உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட விரோத கடுங்காவல், வீடுகளை புல்டோசர்களால் இடிப்பது , போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் காவலில் உள்ளவர்கள் மீது போலீஸ் வன்முறை என்பன உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், போராட்டக்காரர்களை விசாரிக்கவும், அமைதியான போராட்டங்களில் ஈடுபடவும் வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, உத்தரபிரதேச மாநில நிர்வாகம் “அத்தகைய நபர்களுக்கு […]
Yogi Adityanath
உபி: முதல்வர் ஆதித்யானத்தை விரமர்சித்ததாக கூறி 19 வயது அக்ரம் கைது !
பெயிண்டர் அக்ரம் அலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் தாமாக முன்வந்து, அவர் மீது “பகைமையை ஊக்குவித்தல், மதத்தை அவமதிக்கும் நோக்குடன் செயல்படல் மற்றும் வேண்டுமென்றே அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படல்” ஆகிய குற்றங்களை அக்ரம் மீது சுமத்தி அவரை கைது செய்துள்ளனர். புதுடெல்லி: சமூக வலைதளங்களில் உபி முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி 19 வயது இளைஞனை உத்தரபிரதேச போலீசார் ஜூன் 13ம் தேதி திங்கள்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட […]
அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை நிறுத்த போராட்டங்கள் கூடாது – உபி முதல்வர் உத்தரவு ..
அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டம் (ESMA)-வை நிறைவேற்றியதன் மூலம் அரசு நிறுவனங்களும், துறைகளும் ஆறு மாத காலத்திற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்துள்ளது அம்மாநில பாஜக அரசு. இதை மீறுவோரை வாரண்ட் இல்லாமலே யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆனந்தி பென் படேல் அவர்களின் ஒப்புதலோடு, கூடுதல் தலைமைச் செயலாளர் முகுல் சிங்கால் அவர்களால் வெளியிடப்பட்ட குறிப்பாணையில் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு கடந்த மாதம் […]
உபி : கொரோனா பரவிவரும் வேளையில் லச்சக்கணக்கானோர் கூடும் ராமர் திருவிழாவுக்கு மாநில அரசு அனுமதி..?
இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசாங்கங்கள் அந்தந்த மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ராம் நவாமி தினத்தன்று அயோத்தியில் ஒரு மெகா நிகழ்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ராம் நவமி மேளா/கண்காட்சி வருகிற மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளது இதில் லச்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வை நிகழ்வை கைவிடுமாறு மருத்துவ ஆலோசகர்கள் மாநில அரசுக்கு அறிவுறுத்திய […]
வரம்பு மீறிய உபி முதல்வர், பாடமெடுத்த அலஹாபாத் உயர்நீதிமன்றம் !
யோகி ஆதித்யநாத் என அழைத்து கொள்ளும் உபி முதல்வர் அஜய் பிஷ்த் சிங் பதவி ஏற்றது முதல் சிறும்பான்மையினர் மீது தாக்குதல், பாலியல் வன்முறைகள் என பல்வேறு விதங்களிலும் மாநில சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு புதைகுழியில் உள்ளது குறித்து அனுதினமும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மோடி அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி முஸ்லிம்கள் பலரை (20க்கும் மேற்பட்டோரை) சுட்டு கொன்றது அஜய் பிஷ்த்தின் காவல்துறை. மேலும் அந்த சமயத்தில் […]
யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிக்காது – உபி முதல்வர் கண்டுபிடிப்பு !
தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதன் மூலம் கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களை நீக்க முடியும் என்று உ.பி. முதல்வர் அஜய் பிஷ்த் சிங் ஞாயிற்றுக்கிழமையன்று கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. உபி யில் உள்ள ரிஷிகேஷில் சர்வதேச யோகா விழாவைத் துவக்கி வைத்து பேசிய அஜய் பிஷ்த், யோகா மூலம் உடலை ‘ஃபிட்டாக’ வைத்துள்ளவர்கள் கொரோனா வைரஸ் போன்ற நோய்களுக்கு அஞ்சத் தேவையில்லை என பேசியுள்ளார். “யோகாவுக்குள் மிகப்பெரிய […]
உபி முதல்வர் : “போராட்டத்தின் போது போலீசார் ஒருவரை கூட சுடவில்லை, அவர்கேள அவர்களுக்குள் சுட்டு கொண்டனர்”
கடந்த 2019 டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஒரு நபர் கூட பொலிஸ் தோட்டாக்களால் கொல்லப்படவில்லை, மேலும் இறந்தவர்கள் “கலவரக்காரர்களின் தோட்டாக்களால்” தான் கொல்லப்பட்டனர் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டங்களின் போது உபி போலீசார் சிறப்பாக செயல்பட்டதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார். “அகர் கோய் மர்னே கே லியே ஆ ஹி ரஹா ஹை தோ வோ ஜிந்தா […]
உபி: அதிகாலை 4 மணிக்கு பெண் போராட்டக்காரர்கள் மீது தடியடி,கண்ணீர் புகை குண்டு ..
அசாம்கர் போராட்டக்காரரர்கள் மீது உ.பி. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். எஃப்.ஐ.ஆரின் படி, போராட்டக்காரரர்கள் மீது கலகம் விளைவித்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகள் பதியபட்டுள்ளன. உத்தரபிரதேசத்தின் அசாம்கர் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்புத் தெரிவிக்க கூடியிருந்த சுமார் 200 பெண்கள், பிப்ரவரி 5, புதன்கிழமை அதிகாலையில் காவல்துறையினரால் லத்திசார்ஜ் செய்யப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் ! பிப்ரவரி 4ம் தேதியின் காலை முதல் அசாம்கரின் பிலாரியாகஞ்ச் பகுதியில் உள்ள மவ்லானா ஜோஹர் அலி […]
அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !!
உபி முதல்வர் ஆதித்யநாத் முஸ்லிம் பெயர்களை போன்ற தொனியில் உள்ள நகரங்களின் பெயர்களை மாற்றுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக உள்ளவர். அந்த விதத்தில் 2018ல் அலகாபாத் என்று இருந்த பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றினார். அதை ஒரு சாதனையாக சங்பரிவார கூட்டத்தினர் கொண்டாடினர். அதே சமயம் பெயர் மாற்றத்தால் நகர் எந்த விதத்தில் முன்னேறி விட்டது? இதனால் பயன் என்ன என்று பொது மக்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தற்போது இந்த பெயர் மாற்றம் செல்லுபடியை எதிர்த்து […]
உபி : முதியவரை தாக்கி, வீட்டு பொருட்களை உடைத்து, நகை, பணத்தை திருடி சென்ற போலீசார் !
முஸ்லிம்கள் மீது தொடரும் யோகியின் பழிவாங்கும் படலம்? முஸாஃபர்நகரில் மரக்கடை வியாபாரம் நடத்தி வருபவர் 72 வயது ஹாஜி ஹமீத் ஹஸன். கடந்த வெள்ளியன்று அவரது வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் உபி போலீசார். இரவு 11 மணியளவில் , 8 வயது பேரனுடன் உறங்கிக்கொண்டிருந்த அவருக்கு வாயிலில் ஏதோ சத்தம் கேட்டு விழிப்புத்தட்டியுள்ளது. படுக்கையைவிட்டு எழுந்து பார்த்த போது 30 போலீசார், யூனிபார்மிலும் , மஃப்டியிலுமாக நின்று வீட்டின் கேட்டை உடைத்து , பெரிய சுத்தியலை […]
உபி : மக்களுக்கு உதவ சென்ற வழக்கறிஞரை பொய் வழக்கில் கைது செய்த போலீசார்!
உபி மாநில முதல்வரும் கோவில் தலைமை பூசாரியுமான யோகி தலைமையிலான போலீசார் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூர வன்மங்களை அரங்கேற்றி வருவது குறித்து பல்வேறு இணையவழி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் உ.பி.யில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்காக உபியில் உள்ள ஷம்லிக்குச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 24 வயதான முஸ்லீம் வழக்கறிஞரான முகமது பைசலை உத்தரபிரதேச போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஐபிசி 145,149, […]
உபி : ஒரு லிட்டர் பாலில் ஒரு பக்கட் தண்ணீர்:குடிக்க அலைமோதும் ஏழை மாணவர்கள்!
அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பால் பாக்கட்டுடன், ஒரு பக்கட் தண்ணீர் கலந்து 81 பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த கொடூரம் பாஜக ஆட்சி செய்யும் உபியில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் வளர்ச்சியடையாத பகுதிகளில் சோன்பத்ரா மாவட்டமும் ஒன்றாகும். மாவட்டத்தில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு சத்தான உணவிற்காக அரசுப் பள்ளிகளில் அரசு சார்பாக உள்ள மதிய உணவு திட்டத்தையே சார்ந்து உள்ளனர் என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். […]
உபி : காற்று மாசுபாட்டை குறித்து இர்ஷாத் ட்வீட் – (NSA)’தேசிய பாதுகாப்பு சட்டத்தில்’கைது செய்துவிடுவேன்! – போலீஸ்!
தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருப்பது விவசாய பயிர் கழிவுகளை எரிப்பது என்று அறியப்படுகிறது. நீதிமன்றமும் சமீபத்திய தீர்ப்பின் போது இது குறித்து குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் உபி மாநில பரேலி பகுதியில் வசிக்கும் மாற்று திறனாளி இர்ஷாத் கான் என்ற முதலாம் ஆண்டு சட்ட கல்லூரியில் பயிலும் மாணவன் தனது வீட்டருகே உள்ள ஒருவர் விவசாய பயிர் கழிவுகளை (stubble burning) எரிப்பதாக தனது ட்விட்டர் கணக்கு மூலம் குற்றம் சாட்டினார். மாணவரை பாராட்டவில்லை […]
ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; டாக்டர் கஃபில் கான் குற்றமற்றவர் என ஊர்ஜிதம்!
உபியில் 60 குழந்தைகள் மரணித்த சம்பவத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் டாக்டர் கஃபில்கான் குற்றமற்றவர் என்று அறிவிப்பு ! கடந்த 2017 ஆம் ஆண்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உபி மாநில கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர்.இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியது. குழந்தைகளை காப்பாற்றுவதற்காக டாக்டர் கஃபில் கான் தனது சொந்த பணத்தை செலவு செய்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வரவழைத்தார்.தன்னால் இயன்ற அளவு உயிர் சேதம் […]
உ.பி யில் “ரொட்டியும், உப்பும்” தான் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு ! – வைரல் வீடியோ
“ஒரு சமயம் குழந்தைகளுக்கு ரொட்டியும் உப்பும் கிடைக்கும், மறு சமயம் அரிசியும் உப்பும் அரிதாக ஏதேனும் ஒரு நாள் பால் வந்தடையும். ஆனால் அது ஒருபோதும் பகிர்ந்து அளிக்கப்படுவது கிடையாது. வாழைப்பழம் அப்படி தான் பகிர்ந்து அளிக்கப்படாது. கடந்த ஒரு வருடமாக இதே நிலைதான் நீடிக்கிறது”…..