ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவின் மக்கள்தொகை சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுவது இது முதல்முறை அல்ல. ரஷ்யாவில் இதற்கு முன்னர் 1940களிலும் மக்கள்தொகை பெருக்கத்தை உண்டு பண்ண இந்தத் திட்டம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
International News
பாலஸ்தீனம்: அல் அக்ஸா பள்ளிவாசல் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேலிய பொலிசார் சோதனை நடத்தினர், அடுத்தடுத்த நிகழ்ந்த வன்முறையில் குறைந்தது 152 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிகாலை தொழுகைக்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மசூதியில் கூடியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை விடியும் முன்பே இஸ்ரேலிய போலீசார் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்ததாக பள்ளியை நிர்வகிக்கும் இஸ்லாமிய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய போலீசார் தாக்குதல்: ஆன்லைனில் பரவும் வீடியோக்கள் இஸ்ரேலிய போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ஸ்டன் […]
ஏர் பிரான்ஸ் விமானத்தில் மோடி, மோடி என கோஷமிட்டு வன்முறை செயல்களில் ஈடுபட்ட நபர் கைது !
பாரிஸிலிருந்து புதுடெல்லிக்குச் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் பல்கேரியாவின் சோபியா விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. (1500 ஜிஎம்டி) பல்கேரிய அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். இந்திய குடிமகனான இந்த பயணி, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அத்துமீறலில் ஈடுபட்டார், மற்ற பயணிகளுடன் சண்டையிட்டார், ஒரு விமான பணிப்பெண்ணைத் தாக்கி, காக்பிட்டின் கதவைத் தட்ட ஆரம்பித்தார் என்று தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரி இவிலோ ஏஞ்சலோவ் கூறிகிறார். மோடி, மோடி […]
இந்திய எல்லைக்குள் சீனா – இரவு நேரத்தில் செயற்கை துளை ரேடார் (எஸ்ஏஆர்) மூலம் எடுக்கப்பட்ட படங்களில் அம்பலம் ..
இரவில் வானொலி அலைகளை ஒளிரச் செய்வதன் மூலம் சீன நிரந்தர இடுகையின் செயற்கை துளை ரேடார் (எஸ்ஏஆர்) படங்கள் உருவாக்கப்படுகின்றன, இதன் மூலம் ஆதிக்க எல்லைக்கோட்டில் (எல்.ஏ.சி) சீனா இன்னமும் கூடுதல் படைகளை குவித்து வருவதை அறிந்து கொள்ள முடிகிறது. லடாக்கில் இந்தியாவின் மிக உயர்ந்த வான்வழிப் பகுதியான டவுலட் பெக் ஓல்டி (டிபிஓ) க்கு எதிரே சுமார் 24 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பி.எல்.ஏ இன் தியான்வெண்டியன் இடுகையே அக்சாய் சினில், அனைத்து பருவகால இடுகையாகும். […]
சிரியாவிற்கு 2000டன் அரிசியை வழங்கும் இந்திய அரசு..
சிரியா நாட்டில் உள்நாட்டு போர் , வன்முறைகள், உள்நாட்டு குழப்பம் என தொடர்வதால், அந்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் கடும் ஏழ்மையில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா சிரியாவிற்கு 2,000 மெட்ரிக் டன் அரிசியை வழங்க முன்வந்துள்ளது. சிரியா நாடு, இந்திய அரசிடம், அவசரகால மனிதாபிமான உதவி கோரியதன் அடிப்படையில் இந்த அரிசி வழங்கப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1000 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது: சிரியாவின் உள்ளூர் நிர்வாக […]
இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள சீனா; நடவடிக்கை எடுக்குமா மோடி அரசு ?
சிக்கிம் மற்றும் லடாக் எல்லை பகுதிகளில் சீனா அத்துமீறி வருகிறது. இந்த நிலையில் லடாக்கின் வடக்கு பாங்கோங் த்சோ பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தியா சாலை பணிகளில் ஈடுபட்டிருந்தது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இன்னொரு பக்கம் கடந்த சனிக்கிழமை வடக்கு சிக்கிமின் நாகூலா பகுதியில் இந்திய – சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு காயமடைந்தனர். அன்று முதல் எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவி […]
சவுதி அரேபியா: முஸ்லீம் அல்லாத இந்தியரை இழிவுபடுத்திய சவுதி பிரஜை கைது..
சவுதி அரேபியாவில் வசித்துவரும் முஸ்லிமல்லாத இந்தியர் ஒருவரை அந்நாட்டு குடிமகன் ஒருவர் கடுஞ் சொற்களைக் கொண்டு வசைபாடி உள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளியில் சவுதி குடிமகன் ஒருவர் இந்தியர் ஒருவரை இழிவாக பேசி, நீ ஏன் முஸ்லிமாக இல்லை, நீ ஏன் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க வில்லை என முட்டாள்தனமாக ஏசி பேசுவதைக் காண முடிகிறது. இந்த வீடியோ வைரலாலானதை தொடர்ந்து, ‘இது குறித்து விசாரணையை துவக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்திற்கு அழைப்பு விடுக்கிறேன் என்ற […]
கனடா: முஸ்லிம் வெறுப்பு கருத்தை பதிவிட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்..
அரபு நாடுகளிலேயே வசித்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களை தொடர்ந்து செய்துவரும் காரணத்தால் அரபு நாடுகளில் பல்வேறு பாசிஸ்டுகள் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி உள்ள நிலையில், தற்போது கனடாவிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்லாமிய வெறுப்பை கக்கிய ஒருவர் வேலை இழந்துள்ளார். வட அமெரிக்க நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆர்.இ மேக்ஸ் க்கு சொந்தமான பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்த ரவி ஹூடா என்பவரை அந்நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. ரவி […]
இந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் – அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை!
அமெரிக்காவின் மத சுதந்திரத்திற்க்கான ஆணையம் (USCIRF) நேற்று தனது ஆண்டறிக்கையை (Annual Report) வெளியிட்டது. இதில் இந்தியாவில் முஸ்லீம்கள் பி.ஜே.பி அரசால் மிகவும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என்று பல்வேறு நிகழ்வுகளை சுட்டி காட்டி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தப்ரேஸ் அன்சாரி கொலையை சுட்டி காட்டி “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற பெயரில் கொலைகள் நடப்பது டெல்லியில் CAA போராட்டத்திற்க்கு எதிராக திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டது மாட்டின் பெயரால் 100-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் […]
இந்தியாவுடனான ஐக்கிய அரபு அமீரகத்தின் நல்லுறவு பாழாகிறதா ? இந்திய தூதரே விளக்கம் அளிக்கும் நிலை ..
அரபு நாடுகளில் தங்கி வேலை பார்த்துக் கொண்டு அங்கேயே சம்பாதித்து அதில் வாழ்ந்து வரும் பல இந்துத்துவாவினர் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் அரபிகளுக்கு எதிராகவும் மிகவும் மோசமான கீழ்த்தரமான வெறுப்பு பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இத்தனை நாட்களும் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருந்த அரபுலக மக்கள் தற்போது விழித்தெழ துவங்கியுள்ளனர். இதன் விளைவாக அரபுலக பிரமுகர்கள், அரசு குடும்பத்தார், தொழிலதிபர்கள் என பலரும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்கள், இஸ்லாமோஃபோபியா மற்றும் மத வெறுப்பு […]
இங்கிலாந்து: கிருஷ்ணா பக்தர்களின் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 21 பேருக்கு கொரோனா; ஐவர் உயிரிழப்பு !
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயை எதிர்த்து உலகமே போராடி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கிருஷ்ணா பக்தர்களின் அமைப்பான இஸ்கான் (கிருஷ்ண உணர்வுக்கான சர்வதேச அமைப்பு) அமைப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்கானின் இங்கிலாந்து பிரிவு 15,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மார்ச் 12 அன்று சோஹோ, லண்டனில், இஸ்கான் உறுப்பினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் […]
‘இந்தியா மிகப் பெரும் இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது’ – கிரிகரி ஸ்டாண்டன்
இந்தியா மிகப் பெரும் இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 12 ம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் “காஷ்மீர் மற்றும் என்.ஆர்.சி பற்றிய களநிலவரம்” என்ற தலைப்பில் ஒரு மாநாட்டில் ஜெனோசைட் வாட்சின் நிறுவனர் டாக்டர் கிரிகோரி ஸ்டாண்டன் உரையாற்றினார். அசாம் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர் வன்முறைகளை கட்டவிழ்த்து விடப்படுவதை சுட்டி காட்டிய அவர், இந்த இரண்டு மாநிலங்களிலும் முழுமையான ஒரு இனஅழிப்பு […]
அமெரிக்க அதிபருக்காக மோடி அரசு கட்டி வரும் சுவர்..
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் பிப்ரவரி 24 அன்று இந்தியா வர உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் ட்ரம்பின் விமானம் தரையிறங்க உள்ளது. அவருக்காக சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை இந்திரா பாலத்துடன் இணைக்கும் சாலையில் ஒரு சுவரைக் கட்டி வருகிறது ,அஹமதாபாத் மாநகராட்சி (ஏ.எம்.சி). ஏன் என்கிறீர்களா? இந்த 600 மீட்டர் நீளம் கொண்ட பகுதியில் சேரி மக்கள் வசிக்கின்றனர். சேரி பகுதி அமெரிக்க அதிபரின் கண்களுக்கு படாமல் இருப்பதற்க்காக தான் மோடி அரசு அவசர […]
சீனாவை தொடர்ந்து சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் நோயாளிகள் அதிகரிப்பு ..
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால் இதுவரை 812 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 37,226 பேருக்கு நோய் தோற்று ஏற்பட்டுள்ளதும் உறுதி செய்துள்ளது அந்நாட்டு அரசு. தற்போது சீனாவை தொடர்ந்து அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நாடு ஜப்பான், அதற்கு அடுத்த இடத்தில உள்ளது சிங்கப்பூர் என்று தெரியவந்துள்ளது. இது வரை சிங்கப்பூரில் 33 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்நாட்டு அரசு “ஆரஞ் அலர்ட்டை” அறிவித்துள்ளது. வைரஸின் தாக்கம் வலிமையானது […]
“எந்த ஒரு நடவடிக்கை எடுக்கும் முன் மறுபரிசீலனை செய்யுங்கள்” – ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு மோடி அரசு அறிவுறுத்தல் !
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் 751 உறுப்பினர்களில் 626 பேர் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மீதான கடும் கட்டுப்பாடுகள் குறித்து ஆறு தீர்மானங்களை முன்வைத்துள்ளனர். மோடி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் “பாரபட்சமானது” , “அபாயகரமான பிரிவினையை” ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டம் என கூறி 5 பக்கங்கள் கொண்ட தீர்மானம் ஐரோப்பா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின. இது மோடி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து “எந்தவொரு நடவடிக்கையும் […]