‘நாட்டில் தேர்தல் ஆணையம் செத்துவிட்டது அல்லது பாஜக அரசாங்கத்தின் சார்பாக செயல்படுகிறது’ – சிவசேனா கடும் விமர்சனம் !

சிவசேனா தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது 2 குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது. அசாமில் பாஜக வேட்பாளரின் காரில் ஈ.வி.எம் கண்டெடுக்கப்பட்டது குறித்தும் அஸ்ஸாம் அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் 24 மணி நேரமாக தேர்தல் ஆணையம் குறைத்து அறிவித்தது ஆகிய இரண்டு விஷயங்களை சாம்னா எழுப்பியுள்ளது. சாம்னா தலையங்கத்தில், தேர்தல் ஆணையம் நாட்டில் இறந்துவிட்டது அல்லது […]

மகாராஷ்டிரா: பாஜக/ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளாக இருந்து பணியாற்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரிடம் கோரிக்கை !
BJP Congress Maharashtra

மகாராஷ்டிரா: பாஜக/ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளாக இருந்து பணியாற்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரிடம் கோரிக்கை !

மகாராஷ்டிராவில் முந்தைய தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் போது பாரதீய ஜனதா கட்சி அல்லது ஆர்எஸ்எஸின் அனுதாபிகளாக இருந்து பணியாற்றிய அரசாங்க அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் முதலமைச்சர் (முதல்வர்) உத்தவ் தாக்கரேவை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை வைத்தனர். மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் பொலிஸ் இடமாற்றங்களில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்தனர். […]

மோடிக்கு எதிரான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுகள் விசாரிக்க தயாரா ? சிவசேனா கேள்வி!
Maharashtra Modi

மோடிக்கு எதிரான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தயாரா ? சிவசேனா கேள்வி!

குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், அக்கடிதத்தின் அடிப்படையில் சட்ட அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தயாரா என்று ஆளும் சிவசேனா செவ்வாய்க்கிழமை பாஜக விடம் கேள்வி எழுப்பி உள்ளது. இதனிடையயே மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளும் சிவசேனா கட்சி செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தது. அதில் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் […]

பெண்ணுக்கு பாலியல் தொல்லை,பாஜக தலைவர் நிதின் கைது- மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தகவல்
BJP Crimes Against Women Maharashtra

பெண்ணுக்கு பாலியல் தொல்லை,பாஜக தலைவர் நிதின் கைது- மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தகவல்

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள முர்பாத்தைச் சேர்ந்த பாஜக கூட்டுரிமை குழு உறுப்பினர் (கார்ப்பரேட்டர்) நிதின் தெல்வானே, பெண் உறுப்பினர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமையால் கைது செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வியாழக்கிழமை தெரிவித்தார். நள்ளிரவு 12.40 மணியளவில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதற்காக பாஜக தலைவர் டெல்வானே கைது செய்யப்பட்டார். “ஐபிசி பிரிவு 452 (வீட்டு மீறல்), 354 (துன்புறுத்தல்), 354 ஏ […]

Maharashtra

பதஞ்சலியின் கொரோனா மருந்தை மஹாராஷ்டிராவில் விற்க அனுமதிக்க மாட்டோம் – மாநில உள்துறை அமைச்சர் அதிரடி !

கொரோனா நோயை குணப்படுத்தும் என கூறி விற்பனை செய்யப்படும் பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் ‘கொரோனில்’ மருந்தை, உரிய சான்றிதழ் இல்லாமல் மகாராஷ்டிராவில் விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று தெரிவித்துள்ளார். கொரோனிலின் சோதனைகள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) கேள்வி எழுப்பியுள்ளதாக மகாராஷ்டிரா அரசு சுட்டிக்காட்டியுள்ளது, அதே சமயத்தில் உலக சுகாதார அமைப்பும் (WHO) பதஞ்சலி ஆயுர்வேதத்தின் கூற்றுக்களை மறுத்துள்ளது. கொரோனிலின் ‘மருத்துவ பரிசோதனைகள்’ […]

பாஜகவிலிருந்து தான் விலகினேன், இந்துத்துவாவிலிருந்து அல்ல - உத்தவ் தாக்கரே அறிவிப்பு
Hindutva Maharashtra

பாஜகவிலிருந்து தான் விலகினேன், இந்துத்துவாவிலிருந்து அல்ல – உத்தவ் தாக்கரே அறிவிப்பு

பாஜகவிடம் இருந்துதான் சிவசேனா விலகியதே தவிர, இந்துத்துவ கொள்கையிலிருந்து விலகிக்கொள்ளவில்லை’ என அயோத்தியில் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜகவின் கூட்டணியிலிருந்து வெளியேறி, என்.சி.பி கட்சியுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிர முதல்வரான சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தியில் ராமா் கோயில் கட்ட ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தாா். அயோத்தியில் செய்தியாளா்ளிடம் பேட்டியளித்த உத்தவ் தாக்க்ரே. ‘நான் பாஜகவிடம் இருந்து தான் பிரிந்தேனே தவிர , இந்துத்துவ கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை. பாஜகவும், இந்துத்துவமும் ஒன்றல்ல. […]

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே
CAA Maharashtra

உத்தவ் தாக்கரே சிஏஏ வுக்கு ஆதரவு; கூட்டணி விரிசல் ஏற்படுமா?

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதே சமயம் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) அவர் ஆதரவு தெரிவித்துள்ளார் . “சி.ஏ.ஏ நாட்டிலிருந்து யாரையும் அகற்றுவதற்கான சட்டம் அல்ல … குடியுரிமையை நிரூபிப்பது என்பது இந்துக்கள் முஸ்லிம்கள் என இரு சாராருக்கும் கடினமான ஒரு விஷயம் தான். நான் அதை (NRC) நடக்க விடமாட்டேன்” என்று தாக்கரே ‘சமனா’ பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். கூறியுள்ளார். […]

udhav
Maharashtra Political Figures

‘நான் இந்துத்துவாவை விட்டுவிடவுமில்லை, எனது நிறத்தை மாற்றி கொள்ளவுமில்லை’- உத்தவ் தாக்ரே அறிவிப்பு!

சிவ சேனா கட்சி நிறுவனர் மறைந்த பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சிவசேனா கட்சி கட்சியினரிடம் உரையாற்றினார் உத்தவ் தாக்கரே. நமது பழைய கூட்டாளிகள் நம்மை முதுகில் குத்திவிட்டனர். நான் இந்துத்துவா கொள்கையை விட்டுவிடவில்லை. எனது நிறத்தையும் மாற்றி கொள்ளவில்லை என அவர் பேசியுள்ளார். பாஜகவின் நம்பிக்கை துரோகம்: “நம் பழைய கூட்டாளிகள் நமது முதுகில் குத்திவிட்டதால் தான் நாம் இந்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அவர்கள் […]

sangram actually sanghi congress
Congress Maharashtra

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை சூறையாடிய காங்கிரஸ் கட்சியினர் ..

புதிதாக விரிவுபடுத்தப்பட்ட மகாராஷ்டிரா அமைச்சரவையில் மந்திரி பதவி வழங்கப்படாததை அடுத்து  காங்கிரஸ் எம்.எல்.ஏ சங்ராம் தோப்டேவின் ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை புனே மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை சூறையாடினர். சுமார் 40 ஆதரவாளர்கள் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, அலுவலகத்திற்குள் இருந்த தளபாடங்களை உடைத்து, காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தோப்டே போர் (Bhor) தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார். சிவசேனாவின் குல்தீப் சூடம் கோண்டேவை 2014 மற்றும் 2019 ஆம் […]

fadnavis bjp
BJP Maharashtra

மகாராஷ்டிரா: மீண்டும் முதல்வர் ஆனார் ஃபட்னாவிஸ் !

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்று நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் (NCP) ஷரத் பவார் கூறி இருந்த நிலையில் அவரது மருமகன் அஜித் பவார் அளித்த ஆதரவின் பேரில் சனிக்கிழமை அதிகாலையில் தேவேந்திர ஃபட்னாவிஸின் தலைமையில் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைந்துள்ளது. திடீர் திருப்பமாக இன்று காலை மகாராஷ்டிராவின் முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி ஏற்றார். மேலும் என் சி பி கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவி […]

mumbai rape
Crimes Against Women Maharashtra Rape

10 வயது சிறுமி பலாத்காரம்; கழுத்து நெரித்து கொலை !

மும்பை நகரின் ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்று திறனாளி ( 2 வருடங்களுக்கு முன்னர் தான் நடக்க ஆரம்பித்தார்) 10 வயது சிறுமி  நவம்பர் 5ம் தேதி  காணாமல் போனதால் அப்பகுதி மக்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை 9ம் தேதி  இரவு வித்யாவிஹார் ரயில் நிலையம் அருகிலுள்ள சாலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், சிறுமியின் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த […]

indian coins beggar mumbai மும்பையின் லட்சாதிபதி பிச்சைக்காரர்; அதிர்ந்து போன போலீஸ்!
Maharashtra

மும்பையின் லட்சாதிபதி பிச்சைக்காரர்; அதிர்ந்து போன போலீஸ்!

மும்பையில் ரயில் மோதி மரணித்த பிச்சைக்காரர்! 8 மணி நேரம் செலவழித்து 1.5 லட்சம் மதிப்புள்ள நாணயங்களை எண்ணிய போலீஸ் ! மும்பை கோவாந்தியில் வாழ்ந்து வந்த பிர்ஜு சந்திரா எனும் பிச்சைக்காரர்(வயது 62) ஒருவர் மீது ரயில் ஏறியதில் அவர் மரணித்தார். அவர் வங்கியில் தனது பெயரில் நிலையான வைப்பு கணக்கு  (FD) மூலம் ₹8.7 லட்சம் வைப்பு வைத்திருந்தது தெரியவந்தது.மேலும் இவர் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த 1.75 லட்சம்  சில்லறை நாணயங்களை  எண்ணுவதற்கு ரயில்வே […]

Maharashtra BJP MLA charan
Alleged Police Brutalities BJP Maharashtra

பெண் காவலரிடம் தவறான பேச்சு; பாஜக எம்எல்ஏ கைது !

ஒருபுறம், பாரதீய ஜனதா-சிவசேனா காட்சிகள் எதிர்வரும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தீர்மானிப்பதில் மும்முரமாக உள்ளது. மறுபுறம், மகாராஷ்டிராவின் ஆளும் பாஜக அரசின் எம்.எல்.ஏ ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பாஜக எம்எல்ஏ சரண் வாக்மரே ஒரு பெண் காவலர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதால் போலீசாரால் சனிக்கிழமை (28-9-19) கைது செய்யப்பட்டார். இவர் மகாராஷ்டிராவில் உள்ள தும்சர் மொஹாடி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஆவர். […]