ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் : திருமாவளவன் மனு “மத நல்லிணக்கத்தை குலைத்து, பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுவது ஆர்எஸ்எஸ். அதை சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்த போது இனிப்பு விநியோகித்து கொண்டாடியது. பாஜக விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும். மேலும் நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டம்” என […]
Political Figures
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்: ஓபிஎஸ் பேட்டி
அதிமுகவுக்குள் எழுந்த பிளவு தான் திமுக ஆட்சிக்கு வர காரணம், இன்றைக்கு அதே சூழல் தான் ஏற்பட்டுள்ளது; இன்றைக்கு அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எண்ணம். “மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொறுப்பை ஏற்க வேண்டும், அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் மறந்து விடலாம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்; ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை எதிர்கொண்டால் அதிமுகவை […]
உபி அரசின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கடிதம் !
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட விரோத கடுங்காவல், வீடுகளை புல்டோசர்களால் இடிப்பது , போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் காவலில் உள்ளவர்கள் மீது போலீஸ் வன்முறை என்பன உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், போராட்டக்காரர்களை விசாரிக்கவும், அமைதியான போராட்டங்களில் ஈடுபடவும் வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, உத்தரபிரதேச மாநில நிர்வாகம் “அத்தகைய நபர்களுக்கு […]
உபி: முதல்வர் ஆதித்யானத்தை விரமர்சித்ததாக கூறி 19 வயது அக்ரம் கைது !
பெயிண்டர் அக்ரம் அலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் தாமாக முன்வந்து, அவர் மீது “பகைமையை ஊக்குவித்தல், மதத்தை அவமதிக்கும் நோக்குடன் செயல்படல் மற்றும் வேண்டுமென்றே அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படல்” ஆகிய குற்றங்களை அக்ரம் மீது சுமத்தி அவரை கைது செய்துள்ளனர். புதுடெல்லி: சமூக வலைதளங்களில் உபி முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி 19 வயது இளைஞனை உத்தரபிரதேச போலீசார் ஜூன் 13ம் தேதி திங்கள்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட […]
‘2021ல் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 486 வன்முறை தாக்குதல் சம்பவங்கள்’ – கேரள முதல்வர் பினராயி
கொச்சி: இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டுமே, 486 கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நினைவுகூர்ந்தார். வரவிருக்கும் திருக்காக்கரை இடைத்தேர்தலை ஒட்டி பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் எம்எல்ஏ பிசி ஜார்ஜின் வெறுப்புப் பேச்சு குறித்தும், அவருக்கு பாஜக ஆதரவு அளித்து வருவது குறித்தும் அவர் குறிப்பிட்டு பேசினார். கடந்த ஆண்டு, நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 486 தாக்குதல்கள் நடந்தன. […]
கல்வித்துறையில் காவி சித்தாந்தம் திணிப்பு .. வைகோ கடும் கண்டனம்!
இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டிற்கு ஏற்ற வகையில் இளங்கலை வரலாறு பட்டப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை : கொரோனா பெருந்தொற்று நாட்டை துயரப் படுகுழியில் தள்ளி இருக்கும் சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு, கல்வித் துறையை காவிமயமாக்கும் சதிச் செயலை அரங்கேற்றி இருக்கிறது. கடந்த 2020-21 கல்வி ஆண்டில் கொரோனா பாதிப்பில் பள்ளிகள் மூடப்பட்டன. இணையம் […]
‘மோடியைப் போன்ற ஒரு பொய்யரை நான் பார்த்ததில்லை. அவர் பொய்களை மட்டுமே பேசுகிறார்’- மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை “பொய்யர்” என்று கூறினார். மேலும் பாஜக மாநிலத்திற்குள் குண்டர்களை அழைத்து வருவதாக குற்றம் சாட்டினார். கடந்த புதன்கிழமை அன்று இவ்வாறு மம்தா பேசி உள்ளார். பிஷ்ணுபூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “நான் பிரதமர் பதவிக்குரியவரை மிகவும் மதித்து வந்தேன், மதிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாமல் இல்லை ஆனால் பிரதமர் மோடியைப் போன்ற ஒரு பொய்யரை நான் பார்த்ததில்லை. அவர் பொய்களை மட்டுமே […]
முஸ்லிம்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தவே மே.வங்கத்தில் சிஏஏ வை அமல்படுத்துவோம் என்கிறது பாஜக – ப. சிதம்பரம் விமர்சனம் !
மே.வங்க தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள கருத்து கீழே வழங்கப்படுகிறது. மேற்கு வங்க தேர்தல் அறிக்கையில் பாஜக தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாஜக அரசு அமைக்கப்பட்டு முதல் நாளில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த ஒப்புதல் வழங்குவோம் என பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. […]
‘மோடி ஒரு கலவரகாரர்,ட்ரம்பை விட மோசமான நிலையை அடைவார்’ – மம்தா பானர்ஜி விலாசல்!
பிரதமர் நரேந்திர மோடியை “மிகப்பெரிய கலவரகாரர்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும்முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட “இன்னும் மோசமான” விதியை மோடி சந்திப்பார் எனவும் மம்தா தெரிவித்தார். ஹூக்லி மாவட்டத்தின், சஹகஞ்சில் நடந்த பேரணியில் பேசிய பானர்ஜி, மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடு முழுவதும் பொய்களையும் வெறுப்பையும் பரப்புகிறார்கள் என்று கூறினார். “அவர் டி.எம்.சியை ஒரு ‘தோலாபாஜ்’ (மிரட்டி பணம் பறிக்கும்) கட்சி என்று வர்ணிக்கிறார், […]
தாய் உயிரோடு உள்ளதாக எண்ணி அருகே சென்ற குழந்தை குடும்பத்தாருக்கு லாலு பிரசாத் மகன் ரூ. 5 லட்சம் நிதி உதவி ..
நெடுநாள் பசி, தாகம் மற்றும் நீண்ட தூரப் பயணம் காரணமாக நீரிழப்பு ஆகியவற்றால் சில தினங்களுக்கு முன்பு இரயிலில் இறந்த ஒரு பெண்ணை, தாய் இறந்ததை அறியாத குழந்தை எழுப்ப முயலும் காணொலி வெளியாகி கல் நெஞ்சையும் கரைய வைத்தது. குஜராத்திலுள்ள அஹமதாபாத்திலிருந்து பிஹாரிலுள்ள முஸாஃபர்பூருக்கு கடந்த திங்களன்று புலம் பெயர் தொழிலாளிகளுக்கான ஷ்ரமிக் ரயில் மூலம் வந்த அர்பினா காத்தூன் என்ற 35 வயது பெண்மணி மனிதாபிமானமற்ற அரசின் அலட்சியத்தால் பசியால் ஒட்டிய வயிறோடு உயிரை […]
அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை நிறுத்த போராட்டங்கள் கூடாது – உபி முதல்வர் உத்தரவு ..
அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டம் (ESMA)-வை நிறைவேற்றியதன் மூலம் அரசு நிறுவனங்களும், துறைகளும் ஆறு மாத காலத்திற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்துள்ளது அம்மாநில பாஜக அரசு. இதை மீறுவோரை வாரண்ட் இல்லாமலே யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆனந்தி பென் படேல் அவர்களின் ஒப்புதலோடு, கூடுதல் தலைமைச் செயலாளர் முகுல் சிங்கால் அவர்களால் வெளியிடப்பட்ட குறிப்பாணையில் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு கடந்த மாதம் […]
டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.க அஞ்சாது, ஆர்.எஸ். பாரதி கைது குறித்து ஸ்டாலின் கருத்து ..
திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இன்று அதிகாலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர்கள் நீதிபதி ஆக முடிந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சையில் தான் என்ற கருத்துப்பட பேசி இருந்தார். இது சர்ச்சை ஆனதை அடுத்து அதற்கு வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் இது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று அவர் […]
சீமான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு, காரணம் என்ன ?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சீமான் மீது கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில், சனிக்கிழமை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சீமானின் பேச்சு இரு சமூகங்களிடையே வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிட்டதாகவும் அது அரசாங்கத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டபட்டுள்ளது. சீமான் மீது தேச துரோக […]
சத்தியம் தொலைக்காட்சிக்கு ஒரு நீதி பாலிமருக்கு ஒரு நீதியா?- மமக தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி!
📍கொரோனா பாதிப்பு காரணமாக சத்தியம் தொலைக்காட்சி முடக்கப்பட்ட நிலையில் பாலிமர் தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்? என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 📍சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்பட்டுள்ளது. அதேவேளை பாலிமர் தொலைக்காட்சி ஊழியருக்கும் கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்? 📍ஒரு ஊரில் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அந்த ஊரையே முடக்கும் அரசு […]
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக் கருவி எத்தனை வாங்கப்பட்டது, அதன் விலை என்ன ? வெளிப்படை தன்மை வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்..
கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். நாடே உயிர் காக்கப் போராடிவரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.