கேரளாவின் மலை மாவட்டமான வயநாட்டில் உள்ள நெய்குப்பா பழங்குடியினர் காலனியைச் சேர்ந்த மூன்று ஆதிவாசி மைனர் குழந்தைகள், நெல் வயலில் நுழைந்ததற்காக அண்டை வீட்டுகாரரால் தாக்கப்பட்டனர். ஆறு மற்றும் ஏழு வயதுடைய சிறுவர்கள் தனது வயலை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டி பக்கத்து வீட்டுக்காரர் கொடூரமாக அடித்துக் காயப்படுத்தி உள்ளார். இச்சம்பவம் ஆகஸ்ட் 15ம் தேதி நடந்தது. சம்பவத்தை நேரே கண்ட உறவினர், நெற்செய்கைக்கு தயார்படுத்தப்பட்டிருந்த வயலில் பிள்ளைகள் இறங்கிய காரணத்தால் இடத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் பிள்ளைகளை அடித்து உதைத்ததாக […]
Kerala
‘2021ல் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 486 வன்முறை தாக்குதல் சம்பவங்கள்’ – கேரள முதல்வர் பினராயி
கொச்சி: இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டுமே, 486 கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நினைவுகூர்ந்தார். வரவிருக்கும் திருக்காக்கரை இடைத்தேர்தலை ஒட்டி பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் எம்எல்ஏ பிசி ஜார்ஜின் வெறுப்புப் பேச்சு குறித்தும், அவருக்கு பாஜக ஆதரவு அளித்து வருவது குறித்தும் அவர் குறிப்பிட்டு பேசினார். கடந்த ஆண்டு, நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 486 தாக்குதல்கள் நடந்தன. […]
கண்ணூர்: மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் வாகனம் மீது பாஜகவினர் தாக்குதல்; போலீசார் வழக்கு பதிவு !
கண்ணூர்: மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் வாகனம் மீது பாஜகவினர் தாக்கியதாக பிலதாரா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த அப்பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மலையாள ஊடகமான மாத்ரபூமி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இவ்வழக்கு தொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் : இந்த சம்பவம் (நேற்று) திங்கள்கிழமை பயன்னூர் அருகே உள்ள எடாட் […]
‘நாங்க ஜெயிச்சா லவ் ஜிஹாதுக்கு எதிரா சட்டம் கொண்டு வருவோம்’- கேரள பாஜக அறிவிப்பு !
கேரளாவில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான தனது அறிக்கையை பாஜக புதன்கிழமை வெளியிட்டது. இந்த அறிக்கையில் (இல்லாத) லவ் ஜிஹாதுக்கு எதிராக ஒரு சட்டம், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள், நிலமற்ற ஒவ்வொரு எஸ்சி / எஸ்டி குடும்பத்திற்கும் ஐந்து ஏக்கர் நிலம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு நபருக்கு வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சபரிமாலாவின் மரபுகளைப் பாதுகாப்பதற்காக சட்டத்தை இயற்றுவோம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் கேரளாவில் உள்ள ஒற்றை பாஜக […]
கேரள கன்னியாஸ்திரிகள் மீதான பஜ்ரங் தள் அமைப்பினரின் தாக்குதலை கண்டிக்குமாறு கேரள முதல்வர், அமித் ஷாவுக்கு கடிதம் !
உத்தரபிரதேசத்தில் ரயில் பயணத்தின்போது கேரள கன்னியாஸ்திரிகள் குழுவை பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதற்கு சிரோ மலபார்-சர்ச் கண்டன அறிக்கை வெளியிட்ட ஒரு நாளில், இந்த சம்பவத்தை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் இந்த தாக்குதலை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சரை, பினராயி கேட்டுக் கொண்டார். […]
கேரளாவில் பாஜக வேகமாக வளராமல் உள்ளதற்கு 90% கல்வியறிவு விகிதமும் ஒரு காரணம் – பாஜக எம்.எல்.ஏ கருத்து !
திருவனந்தபுரம்: கேரளாவின் ஒரே பாஜக எம்.எல்.ஏ வும் பாஜக தலைவருமான ராஜகோபால், கேரள மாநிலத்தில் பாஜக வேகமாக வளராததற்கான காரணங்களை கூறினார். ‘கல்வியறிவு ஒரு முக்கிய காரணியாகும், கேரளாவின் கல்வியறிவு விகிதம் 90%’ என்று அவர் கூறினார். ‘கேரளா ஒரு வித்தியாசமான மாநிலம். இங்கே இரண்டு, மூன்று வெவ்வேறு காரணிகள் உள்ளன. கேரளாவின் கல்வியறிவு விகிதம் 90% ஆகும். அவர்கள் எதையும் சிந்திப்பவர்கள், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்கிறார்கள், விவாதிக்கின்றனர். இவை படித்தவர்களின் பழக்கம். அதுவும் ஒரு […]
கேரள முதல்வருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு: அமலாக்கத்துறையினர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு !
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மத்திய விசாரணை நிறுவனமான அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மீது கேரள காவல்துறை வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளது. கேரள முதலமைச்சருக்கு எதிராக பொய்யாக குற்றம்சாட்டிட அமலாக்க துறை அதிகாரிகள் தன்னை கட்டாயப்படுத்தியதாக ஸ்வப்னா கூறியுள்ளதன் அடிப்படையில் கேரள போலீசார் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர். சதி, அச்சுறுத்தல் மற்றும் தவறான அறிக்கையை சமர்ப்பிக்க கட்டாயப்படுத்துதல் போன்ற ஜாமீனில் வெளிவராத குற்றங்களின் பேரில் எஃப்.ஐ.ஆர் […]
தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி பெயரை குறிப்பிட அமலாக்கத்துறை கட்டாயப்படுத்தியது: குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயர்..
கேரளாவின் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயர், கேரள முதல்வர் பினராயி, பிற மாநில அமைச்சர்கள் மற்றும் இந்த வழக்கில் ஒரு முக்கிய நபரின் மகன் ஆகியோரை பெயரிடுமாறு அமலாக்க இயக்குநரகத்தின் (ED) விசாரணை அதிகாரியால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சந்தீப் நாயர் இதை தெரிவித்துள்ளார். இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் பணமோசடி தொடர்பான […]
கேரளா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் பாஜக வில் இணைந்தனர்..
கேரள உயர்நீதிமன்றத்தின் இரண்டு முன்னாள் நீதிபதிகள், பி.என்.ரவீந்திரன் மற்றும் வி.சிதம்பரேஷ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர். நீதிபதி ரவீந்திரன் 2007 முதல் 2018 வரை கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். நீதிபதி சிதம்பரேஷ் 2011 ல் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று , 2019 ஆம் ஆண்டில் ஓய்வுபெறும் வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். முன்னதாக ”பிராமணர்கள் முன் ஜென்ம நல்வினையால் இரு முறை பிறப்பவர்கள்.. எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்’‘ என கேரள […]
வக்ஃபு வாரியம் சார்பாக 51 கோடி கொரோனா நிதி உதவி; குருவாயூர் தேவஸ்தானம் 5 கோடி நிதி உதவி – சங்கிகள்* எதிர்ப்பு !
இந்தியா முழுக்க உள்ள வஃபு போர்டுகள் சார்பாக PM Cares கொரோனா நிவாரண உதவிக்கு ரூபாய் 51 கோடிகள் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. அலிகார் பல்கலை சார்பாக சுமார் 1.5 கோடியும், அலிகார் பல்கலை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 100 கொரோனா படுக்கைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அஜ்மீர் தர்கா நன்கொடை: அஜ்மீர் தர்கா சார்பாகவும் உபி மற்றும் டெல்லியின் சுற்றுப்புறத்தில் இருக்கும் தர்காக்களின் சார்பாகவும் (தர்கா கமிட்டி — காதீம்ஸ் மற்றும் ஷஜ்ஜதா நஸூன்) கணிசமான (1.4 கோடி) தொகை […]
9 வயது சிறுமியிடம் காமச்சேட்டையில் ஈடுபட்ட பாஜக தலைவர்.. சிறுமி வீட்டாருக்கும் கொலை மிரட்டல் !
மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கண்ணூர் மாவட்டம், திருப்பங்கோட்டூர் பஞ்சாயத்து தலைவரான பத்மராஜன், ஆசிரியரும் அந்த ஊரின் பாஜக தலைவரும் ஆவார். இவர் மீது புகாரளித்துள்ள சிறுமியின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது.. இந்த சிறுமி போல பல சிறுமிகளையும் அவர் பலாத்காரம் செய்துள்ளதும், இவரை குறித்து பலமுறை பள்ளி ஆசிரியர்களிடம் புகாரளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும்.. இவர் குறிப்பிட்ட அந்த சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததை தாமே பலமுறை கண்டுள்ளதாகவும் பத்மராஜனின் தோழர் […]
13 டன் அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன் தொகுதி மக்களுக்கு அனுப்பினார் ராகுல் காந்தி !
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சமூக சமையலறைகளில் (Community Kitchens) விநியோகிக்க 13 டன் அரிசி வழங்கியுள்ளார், எம்.பி யும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும்இந்த அரிசி சமமாக விநியோகிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அடீலா அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வயநாடில் மொத்தம் 51 பஞ்சாயத்துகள் மற்றும் ஐந்து நகராட்சிகள் உள்ளது. வயநாடு தொகுதியில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து சமுதாய சமையலறைக்கும் 500 கிலோ அரிசி + 50 […]
பசுமாட்டை வன்புணர்வு செய்து கொன்ற சுமேஷ்.. கேரளாவில் அரங்கேறிய கொடூரம்..
கண்ணூர்: பசுவைக் கொன்றது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாவோடைச் சேர்ந்த 33 வயதான அலேகாண்டி ஏ.கே.சுமேஷ் என்பவரை சக்கரக்கல் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. சமீப காலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒருபுறம் அதிகரித்து கொண்டிருக்க இதற்கிடையில் மிருகங்களையும் கூட விட்டுவைக்காமல் சிலர் இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கண்ணூரை சேர்ந்தவர் யூசுப், இவர் மாடுகளை பராமரித்து வருகிறார். இவர் பராமரித்து வந்த பசு ஒன்றை […]
டெல்லி கலவரத்துக்கு சங்பரிவார் தான் காரணம் – பினராயி விஜயன் ..
வன்முறையைத் தடுக்கவும், டெல்லியில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவரவும் மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை வலியுறுத்தி உள்ளார். மக்களின் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களை அடக்குவதற்கு சங்க பரிவார் எடுத்த நடவடிக்கையின் விளைவாக இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பினராயி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய தலைநகரில் மக்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் எனவும் வெறுப்பு பிரச்சாரங்களும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் நடந்து வருவதாக […]
கேரளா: ‘மதரஸா மாணவர்களை பாகிஸ்தானுக்கு திரும்ப போ’ என கூறி தாக்கிய தீவிரவாதி கைது!
கேரளாவின் கும்ப்லாவில் உள்ள மதரஸாவில் பயிலும் மாணவர்களான ஹசன் சையத் (13) மற்றும் முனாஸ் (17) ஆகியோர் மீது ‘கிரண்’ என அடையாளம் காணப்பட்ட ஒருவன் தாக்குதல் நடத்தியுள்ளான் . மதரசா மாணவர்கள் தலையில் தொப்பி அணிந்திருந்ததை சகித்து கொள்ள முடியாமல், அவர்கள் வம்புக்கு இழுத்த கிரண், அவர்கள் இருவரையும் நோக்கி ” பாகிஸ்தானுக்கு திரும்ப போ” என கத்தி கொண்டே மாணவர்களை தாக்க துவங்கியுள்ளான். அவ்வழியே சென்ற மக்கள் கிரணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். […]