குஜராத்: கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாக செயற்கையாக சித்தரிப்பதாகவும், கொரோனா சிகிச்சைக்கென மாநிலத்தில் உள்ள முக்கிய மருத்துவமனையான அஹமதாபாத் பொது மருத்துவமனை பாதாளச் சிறையை விட மோசமான நிலையில் இருப்பதாகவும் அம்மாநில அரசின் மீது குஜராத் உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது வரை குஜராத்தில் கொரானாவால் ஏற்பட்ட மொத்த மரணங்களில் 45% , அதாவது 377 மரணங்கள் அஹமதாபாத் மருத்துவமனையிலே தான் நடந்துள்ளன. நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா, ஐலேஷ் வோரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ” […]
Gujarat
முதல்வர் உதவி கேட்க, ஏய்ம்ஸ் தலைவரையே குஜராத்துக்கு அனுப்பி வைத்த அமித்ஷா; பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசு?
கொரோனாவில் குரோதத்தை காட்டுகிறதா மத்திய அரசாங்கம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அஹமதாபாத்: பெருகி வரும் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மக்கள் பெரும் அளவு பொருளாத ரீதியாகவும் , உடல் நல ரீதியாகவும் பாதிக்கப்பட்ட இந்நிலையில் ஏய்ம்ஸ் தலைவரை குஜராத்துக்கு அனுப்ப ஆர்டர் போட்டுள்ளார் அமித்ஷா. நாட்டிலேயே மகாராஷ்டிராதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து குஜராத்தில்தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. குஜராத்தில் இதுவரை 8,194 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் […]
குஜராத் மாடல்: நூர்ஜஹானின் 2 வயது குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விடாமல் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய போலீசார் !
நூர்ஜஹான் ஷேக் தனது இரண்டு வயது நோய்வாய்ப்பட்ட மகள் அய்மனுடன் புதன்கிழமை காலை ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்தார், சோதனை சாவடி ஒன்றில் அவர்களை தடுத்து நிறுத்திய குஜராத் போலீசார் கொரோனா வைரஸ் பரப்புவதாக குற்றம் சாட்டி, அவர்களை செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் எல்லிஸ்பிரிட்ஜின் கிழக்குப் பகுதியில் உள்ள விக்டோரியா கார்டனில் இருந்து பல்டியில் உள்ள மருத்துவமனைக்கு நடந்தே செல்ல வேண்டியதாயிற்று. குஜராத்: ஆம்புலன்சில் அவசரமாக சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட, இரண்டு வயது குழந்தை அய்மனின் வாகனத்தை போலீசார் […]
குஜராத்: 2002 நரோடா காம் கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அதிரடி இடமாற்றம்..
குஜராத் : 2002 ஆம் ஆண்டு பாசிஸ்டுகளால் அரங்கேற்றப்பட்ட நரோடா காம் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி வழக்கை விசாரித்து வந்த சிறப்பு எஸ்ஐடி நீதிபதி, குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதிரடியாக வல்சாட்டின் முதன்மை மாவட்ட நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். வழக்கு பின்னணி: குஜராத் நரோடா காம் படுகொலை என்பது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்த ஒன்பது பெரிய கலவர வழக்குகளில் ஒன்றாகும். கோத்ரா ரயில் படுகொலையை […]
‘குஜராத் மாடலில்’ கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 15,000 குழந்தைகள் உயிரிழப்பு..
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது, எனினும் மக்களின் அடிப்படை தேவையான மருத்துவத்தில் மிகவும் பின்தங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் நிதின் படேல், குஜராத் முழுவதும் 2018 மற்றும் 2019 ஆம் […]
குஜராத்: மாதவிடாய் உள்ள நிலையில் சமைத்தால் அடுத்த பிறவியில் நாயாக பிறப்பால் – சுவாமி ஜி யின் கருத்தால் சர்ச்சை !
“மாதவிடாய் ஏற்பட்ட பெண் சமைத்த உணவை நீங்கள் ஒருமுறை உண்டாலும் கூட, அடுத்த ஜென்மத்தில் நீங்கள் கட்டாயம் “பலட்” (எருதாக) தான் பிறப்பீர்கள். மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் ஒரு பெண் தனது கணவருக்கு சமைப்பாளானால் அவள் அடுத்த பிறவியில் கட்டாயம் “குத்ரி” (பெண் நாய்) ஆக தான் பிறப்பால். இது ஷாஷ்திரத்தில் சொல்லப்பட்டதாகும். எனவே இந்த பிரச்னையில் இருந்து தப்பித்து கொள்ள ஆண்கள் திருமணத்திற்கு முன்னரே சமையல் கற்று கொண்டிருக்க வேண்டும். ” இது குஜராத்தில் உள்ள […]
அமெரிக்க அதிபருக்காக மோடி அரசு கட்டி வரும் சுவர்..
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் பிப்ரவரி 24 அன்று இந்தியா வர உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் ட்ரம்பின் விமானம் தரையிறங்க உள்ளது. அவருக்காக சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை இந்திரா பாலத்துடன் இணைக்கும் சாலையில் ஒரு சுவரைக் கட்டி வருகிறது ,அஹமதாபாத் மாநகராட்சி (ஏ.எம்.சி). ஏன் என்கிறீர்களா? இந்த 600 மீட்டர் நீளம் கொண்ட பகுதியில் சேரி மக்கள் வசிக்கின்றனர். சேரி பகுதி அமெரிக்க அதிபரின் கண்களுக்கு படாமல் இருப்பதற்க்காக தான் மோடி அரசு அவசர […]
குஜராத் கலவரம்: மோடி குற்றமற்றவர் என்ற எஸ்ஐடியின் அறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தேதி அறிவிப்பு..
குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த சமயத்தில் 2002 ஆம் நடைபெற்ற கலவரத்தில் மோடி குற்றமற்றவர் என்று எஸ்ஐடி யின் “கிளீன் சிட்” ஐ எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு “பல முறைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்துள்ளதாகவும், என்றாவது ஒரு நாள் வழக்கை விசாரிக்க தானே வேண்டும்” என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. நடந்த சம்பவம்: குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. எந்த வித […]
முதலமைச்சர் மோடி பொதுக்கூட்டத்தின் போது வாகனங்களுக்கு தீவைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் விடுதலை…
கடந்த 2007ல் சூரத்தின் வராச்சா பகுதியில் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வெளியே இருந்த 40 பைக்குகளுக்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் நேற்று விடுவித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம். புகார்தாரர் மற்றும் குற்றவாளிகள்: பாஜக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை எதிர்த்த சர்தார் உத்கர்ஷ் சமிதி உறுப்பினர்கள் மீது பைக் உரிமையாளர்களில் ஒருவரான மன்சுக் கச்சதியா கபோதரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த […]
2002 குஜராத் : 33 முஸ்லிம்களை உயரிடன் எரித்து கொன்ற 17 பயங்கரவாதிகளுக்கு ஜாமின்; வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருமாறும் உத்தரவு!!
கடந்த 2002 ஆம் ஆண்டு, மோடி ஆட்சியின் போது நடந்த குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 பயங்கரவாதிகளுக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது, இன்று. அவர்கள் அனைவரும் அண்டை மாநிலமான மத்திய பிரதேசம் சென்று “சமூக சேவை” செய்ய வேண்டும் என்பது ஜாமினில் உள்ள நிபந்தனையாகும். 33 முஸ்லிம்களை உயிருடன் எரித்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 17 பயங்கரவாதிகளும் “சமூக மற்றும் ஆன்மீக சேவைகளை” செய்ய வேண்டும் என்று […]
குஜராத்: தலித் இளம்பெண்(19) கற்பழித்து கொலை – 4 பேர் கும்பல் அராஜகம் !
கண்டுகொள்ளாத மீடியா: குஜராத்தின் மொடாசாவில் உள்ள சைரா கிராமத்தில் 19 வயது தலித் சமூக பெண் ஒருவரை கடத்தி, கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கொலை செய்து, பெண்ணை ஆலமரத்தில் தூக்கிலிட செய்துவிட்டு சென்றுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. எனவே தான் இது குறித்த செய்தி எந்த தொலைக்காட்சியிலும் முக்கியத்துவத்துடன் காண்பிக்கப்படவும் இல்லை. அலைக்கழித்த போலீஸ்: கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி , எங்கள் வீட்டு பெண் எங்கு தேடியும் காணவில்லை என […]
குஜராத்: CAA வுக்கு ஆதரவாக கடிதம் எழுத கட்டாயப்படுத்தி பிறகு எதிர்ப்பால் பின்வாங்கிய பள்ளி நிர்வாகம்!
குஜராத்தின் அகமதாபாத் கங்காரியா பகுதியில் உள்ள லிட்டில் ஸ்டார் பள்ளியில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் CAA வுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டைகளை எழுதுமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்த பட்டுள்ளனர். கல்லூரி நிர்வாகம் அராஜகம் : “வாழ்த்துக்கள். இந்திய குடிமகனான நான், CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்) கொண்டு வந்ததற்காக பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன். நானும் எனது குடும்பத்தினரும் இதை ஆதரிக்கிறோம்.” என்ற வாசகத்தை ஆசிரியர்கள் […]
குஜராத்தில் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட மறுத்ததால் 3 முஸ்லீம் மாணவர்கள் மீது குண்டர்கள் தாக்குதல்- போலீசார் வழக்கை திசை திருப்பவும் முயற்சி!
ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரவு 11 மணியளவில் குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் கோத்ராவில் மூன்று முஸ்லீம் மாணவர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நண்பர்கள், சமீர் ஹபீஸ் ஃபகத், சோஹல் ஹபீஸ் பகத் மற்றும் சல்மான் ஆகியோர் தேநீர் அருந்துவதற்காக இரவில் வெளியே சென்றிருந்தபோது, சுமார் ஆறு அல்லது ஏழு ஆண்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிடுமாறு கட்டாயப்படுத்தி பிறகு கூற மறுத்ததால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.மூன்று முஸ்லீம் […]