அஞ்சுமன்-இ-இஸ்லாம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி நடத்தலாம் என அனுமதி அளித்தது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு: ஹுப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் பந்தல் அமைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது. நீதிபதி அசோக் எஸ் கினகி தலைமையிலான பெஞ்ச் இரவு 11.30 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஹுப்பள்ளி மைதானம் தொடர்பாக ‘சொத்து தகராறு ஏதும் இல்லை” […]
Karnataka
ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதித்த உயர்நீதிமன்றம்!
புதுடெல்லி: பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: முஸ்லீம் அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்கக் கோரினார். அப்பகுதியில் தேவையற்ற மத பதற்றம் உருவாக்கப்படுவதாக சிபல் தெரிவித்தார். சுருக்கமான சமர்ப்பிப்புகளைக் கேட்ட உச்ச […]
கர்நாடகா: தலித் சமூகத்தை சேர்ந்தவரை தாக்கிய பஜ்ரங் தள இந்துத்துவாவினர்; தலித் அமைப்பினர் போராட்டம்!
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்திற்குட்பட்ட சக்லேஷ்பூரில் திங்கள்கிழமை, பயங்கரவாத அமைப்பாக விமர்சிக்கப்படும் பஜ்ரங் தள் இயக்கத்தை சேர்ந்தவர்கள், சொந்த மாட்டை கொண்டு சென்று கொண்டிருந்த தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை தாக்கியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பெரும் போராட்டங்கள் வெடித்தன. ஹலசுலிகே கிராம பஞ்சாயத்தின் முன்னாள் துணைத் தலைவரான மஞ்சுநாத், பஜ்ரங் தள் இயக்கத்தினரால் கொடூரமாக ஆக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றிய தகவல் பரவியதையடுத்து, பல தலித் அமைப்புகள் மாவட்டத்தில் போராட்டம் நடத்தின. தலித் அமைப்புகள் போராட்டம்: போராட்டம் வலிமை அடைந்ததை […]
கர்நாடகா: ‘காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் நாம் கற்களை வீசி எறிந்திரிருக்கலாம் ! ‘ – பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா ஆதங்கம் !
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், பாஜகவின் யுவ மோர்ச்சா உறுப்பினர் பிரவீன் நெட்டாருவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாஜகவினர் பொதுச் சொத்துக்களை அடித்து நொறுக்கி இருக்கலாம் என எம்.பி.யும், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவருமான தேஜஸ்வி சூர்யா பேசும் ஆடியோ கிளிப் பரவலாகப் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட அந்த ஆடியோ கிளிப்பில், பாஜக கட்சித் தொண்டர்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ராஜினாமா செய்வதை நிறுத்துமாறு சிக்கமகளூரு […]
கர்நாடகா: தலித் சமூக நூலாசிரியர் எழுதிய புத்தகத்தால், கடும் கோபத்தில் ஆர்.எஸ்.எஸ் !
கர்நாடகாவில் பிரபல தலித் எழுத்தாளரும் ஆர்வலருமான தேவனூர் மகாதேவா ஆர்எஸ்எஸ் பற்றி எழுதியுள்ள புத்தகம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வலதுசாரிகள் இதை ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிரான பிரச்சாரம் என்கிறார்கள். “ஆர்எஸ்எஸ் ஆலா அகலா” (ஆர்எஸ்எஸ், அதன் ஆழமும் அகலமும்) என்ற புத்தகத்தின் விற்பனை கர்நாடக மாநிலத்தில் சாதனை படைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வியாழன் அன்று மகாதேவாவுக்கு ஆதரவாக, “ஆர்எஸ்எஸ் பற்றி அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கருத்து தெரிவித்துள்ளார். நூலை தடை செய்யத்துடிக்கும் வலதுசாரிகள்: இந்நூலை […]
கர்நாடகா: கிறிஸ்தவ குடும்பத்தார் வீட்டிற்குள் புகுந்து பைபிளை எரித்த இந்துத்துவா கும்பல் !
பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மல்லேனு கிராமத்தில் (ஹிரியூர் தாலுகா) செவ்வாய்க்கிழமை மாலை இந்துத்துவாவினர் ஒரு வீட்டுக்குள் புகுந்து பைபிளை தீ வைத்து எரித்துள்ளனர். ஏகாந்தம்மா என்ற 62 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல், வீட்டில் ஏன் பிரார்த்தனை நடத்துகிறீர்கள் என அங்கிருந்தவர்களை மிரட்டி பைபிளை எரித்துள்ளனர். இது குறித்து இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. சித்ரதுர்கா எஸ்.பி., பரசுராமன் கூறுகையில், ” 62 வயதான மூதாட்டி […]
2024 தேர்தலுக்கு பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாக்கப்படும்! – பாஜக அமைச்சர் பேச்சு !
கர்நாடாகா: 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாகும் என்றும், வட கர்நாடகமும் தனி மாநிலமாக மாறும் என்றும் வனம், உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரத்துறையின் பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்தார். புதன்கிழமை பெலகாவி பார் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக அமைச்சர் உமேஷ் , மக்கள்தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 50 புதிய மாநிலங்கள் உருவாகும், பிரதமர் நரேந்திர மோடியின் […]
கர்நாடகா: பிரதமர் மோடியின் ஒரு நாள் பயணத்திற்காக ரூ. 23 கோடி செலவு !
கர்நாடகா: பெங்களூருவில் வசிப்பவர்கள் நகரின் சாலைகளின் நிலை குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில், பிபிஎம்பி (ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே) பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, சுமார் 14 கிமீ சாலையை மறுசீரமைக்கவும், பழுதுபார்க்கவும் ரூ.23 கோடி செலவிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பிரதமர் ஜூன் 20, திங்கட்கிழமை பெங்களூர் சென்றார், அப்போது அவர் பல வளர்ச்சி மற்றும் ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பி.பி.எம்.பி சிறப்பு ஆணையர் (திட்டங்கள்) […]
தலித் எழுத்தாளர்கள் நீக்கம், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சேர்ப்பு; காவிமயமாக்கப்பட்டுள்ள கர்நாடக பாடப்புத்தக மாற்றங்களின் முழு பட்டியல்!
கர்நாடகா : மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளான விநாயக் சாவர்க்கர் மற்றும் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் பாடங்கள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அசர்ச்சைக்குரிய வலதுசாரி சொற்பொழிவாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களுக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள முற்போக்கு குழுக்கள் ஏன் போராடுகின்றன? இந்த நூல்களில் எந்தெந்தப் பிரிவுகள் திரிக்கப்பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதிகள் காவி மையமாக்கப்பட்டுள்ளன, எந்த முற்போக்குக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன? சர்ச்சை தொடங்கியதில் இருந்து முதன்முறையாக, […]
தலித் எழுத்தாளரின் கவிதையை பாடப்புத்தகங்களில் இருந்து கைவிட கர்நாடகா பாஜக அரசு முடிவு!
கர்நாடகாவில் பாடநூல் திருத்தம் தொடர்பான சர்ச்சை தொடர் கதையாகி உள்ளது. சூரியனும் சந்திரனும் கடவுள் இல்லை என கூறும் பிரபல தலித் எழுத்தாளர் ஒருவரின் கவிதையை கைவிட ஆளும் பாஜக உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சித்தலிங்கய்யாவின் “பூமி” கவிதையை நான்காம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கி கர்நாடக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத உணர்வுகளை புண்படுத்தியதாக கவிதைக்கு எதிராக எழுந்த புகார்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை […]
கர்நாடகா: தலையில் தொப்பி அணிந்ததற்காக முஸ்லீம் மாணவரை தாக்கிய போலீசார்; பள்ளியில் அனுமதிக்க மறுத்த முதல்வர் !
பாகல்கோட்: கர்நாடகாவில் கல்லூரி வளாகத்தில் தலையில் தொப்பை அணிந்ததற்காக மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறி முதல்வர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 பேர் உட்பட 7 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். உள்ளூர் பனஹட்டி ஜே.எம்.எஃப்.சி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள தெரடாலா காவல் நிலையத்தால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நவீத் ஹசன் சாப் தரதாரி என்ற கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]
திப்பு சுல்தானின் அரண்மனை கோவில் நிலத்தில் கட்டப்பட்டதாம் !
கர்நாடகாவில் உள்ள திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை கோவில் நிலத்தில் கட்டப்பட்டது என இந்துத்துவா அமைப்பு கூறியுள்ளது. நிலத்தின் உரிமையை கோவிலுக்கு மாற்ற வேண்டும் என இந்து ஜனஜக்ருதி சமிதி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது. கர்நாடகாவின் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள 18ஆம் நூற்றாண்டின் மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானுக்குச் சொந்தமான கோடைகால அரண்மனை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறி, அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பினர் வியாழக்கிழமை கோரியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. […]
கர்நாடகா: 800 ஆண்டு பழமையான பள்ளிவாசலை சொந்தம் கொண்டாட முயலும் விஎச்பி ..
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றாக அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் வரிசையில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மங்களூருவின் மலாலியில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலின் வளாகத்தில் ‘தாம்பூல பிரஸ்னா’ என்ற வெற்றிலை ஜோதிட முறையை மே 25 அன்று மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. கோயில் ஆக்கிரமிப்புக்குப் பிறகு மசூதி கட்டப்பட்டதா என கேரளாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரை அணுகி ‘தாம்பூல பிரஸ்னா’ (வெற்றிலை ஜோசியத்தின்) மூலம் ஆய்வு (!) செய்ய திட்டமிட்டுள்ளதாக விஎச்பி வட்டாரங்கள் தெரிவித்தன. […]
‘கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் தொழுகை’ என வெறுப்பு வீடியோவை வெளியிட்ட வலதுசாரி ஊடகம் மீது புகார்!
கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலக அறை ஒன்றினுள் இரண்டு பெண்கள் தொழுகை ஈடுபட்டுள்ளதை அத்துமீறி வீடியோ பதிவு செய்து அதனை வெளியிட்ட வலதுசாரி சமூக ஊடகச் சேனலின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளளர். ‘சம்வதா’ சேனலுக்கு எதிராக விதான் சவுதா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்தவர் என்.ஜி.தினேஷ். இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 447 (கிரிமினல் அத்துமீறல்) மற்றும் 505-(2)ன் (வகுப்புகளுக்கு இடையே பகை, வெறுப்பு அல்லது தவறான […]
ஹிஜாப் விவகாரம் :’இரண்டு நாட்கள் காத்திருங்க..’ – தலைமை நீதிபதி!
ஹிஜாப் வழக்கு மேல்முறையீடுகளை இரண்டு நாட்களில் விசாரணைக்கு எடுத்து கொள்ள இந்திய தலைமை நீதிபதி திங்கள்கிழமை ஒப்புக்கொண்டார். “நான் விசாரணைக்கு பட்டியலிடுகிறேன். இரண்டு நாட்கள் காத்திருங்கள்” என ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசரமாக பட்டியலிட வேண்டும் என்று கோரிய மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோராவிடம் தலைமை நீதிபதி ரமணா கூறினார். 05.02.2022 தேதியிட்ட அரசாணையை நிலைநிறுத்தி, கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய மார்ச் 15 தேதியிட்ட தீர்ப்புக்கு […]