சிவ சேனா கட்சி நிறுவனர் மறைந்த பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சிவசேனா கட்சி கட்சியினரிடம் உரையாற்றினார் உத்தவ் தாக்கரே. நமது பழைய கூட்டாளிகள் நம்மை முதுகில் குத்திவிட்டனர். நான் இந்துத்துவா கொள்கையை விட்டுவிடவில்லை. எனது நிறத்தையும் மாற்றி கொள்ளவில்லை என அவர் பேசியுள்ளார். பாஜகவின் நம்பிக்கை துரோகம்: “நம் பழைய கூட்டாளிகள் நமது முதுகில் குத்திவிட்டதால் தான் நாம் இந்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அவர்கள் […]
Political Figures
‘சிஏஏ சட்டம் மாற்றப்படவில்லை என்றால் கட்சியில் இருக்க மாட்டேன்’ ; நேதாஜி சிலையில் பாஜக கொடி வைக்கப்பட்டதற்கும் கண்டனம் – நேதாஜி பேரன் அறிவிப்பு !
நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் அவர்களின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு அவரது பேரன் சந்திர குமார் போஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின் சிஏஏ சட்டம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய திரு.போஸ் சிஏஏ சட்டத்தை மாற்றவில்லை என்றால் பாஜக கட்சியில் நீதிபதி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் நேதாஜி சிலையின் புகைப்படம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தது. பாஜக வை விட்டு […]
‘இந்து மகாசபாவின் பிரிவினைவாத அரசியலை எதிர்த்தவர் நேதாஜி’ – மம்தா பானர்ஜி புகழாரம் !
இன்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 123 வது பிறந்த நாளை கொண்டாடும் நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு கீழ்கண்ட கருத்துக்களை தெரிவித்தார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்து மகாசபாவின் “பிரிவினைவாத அரசியலை” எதிர்த்ததாகவும், மதச்சார்பற்ற மற்றும் ஒன்றுப்பட்ட இந்தியாவுக்காக போராடியதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். நேதாஜிக்கான சிறந்த அஞ்சலி: நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிய திருமதி பானர்ஜி, சுபாஸ் […]
மறக்க வேண்டியதை ரஜினிகாந்த் நினைவூட்டியது ஏன்? – வைகோ கேள்வி !
பெரியார் விவகாரம் என்பது மறக்க வேண்டியது என கூறிவிட்டு, அதனை ரஜினி நினைவூட்டியது ஏன்? என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். தந்தை பெரியார் ஆற்றிய அருந்தொண்டிற்காக ஐ.நா.வின் அனைத்து நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம், யுனெஸ்கோ மன்றம் (UNESCO) 1970 ஆம் ஆண்டு பெரியாருக்குச் சிறப்பு விருது வழங்கி கவுரப்படுத்தியது. அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடந்த விழாவில், மத்திய அரசின் கல்வி அமைச்சர் டாக்டர் திரிகுணசென் […]
அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் !!
உபி முதல்வர் ஆதித்யநாத் முஸ்லிம் பெயர்களை போன்ற தொனியில் உள்ள நகரங்களின் பெயர்களை மாற்றுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக உள்ளவர். அந்த விதத்தில் 2018ல் அலகாபாத் என்று இருந்த பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றினார். அதை ஒரு சாதனையாக சங்பரிவார கூட்டத்தினர் கொண்டாடினர். அதே சமயம் பெயர் மாற்றத்தால் நகர் எந்த விதத்தில் முன்னேறி விட்டது? இதனால் பயன் என்ன என்று பொது மக்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தற்போது இந்த பெயர் மாற்றம் செல்லுபடியை எதிர்த்து […]
சு.சுவாமி : மோடிக்கு பொருளாதாரம் புரியல – என்னை நிதி அமைச்சர் ஆக்குங்க!
வியாழக்கிழமை சென்னையில் நடந்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி “பிரதமருக்கு பொருளாதாரம் பற்றிய புரிந்துணர்வு இல்லை” என்றும் நிர்மலா சீதாராமன் பற்றி அதிகமாக ஒன்றும் கூறாமல் இருப்பதே நல்லது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். ரகுராம் ராஜன் ஒரு பைத்தியக்காரர் : முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு பைத்தியக்காரர். அவர் வட்டி விகிதத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தார், […]
ஹெச் ராஜாவுக்கு திமுக தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ்!
சர்ச்சை பேச்சுக்களில் முதன்மை இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வரும் பாஜக தேசிய செயலாளர்.திரு. ஹெச் ராஜா வுக்கு திமுக தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மோடி அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல தமிழகத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்டாலின், மத வெறியை தூண்டி (!), கலவரம் செய்ய நினைப்பதாக ஹெச்.ராஜா பேசியுள்ளார். மேலும் […]
மோடியின் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர சொல்வதா ? – திருமா கடும் தாக்கு!
16ஆம் தேதி பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வானொலியில் உரையாற்றுகிறார் அதனால் விடுமுறை நாளாக இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விருப்பமுள்ள மாணவர்கள் வரவேண்டும் என இப்போது மாற்றி அறிவித்திருக்கிறார்கள். இது மாணவர்களின் சுதந்திரத்தை பறிக்கக்கூடியதாக இருக்கிறது. மாணவர்கள் இல்லங்களில் இருந்தவாறே பிரதமரின் உரையைக் கேட்க வேண்டும் என அரசு கூறலாம். பாரதிய ஜனதாவின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிற அரசாக தமிழக அரசு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த […]
சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து வருகிறது அதிமுக – அன்வர் ராஜா ஒப்புதல்!
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அ.தி.மு.க. தொடர்ந்து ஆதரவாக செய்யப்பட்டு வருவதால் சிறுபான்மை சமூகத்தவரின் வாக்குகளை இழக்க நேரிடுகிறது என அ.தி.மு.க முன்னாள் எம்.பி.யும் அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு செயலாளருமான அன்வர்ராஜா கூறியுள்ளார். CAA வுக்கு அ.தி.மு.க. ஆதரவு: குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் ஓட்டெடுப்புக்கு வந்தபோது இந்த மசோதாவை ஆதரித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் வாக்களித்ததால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா 125 வாக்குகளை பெற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவை எதிர்த்து 105 […]
உபி : முதியவரை தாக்கி, வீட்டு பொருட்களை உடைத்து, நகை, பணத்தை திருடி சென்ற போலீசார் !
முஸ்லிம்கள் மீது தொடரும் யோகியின் பழிவாங்கும் படலம்? முஸாஃபர்நகரில் மரக்கடை வியாபாரம் நடத்தி வருபவர் 72 வயது ஹாஜி ஹமீத் ஹஸன். கடந்த வெள்ளியன்று அவரது வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் உபி போலீசார். இரவு 11 மணியளவில் , 8 வயது பேரனுடன் உறங்கிக்கொண்டிருந்த அவருக்கு வாயிலில் ஏதோ சத்தம் கேட்டு விழிப்புத்தட்டியுள்ளது. படுக்கையைவிட்டு எழுந்து பார்த்த போது 30 போலீசார், யூனிபார்மிலும் , மஃப்டியிலுமாக நின்று வீட்டின் கேட்டை உடைத்து , பெரிய சுத்தியலை […]
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி: உடனடி நடவடிக்கை தேவை – தொல்.திருமா வலியுறுத்தல்!
மத்திய அரசு மக்கள் நலனை கருத்தில்கொண்டுபொருளாதார கொள்கை முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும்!- தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் இந்தியப் பொருளாதாரம் சரிவில் சென்றுக் கொண்டிருப்பதாகவும் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 4.5% ஆக குறைந்திருப்பதாகவும் சர்வதேச செலாவணி நிதியம் (INTERNATIONAL MONETARY FUNDS) அறிவித்துள்ளது. மேலும், இந்த பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தி சீராக்குவதற்கு உடனடியாக அரசு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது. இந்தியப் பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி 189 நாடுகளை உறுப்புநாடுகளாக […]
கல்வி நிறுவனங்களில் தொடரும் மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- திருமா!
ஹிஜாப் அணிந்திருந்த இசுலாமிய மாணவிக்குபல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் அவமதிப்பு!பல்கலைகழக நிர்வாகம் மதப்பாகுபாட்டை கடைபிடிப்பதா?என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் பங்கேற்று பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கிய விழாவில், பட்டமும் தங்கப்பதக்கமும் பெறுவதற்காக அந்த அரங்கில் அமர்ந்திருந்த முஸ்லிம் மாணவி அவமதிக்கப்பட்டிருக்கிறார். முதுகலை மக்கள் தொடர்பியல் துறை மாணவியான ரபியாவை, அவர் இஸ்லாமியர் என்பதற்காகவே திடீரென அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி ஒரு அறையில் […]
உபி : மக்களுக்கு உதவ சென்ற வழக்கறிஞரை பொய் வழக்கில் கைது செய்த போலீசார்!
உபி மாநில முதல்வரும் கோவில் தலைமை பூசாரியுமான யோகி தலைமையிலான போலீசார் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூர வன்மங்களை அரங்கேற்றி வருவது குறித்து பல்வேறு இணையவழி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் உ.பி.யில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்காக உபியில் உள்ள ஷம்லிக்குச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 24 வயதான முஸ்லீம் வழக்கறிஞரான முகமது பைசலை உத்தரபிரதேச போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஐபிசி 145,149, […]
என்ஆர்சி: இரண்டாம் சுதந்திரப் போருக்கு அழைப்பு விடுக்கும் மம்தா பானர்ஜி!
“இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணில்லாத வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீங்கள் குடியுரிமையை வழக்குவதாக இருந்தால் அதை நாங்கள் ஏற்று கொள்வோம். அதை விடுத்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் (சிஏபி) மதத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்த ஒரு அடிப்படையிலோ மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டினால் அதனை நாங்கள் இறுதி வரை எதிர்ப்போம். இதனால் நாங்கள் தனித்து விடப்பட்டாலும் சரியே.” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முழங்கியிருக்கிறார். “தேசிய குடிமக்கள் பதிவேடு […]
உபி : ஒரு லிட்டர் பாலில் ஒரு பக்கட் தண்ணீர்:குடிக்க அலைமோதும் ஏழை மாணவர்கள்!
அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பால் பாக்கட்டுடன், ஒரு பக்கட் தண்ணீர் கலந்து 81 பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த கொடூரம் பாஜக ஆட்சி செய்யும் உபியில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் வளர்ச்சியடையாத பகுதிகளில் சோன்பத்ரா மாவட்டமும் ஒன்றாகும். மாவட்டத்தில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு சத்தான உணவிற்காக அரசுப் பள்ளிகளில் அரசு சார்பாக உள்ள மதிய உணவு திட்டத்தையே சார்ந்து உள்ளனர் என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். […]