#முஸ்லிம் ஒருவர் உணவு கொண்டு வருவதால் #சோமாட்டோ வில் ஆர்டரை ரத்து செய்த மோடி ஆதரவாளர் பண்டிட் ஷுக்லா கடுமையான விமர்சனங்களை சமாளிக்கமுடியாமல் , தற்போது #ட்விட்டரில் தனது கணக்கை மூடி உள்ளார். இதற்கு காரணம் அவரின் பிரிவினை தூண்டிய ட்வீட் மட்டும் அல்ல மாறாக அவர் ஒரு பெண்ணின் மார்பு குறித்து அருவருக்க தக்க வகையில் கமெண்ட் செய்தது வைரல் ஆனதும் தான் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். https://twitter.com/namo_sarkaar #zomato #Shukla #twitterAccountDeactivated #Women
Islamophobia
முஸ்லிம் உணவு கொண்டு வருவதால் உணவை கேன்சல் செய்த மோடி ஆதரவாளர்-சோமேடோ நிறுவனம் “பளார்” பதிலடி!
மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சேர்ந்த பண்டிட் அமித் சுக்லா, கடுமையான மோடி ஆதரவாளர். இவர் தனது ட்விட்டர் யூசர் நேமாக வைத்துள்ளதும் @NaMo_SARKAAR என்பது தான். மேலும் இவரின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக மட்டுமே பல்வேறு பதிவுகள் உள்ளன, அதிலும் பெரும்பான்மை பொய் (fake news ) செய்திகளாக உள்ளன. உதாரணமாக .. உதாரணமாக இவரின் இந்த ட்வீட். இதில் உண்மை செய்திகளை பொய் என்று மறுத்து பதிவு செய்துள்ளார். குறிப்பு : […]
சந்தேகித்தின் பெயரால் அழைத்து செல்லப்பட்ட ஜமீலின் விரல்கள் உடைக்கப்பட்டு,நகங்கள் பிடுங்கப்பட்டு , வாயில் மின்சாரம் செலுத்திய போலீஸ் ! -அதிர வைக்கும் சம்பவம்
உபி மாநில பஹ்ரைச் (Bahraich) நகரில் குற்றச்சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அழைத்து சென்ற (SOG) போலீஸார் ஜமீல் அஹமதை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். ஜமீலின் விரல்கள் உடைக்கப்பட்டு,நகங்கள் பிடுங்கப்பட்டு , வாயில் மின்சாரம் செலுத்தப்பட்டு கடுமையான சித்திரவதை செய்துள்ளனர்.இதை ஜூலை 22 ஆம் தேதி அபய் சிங் ரத்தோர் என்ற ஊடகவியலாளர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.இந்த செய்தி நாம் அறிந்தவரை வேறு எந்த ஊடகத்திலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது தற்போது KGMU மருத்துவமனையில் […]
என்.ஐ.ஏ கைது செய்திருந்த 4 முஸ்லிம் வாலிபர்கள் தீவிரவாதிகள் இல்லை -ஆதாரமில்லாததால் விடுதலை !
NIA அமைப்பு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து கைது செய்து வருவது குறித்து பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்யப்பட்ட 4 சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த நபர்கள் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது இருந்த வழக்கை தேசிய புலனாய்வு (NIA ) அமைப்பு வாபஸ் பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் பயங்கரவாத செயலை நடத்த திட்டம் தீட்டியதாகவும், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை […]
ரூ.128 கோடி மின் ரசீது! ஷமீம் வீட்டில் இருப்பதோ ஒரு ஃபேன் லைட் மட்டுமே !
உபி மாநில ஹபூர் மாவட்டம், சாம்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷமிம்(வயது80). இவர் தன் மனைவி கைரு நிஷாவுடன் வசித்து வருகிறார்.ஷமிம் ஒரு கூலி தொழிலாளி. இவரின் சிறிய வீட்டில் 1 சிறிய டிவி , 1 மின்விசிறி, 2 டியூப் லைட்டுகளும் மட்டுமே இருக்கிறது.மாதந்தோறும் ரூ.700க்கு மேல் மின்கட்டணத்தை ஷமிம் செலுத்தியதில்லை. இந்நிலையில், கடந்த மாதம் மின்கட்டணமாக ஷமிமுக்கு மாவட்ட மின்வாரியத்தில் இருந்து வந்த நோட்டீஸைப் பார்த்த ஷமிம் அதிர்ச்சி அடைந்தார். ஷமிம் 2 கிலோவாட் (kw […]
மகாராஷ்டிராவில் இயல்பாக நடந்த வாகன விபத்தை மத கலவரமாக்கிய விஷமிகள் !
ஜூலை 18 ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் அஹ்மத்நகரில் ஒரு பைக் மற்றும் டிரக் மோதி கொண்டதில் விபத்து ஏற்படுகிறது. விபத்தில் சிக்கிய ஒருவர் தன் துணைக்கு இந்து யுவ வாகினி என்ற அமைப்பினரை தன் உதவிக்கு அழைக்கிறார். அவர்கள் அங்கு வந்து கல்வீச்சில் ஈடுபடத் துவங்குகின்றனர். போர்க்களம் போல் மாறிய அப்பகுதி சற்று நேரத்தில் ஒரு மதக்கலவரமாக ஆகி விடுகிறது. கடைகள் வாகனங்கள் என அனைத்தும் சூறையாடப்படுகின்றது. அங்கு உள்ள மக்களுக்கு கடும் பொருளாதார இழப்பு […]
இந்து மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தி சித்திரவதை, அஷ்ரப் அலி மற்றும் அவரது குடும்பத்தினர்- போலீசில் புகார்.
அஷ்ரப் அலி என்பவர் தில்லியில் உள்ள ரோஹிணி செக்டர் என்ற பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு ஃபிளாட்டை வாங்கியுள்ளார்.குடிபெயர்ந்த முதல் இரண்டு மூன்று மாதங்கள் நிம்மதியாக இருந்த இவர் அதன் பின்னர் அப்போதிலிருந்து இன்று வரை 4 வருடங்களாக கடுமையான மன உளைச்சலுக்கும் பல்வேறு தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்.இதற்குக் காரணம் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கிஷன் லால் என்பவரும் அவரது மகனும் தான் என்று ஆஷ்ரப் அலி கூறுகின்றார். கிஷன் லால் மற்றும் […]
கும்பல் வன்முறை (Lynching ) தாக்குதலில் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு உதவும் வகையில் ஹெல்ப்லைன் 1800-3133-60000 அறிவிப்பு!
இந்தியாவில் சமீப காலமாக கும்பல் வன்முறைகளும், காட்டுமிராண்டி தாக்குதலைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இதை எதிர் கொள்ளும் விதமாக சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கும் , இவ்வாறான கும்பல் வன்முறை தாக்குதல்களை ஆவணப்படுத்துவதற்கும் ஒரு உதவித் தொலைபேசி எண்ணை ( ஹெல்ப்லைனை) அறிமுகப்படுத்திஉள்ளனர். தொடர் கும்பல் வன்முறை சம்பவங்களைத் தடுக்க இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசுகள் தவறியதால் இந்த முயற்சி தேவைபடுகிறது என்று இந்தியா முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் (United […]
“இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது” பிரதமர் பேச்சுக்கு முரணாக NIAவின் “மோஸ்ட் வாண்டட்” தீவிரவாத குற்ற பட்டியலில் இந்துக்கள் பெயர் பட்டியல்!
“ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது” என்ற பிரதமர் மோடியின் கருத்து தேசிய தீவிரவாத தடுப்பு புலனாய்வு பிரிவான என்ஐஏவின் கூற்றுக்களுடன் பொருந்துவதாக இல்லை. பயங்கரவாத தொடர்பான வழக்குகளில் ‘மோஸ்ட் வாண்டட்’ என்பதற்கான ஒரு பகுதியை என்ஐஏ வலைத்தளம் கொண்டுள்ளது, இதில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு மதங்களைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முஸ்லீம் பெயர் தாங்கிகளை ஒப்பிடும்போது மாவோயிஸ்டுகள் மற்றும் சிவப்பு கிளர்ச்சியாளர்கள் என்று அறியப்பட கூடிய […]
பள்ளிவாசல் இமாமின் தொப்பியை கழற்றி எரிந்து ,தாடியை பிடித்து இழுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கிய கோழை குண்டர்கள் -உபி மாநிலத்தில் தொடரும் காட்டுமிராண்டித்தனம் !
முசாபர்நகரில் பள்ளிவாசல் இமாமாக பணி புரிபவர் இம்லாக்-உர்-ஹ்மான். இவர் தனது கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரை நெருங்கிய குண்டர்கள் , தொப்பியை கழற்றி எரிந்து , கடுமையாக அவரை தாக்கி, தாடியையும் பிடித்து இழுத்துள்ளனர். பள்ளிவாசல் இமாமின் தாடியை பிடித்து இழுத்து, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தி தாக்கியதர்காக 12 பேர் மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக PTI தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை(13.7.19) முசாபர்நகர் மாவட்டத்தில் இமாம் தனது மோட்டார் […]
இங்கிலாந்து செல்லும் விமானத்தில் சக முஸ்லிம் பயணிகளை “பயங்கரவாதிகள்” என்று கூறி, மற்ற பயணிகளையும் வசை பாடியதால் 2 பெண்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்
துருக்கியில் இருந்து கேட்விக் செல்லும் தாமஸ் குக் விமானத்தில் இருந்து இரண்டு பெண்கள் வெளியேற்றப்பட்டனர். அவ்விருவரும் வெள்ளை நிற நீள ஆடையுடன் இருந்த மூன்று முஸ்லீம் ஆண்கள் “பயங்கரவாதிகள்” என்றும் விமானத்தின் பாதுகாப்பிற்கு “அச்சுறுத்தல்” என்றும் கூச்சலிட்டதாக மற்ற பயணிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் டால்மானில் இருந்து கேட்விக் செல்லும் விமானம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. சம்பவ வீடியோவை காண விமானத்தில் இருந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மரியோ வான் பாப்பல் என்ற பயணி […]
சீன அரசின் முஸ்லிம்களின் மனித உரிமை மீறல்களை ஆதரிக்கும் விதமாக முஸ்லிம் நாடுகள் ஐநா.வில் அறிக்கை!
சீனாவில் ஜின்ஜியாங் என்ற மேற்கு மாகாணத்தில் வீகர் (uighur)இன முஸ்லிம் குழந்தைகள் அவர்களுடைய குடும்பங்கள், மத நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றிலிருந்து பிரிக்கப்படுகிறார்கள் என்று ஒரு புலனாய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டது.இது குறித்து bbc செய்தி நிறுவனமும் பிரசுரித்திருந்தது. தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 20 லட்சம் வரையிலான சீன முஸ்லிம்கள் இஸ்லாத்தை கைவிடுமாறும், பன்றி இறைச்சி உண்ணவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். மஸ்ஜித்களுக்கு செல்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஹஜ் கடமையை நிறைவேற்றுவது என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன .கம்யூனிஸ […]
“ஜம் ஜம் நீரை கொண்டு வரலாம்- எதிர்ப்பு வலுத்ததால்-“ஏர் இந்தியா”அறிவிப்பில் மாற்றம்!
ஹஜ் புனித பயணத்தின் போது மெக்காவில் இருந்து ஜம் ஜம் நீரை எடுத்து வருவதை உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் .கடந்த ஜூலை 4 ம் தேதி பயண முகவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு குறிப்பின்படி , “ஏர் இந்தியாவின் ஜித்தா விற்பனைக் குழு AI966 (ஜித்தா / ஹைதராபாத் / மும்பை) மற்றும் AI964 (ஜித்தா – கொச்சின்) விமானங்களில் ஜம் ஜம் நீர் கேன்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது” என்று தெரிவித்து இருந்தது. […]
ஏர் இந்தியா தனது ஹைதராபாத், மும்பை மற்றும் கொச்சின் விமானங்களில் ஜம்ஜம் நீர் எடுத்து செல்வதை தடை செய்துள்ளது.
Published 08-07-2019 22:23 PM உடனடியாக அமல்படுத்தும் வகையில் இந்தியாவின் தேசிய விமான சேவையான ஏர் இந்தியா பயணிகள் ஜம் ஜம் நீர் கேன்கள் எடுத்து செல்வதை அதன் சில விமானங்களில் தடை செய்துள்ளது. இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லும் இறுதியான தேதியான செப்டம்பர் 15 வரை இந்தத் தடை நீடிக்கிறது. ஜூலை 4 ம் தேதி பயண முகவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு குறிப்பின்படி , “ஏர் இந்தியாவின் ஜித்தா விற்பனைக் […]
மசூதிக்குள் நுழைய இஸ்லாமிய பெண்களுக்கு தடை: இந்து மகாசபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
Published Jul 8, 2019 19:11 pm ♦♦இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைய இருக்கும் தடையை நீக்க கோரி அகில பாரத் இந்து மகா சபை சார்பில் அவ்வமைப்பின் கேரளா தலைவர் ஸ்வாமி சாய் ஸ்வரூப் நாத் என்பவரால் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்து மகா சபாவிற்கு கடும் பின்னடைவாக ஆகியுள்ளது. ♦♦ பாதிக்கப்படுபவர்கள் வந்தால் தான் இதுபோன்ற வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியும் என்றும், சம்பந்தம் இல்லாத நபர்கள் வழக்கு […]