ஜந்தர் மந்தரில் பிரஹலாத் மோடி போராட்டம்: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார். பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் ஒன்றிய அரசை கண்டித்து ரேஷன் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் டீலர்கள் சங்கத்தின் தலைவராக பிரஹலாத் மோடி உள்ளார். அகில இந்திய நியாய விலைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பின் (AIFPSDF) துணைத் தலைவராகவும் அவர் உள்ளார். பிரதமர் மோடியின் சகோதரர் பேச்சு: […]
Modi
கர்நாடகா: பிரதமர் மோடியின் ஒரு நாள் பயணத்திற்காக ரூ. 23 கோடி செலவு !
கர்நாடகா: பெங்களூருவில் வசிப்பவர்கள் நகரின் சாலைகளின் நிலை குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில், பிபிஎம்பி (ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே) பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, சுமார் 14 கிமீ சாலையை மறுசீரமைக்கவும், பழுதுபார்க்கவும் ரூ.23 கோடி செலவிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பிரதமர் ஜூன் 20, திங்கட்கிழமை பெங்களூர் சென்றார், அப்போது அவர் பல வளர்ச்சி மற்றும் ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பி.பி.எம்.பி சிறப்பு ஆணையர் (திட்டங்கள்) […]
ஜெர்மனி : “மோடி ஆட்சியின் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக” போராட்டத்திற்கு அழைப்பு !
விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் பல ரஷ்யா மீது தடை விதித்து, கண்டனமும் தெரிவித்தது. ஆனால் இந்தியா ரஷ்யா மீது எவ்விதமான தடையும் விதிக்கவில்லை. இந்நிலையில் 48வது ஜி7 மாநாட்டை நடத்த உள்ள ஜெர்மனி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது, அங்குள்ள ஜனநாயக அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்தியா சாலிடாரிட்டி நெட்வொர்க், (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் – என்ஆர்ஐ அமைப்பு) ஜெர்மனியின் […]
‘பிரதமர் மோடி எனக்கு சிறந்த முறையில் கிச்சடி சமைக்க கற்றுக் கொடுத்தார்’ – பாஜக தலைவரின் மனைவி பேட்டி..
உள்ளூர் பாஜக தலைவர் தீபக் சர்மாவின் மனைவி சீமா ஷர்மா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 1997ஆம் ஆண்டு நவராத்திரியின் போது, நான் பிரதமர் மோடிக்கு கிச்சடி சமைத்து கொடுத்தேன், ஆனால் அது அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பின்னர் மோடி எனக்கு எப்படி கிச்சடி உணவு சமைக்க வேண்டும் என்று காட்டினார். சிம்லா: பிரதமர் நரேந்திர மோடியின் சிம்லா பயணத்தின் ஒரு நாள் கழித்து, உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர், 90களின் பிற்பகுதியில் கட்சியின் இமாச்சலப் […]
‘ஆனானப்பட்ட பிரதமர் போய் ஒரு சாமியாரிடம் ஏன் விண்ணப்பம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?’ – ஸ்ரீதர் சுப்ரமணியம்
வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் சுவாமி அவதேஷானந்தா என்ற சாமியாரிடம் பேசி இருக்கிறார். கோவிட் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு கும்ப மேளாவில் மிச்சம் இருக்கும் நிகழ்வுகளை மக்களைக் கூட்டாமல் வெறுமனே சடங்கு-ரீதியாக மட்டுமே செய்து முடித்து விடலாம், என்று பரிந்துரைத்து இருக்கிறார்.அதன் விளைவாக ஜூனா அகாடா எனப்படும் சாமியார்கள் குழு கும்ப மேளாவில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. சுவாமி அவதேஷானந்தாவும் கடைசி நாள் சடங்குகளை சனிக்கிழமையே செய்து முடித்து விடுவதாக அறிவித்து இருக்கிறார். இது நல்ல விஷயம்தான். […]
ஒரு சிறுவனாக நரேந்திர மோடி முதலைகள் நிறைந்த ஏரியில் தினம் நீந்தி வந்தார் – மோடியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் குறிப்பு..
நரேந்திர மோடி 8 ஆம் வகுப்பு மாணவராக இருந்தபோது, முதலைகள் அதிகம் உள்ள குஜராத் ஏரி ஒன்றில் நீந்திக் கொண்டிருந்த சமயம் , முதலையால் தாக்கப்பட்டார், அதனால் அவரது காலில் ஒன்பது தையல்கள் போட வேண்டியதாகிவிட்டது என்கிறது பத்திரிகையாளர் சுதேஷ் கே.வர்மா எழுதிய“நரேந்திர மோடி: தி கேம் சேஞ்சர்” (விட்டாஸ்டா), மோடியின் வாழ்க்கை வரலாறு புத்தகம். ஒரு சிறுவனாக, காலையில் தேநீர் கடையில் வேலை செய்தபின், மோடி தினமும் வாட்நகரில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஷர்மிஷ்டா […]
பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட போது எந்த சிறையில் மோடி வைக்கப்பட்டார்? எப்போது கைது செய்யப்பட்டார்? என ஆர்.டி.ஐ தாக்கல் !
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ளார். தலைநகர் தாக்காவில் பேசிய மோடி தான் பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக பாடுபட்டதாகவும், அதற்காக சிறை சென்றதாகவும் கூறினார். “பங்களாதேஷின் சுதந்திரப் போராட்டம் எனது வாழ்க்கை பயணத்திலும் ஒரு முக்கியமான தருணமாகும் … நானும் எனது சகாக்களும் இந்தியாவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டோம் … அப்போது நான் எனது இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தேன். பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக சத்தியாக்கிரக போராட்டம் நடத்தி நான் சிறையிலும் அடைக்கப்படும் வாய்ப்பை அப்போது பெற்றேன்” […]
பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக சத்தியாக்கிரக போராட்டம் நடத்தி சிறை சென்றேன் – பங்களாதேஷில் பிரதமர் மோடி பேச்சு !
கொரோனா காரணத்தால் ஒரு வருட காலத்திற்கும் மேலாக வெளிநாடு செல்லமுடியாத நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ளார். 50 வது சுதந்திர விழாவை கொண்டாட உள்ள பங்களாதேஷ் நாட்டிற்கு மோடி வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் தனது அரசியல் வாழ்க்கையின் முதல் ஆர்ப்பாட்டங்களில் ஒன்று அண்டை தேசத்தின் சுதந்திரத்திற்காகனது என்று மோடி கூறினார். டாக்காவில் உள்ள தேசிய அணிவகுப்பு மைதானத்தில் பிரதமர் மோடி பங்களாதேஷின் தேசிய தின விழாவில் தனது சக […]
மோடியின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேஷில் போராட்டம்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பங்களாதேஷ் போலீசார் வியாழக்கிழமை ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். தலைநகர் டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்ற போது, பலரும் கற்களை அதிகாரிகள் மீது வீசியதில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர் என்று பொலிசார் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் மட்டுமே 2000 பேர் இணைந்ததாக போராட்டகாரர்களின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். மோடி மத பதட்டங்களைத் தூண்டுவதாகவும், 2002 ல் […]
‘மோடியைப் போன்ற ஒரு பொய்யரை நான் பார்த்ததில்லை. அவர் பொய்களை மட்டுமே பேசுகிறார்’- மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை “பொய்யர்” என்று கூறினார். மேலும் பாஜக மாநிலத்திற்குள் குண்டர்களை அழைத்து வருவதாக குற்றம் சாட்டினார். கடந்த புதன்கிழமை அன்று இவ்வாறு மம்தா பேசி உள்ளார். பிஷ்ணுபூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “நான் பிரதமர் பதவிக்குரியவரை மிகவும் மதித்து வந்தேன், மதிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாமல் இல்லை ஆனால் பிரதமர் மோடியைப் போன்ற ஒரு பொய்யரை நான் பார்த்ததில்லை. அவர் பொய்களை மட்டுமே […]
மோடிக்கு எதிரான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தயாரா ? சிவசேனா கேள்வி!
குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், அக்கடிதத்தின் அடிப்படையில் சட்ட அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தயாரா என்று ஆளும் சிவசேனா செவ்வாய்க்கிழமை பாஜக விடம் கேள்வி எழுப்பி உள்ளது. இதனிடையயே மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளும் சிவசேனா கட்சி செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தது. அதில் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் […]
ஏர் பிரான்ஸ் விமானத்தில் மோடி, மோடி என கோஷமிட்டு வன்முறை செயல்களில் ஈடுபட்ட நபர் கைது !
பாரிஸிலிருந்து புதுடெல்லிக்குச் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் பல்கேரியாவின் சோபியா விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. (1500 ஜிஎம்டி) பல்கேரிய அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். இந்திய குடிமகனான இந்த பயணி, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அத்துமீறலில் ஈடுபட்டார், மற்ற பயணிகளுடன் சண்டையிட்டார், ஒரு விமான பணிப்பெண்ணைத் தாக்கி, காக்பிட்டின் கதவைத் தட்ட ஆரம்பித்தார் என்று தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரி இவிலோ ஏஞ்சலோவ் கூறிகிறார். மோடி, மோடி […]
இடதுசாரிகளின் பேரணி கூட்டத்தை மோடிக்கு கூடிய கூட்டம் என பதிவிட்ட தமிழக பாஜக ட்விட்டர் பக்கம் !
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் பேரணியில் கூடிய கூட்டத்தின் புகைப்படத்தை எடுத்து பிரதமர் மோடியின் பேரணியில் கூடிய பிரமாண்ட கூட்டம் என தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, பிறகு சிக்கிக்கொண்டு அந்த பதிவை நீக்கி உள்ளது பாஜக. இடதுசாரிகள் கடந்த பிப்ரவரி 2019 இல் நடத்திய பேரணியின் புகைப்படத்தை தான் தமிழக பாஜக சுட்டு தங்கள் மோடிக்கு கூடிய கூட்டம் என பொய்யாக சித்தரித்து உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் இது போன்ற கூட்டம் கூடியதே […]
மே.வங்கம்: மோடியின் பேரணியில் கலந்து கொள்வதற்கு 3 ரயில்களை 60 லச்சத்திற்கு புக்கிங் செய்த பாஜக !
இன்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் (படைப்பிரிவு-Brigade Rally) பேரணியில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்களை கொண்டு வந்து சேர்த்திட மூன்று யில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அலிபூர்துர், மால்டா மற்றும் ஹரிச்சந்திரபூரிலிருந்து முன்பதிவு செய்யப்பட்ட இந்த மூன்று ரயில்களை வாடகைக்கு எடுக்க பாஜக ரூ .60 லட்சத்திற்கு மேல் செலவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அலிபுர்துர் மற்றும் மால்டாவிலிருந்து சிறப்பு […]
‘மோடி ஒரு கலவரகாரர்,ட்ரம்பை விட மோசமான நிலையை அடைவார்’ – மம்தா பானர்ஜி விலாசல்!
பிரதமர் நரேந்திர மோடியை “மிகப்பெரிய கலவரகாரர்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும்முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட “இன்னும் மோசமான” விதியை மோடி சந்திப்பார் எனவும் மம்தா தெரிவித்தார். ஹூக்லி மாவட்டத்தின், சஹகஞ்சில் நடந்த பேரணியில் பேசிய பானர்ஜி, மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடு முழுவதும் பொய்களையும் வெறுப்பையும் பரப்புகிறார்கள் என்று கூறினார். “அவர் டி.எம்.சியை ஒரு ‘தோலாபாஜ்’ (மிரட்டி பணம் பறிக்கும்) கட்சி என்று வர்ணிக்கிறார், […]