ஐஐடியில் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு காரணமான பேராசியர் சுதர்சன் பத்மநாபனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்ற கேள்வி சமூக வளைதளங்களில் வலுத்து வருகிறது. கடந்த வாரம் சென்னை வந்திருந்த பாத்திமா வின் தந்தை அப்துல் லத்தீஃப் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்தார். பாத்திமாவின் மொபைல் ஃபோனை கொல்லம் காவல்நிலையத்தில் அவரது தங்கையான ஆயிஷா பயன்படுத்திய சிசிடிவி காட்சிகள் இருக்கின்றன. எனவே பாத்திமா எழுதிய கடிதங்கள் குறித்து சந்தேகம் இருப்பதாகவும், சுதர்சன் பத்மநாபனை […]
Hindutva
‘IIT பேராசிரியர் சுதர்சன் ஒரு இந்துத்துவ வெறியர்’ – செந்தில் வாசன் !
டிவிட்டரில் #Senthil Vasan M அவர்கள் போட்ட பதிவு தமிழில்.. 1. நண்பர்களே, இதுவொரு நன்கு திட்டமிடப்பட்ட இன அழிப்பு போல தெரிகிறது. IIT பேராசிரியர் சுதர்சன் என்பவர் யார்? அவரது செயல் திட்டங்கள் என்னென்ன? என்பதை குறித்து சில தரவுகளை நான் ஆராய்ந்து வந்தேன். சந்தேகமேயில்லாமல் அவர் ஒரு இந்துத்துவ வெறியர். 2. 2006ல் இருந்து இந்த வீடியோ வெளிவந்த டிசம்பர் 2017 வரை இந்நபரின் பணிகளை நான் ஆய்வு செய்திருக்கிறேன். இவர் ஒரு தாராளவாதியாகவோ (அல்லது தனது […]
ஃபாத்திமாவிற்கு ஆதரவாக ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்!
நான் ஒரு ஐஐடி மெட்ராஸின் மாணவன். எனது கல்வி வளாகம் வரு ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைகூடம். மிக முக்கியமாக அது இஸ்லாமோபோபியாவை கடைபிடிக்கிறது. நவம்பர் 8ம்தேதி ஐஐடி மெட்ராஸில் முதலாமாண்டு எம்.ஏ மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். (நானும் அந்த துறையைச் சார்ந்தவன் தான்). இந்த கல்வி வளாகத்தின் அலட்சியம் குறித்தும் அதன் இயல்பான ஆதிக்க தன்மை குறித்தும் குறிப்பாக இங்குள்ள மாணவர்கள் குறித்தும் […]
சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் தாயின் குமுறல்!
எங்களுக்கு பெண் பிள்ளையை வெளியூரில் உள்ள கல்விக்கூடத்திற்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது. முதலில் அவளுக்கு பனாரஸில் […]
முஸ்லிம் ஆசிரியர் நியமனம்: மாணவர்கள் போராட்டம்!
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU ) சமஸ்கிருத வித்யா தர்ம் விஜியன் (SVDV) இலக்கியத் துறையில் ஒரு முஸ்லிம் உதவி பேராசிரியரை நியமித்தது கடும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது . வியாழக்கிழமை (7-11-19) முதல் வர்சிட்டி வளாகத்தில் உள்ள துணைவேந்தர் இல்லத்திற்கு அருகிலுள்ள ஹோல்கர் பவனில் ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் துறையின் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை நோக்கி கவனத்தை ஈர்க்க இசைக்கருவிகள் வாசித்தனர். ‘இந்து அல்லாதவர்’ நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் […]
பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் மாடுகளை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு ரத்து; உயர்நீதிமன்றம் தீர்ப்பு !
பசு காவலர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் ஒரு தீவிரவாத கும்பல் கடந்த 2017ம் ஆண்டு பெஹ்லு கானை கொடூரமாக அடித்தே கொலை செய்தது. பெஹ்லு கான் இறுதி வாக்குமூலமாக , மரண தருவாயில் யார் மீது குற்றம் சுமத்தினாரோ அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும் முறையாக ஆவணங்களுடன் மாட்டை கொண்டு சென்ற மாட்டு பண்ணை விவசாயிகளான பாதிக்கப்பட்ட பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் மீதே பாஜக ஆட்சியில் இருந்த சமயத்தில் மாட்டை கடத்தியதாக வழக்கு […]
முஸ்லிம்களை குறிவைத்து குடியுரிமை சட்டம் மற்றும் என்ஆர்சி – அமெரிக்க அரசு கண்டனம் !
அமெரிக்காவில் கடந்த அக்டோபர் 22 அன்று (பிரதிநிதிகள் சபையில்) தெற்காசியாவில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் முஸ்லிம்களை தவிர உள்ள பிற மத அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் மசோதா மற்றும் என்.ஆர்.சி அமல் படுத்தப்படும் விதம் குறித்து அமெரிக்க அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. இது சமூகத்தை பிளவு படுத்தும் ஒரு முயற்சி என்றும் ஒருவரின் மதத்தின் பெயரால் ஒருவருக்கு குடியுரிமை மறுக்கப்படுவது என்றும் கூறி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆளும் அரசாங்கம் இந்திய […]
கல்வி கூடங்களில் மத செய்லபாடுகளா ?மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!
கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மதவாதிகளின் செயல்பாட்டை அதிமுக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மூடி மறைப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ”தமிழகப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி போன்ற மத அமைப்புகள் மாணவர்களிடத்தில் மதத்தைப் போதிப்பதற்கும், இதிகாசங்கள், வரலாறுகளை மத அடிப்படையில் போதிப்பதற்கும், சாதி, மதம் கடந்து மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் நேசிப்பதைத் தடுப்பதற்கும் ஒவ்வொரு பள்ளி, […]
இந்துத்துவ தலைவர் கமலேஷ் திவாரியை கொலை செய்தவர்கள் யார்?
உத்தரப்பிரதேசம்: வெள்ளிக்கிழமை பிற்பகல் லக்னோவின் நாகா பகுதியில் கமலேஷ் திவாரி (43) எனும் இந்துத்துவ, இந்து சமாஜ் கட்சித் தலைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,எனினும் தமிழக அளவில் இதை குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்படவில்லை. கொலை செய்யப்பட்ட கமலேஷ் நபிகள் நாயகம் அவர்களை குறித்து (2015 ஆண்டில்) கீழ்த்தரமாக பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது பட்டிருந்தவர். எனினும் யோகி ஆட்சி வந்த பிறகு […]
பாபர் பள்ளி விவகாரத்தில் ‘செட்டில்மென்ட்’ செய்து கொண்டதா வக்ஃப் வாரியம்.? – உண்மை நிலவரம் என்ன ?
கடந்த இரு தினங்களாக பாபர் பள்ளி விவகாரத்தில் சுன்னி வக்ஃப் வாரியம் இந்துத்துவ தரப்புடன் செட்டில்மென்ட் செய்து கொண்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. அதே சமயம் இது தொடர்பாக சுன்னி வக்ஃப் வாரியத்தின் வக்கீல்களில் ஒருவரான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜாஃபர்யாப் ஜீலானி தனியார் ஊடகம் ஒன்றிற்கு இதற்கு மறுப்பு தெரிவித்து பேட்டி அளித்திருந்தார். எனவே இது தொடர்பாக பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில் தற்போது இந்துத்துவ தரப்பினருடன் செட்டில்மென்ட் செய்து கொள்வது தொடர்பான செய்தி உண்மை […]
இந்திய காவல்துறையின் மனநிலை என்ன? அதிரவைக்கும் கருத்துக்கணிப்பு !
21 மாநிலங்களைச் சேர்ந்த காவல்நிலையத்தில் பணிபுரியும் 12,000 போலீசுக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினர் 11,000 பேர்களையும் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளனர். ***** “இந்தியாவில் காவல்துறை ஆதிக்கத்தின் நிலை – 2019” என்ற கருத்துக்கணிப்பு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அக்கருத்துக் கணிப்பில் பெறப்பட்ட முடிவுகள் போலீசின் இன்றைய நிலைமையை சுட்டிக் காட்டுகின்றன. குற்றங்களைச் செய்வதற்கு முசுலீம்கள் இயற்கையாகவே ஆட்படக் கூடியவர்கள் என்ற கருத்து இரண்டில் ஒரு போலீசுக்கு இருக்கிறது. போலீசுக்குரிய பண்பு மற்றும் வேலை நிலைமைகளைப் பற்றி […]
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்த எஸ்.பி.யை உடனடியாக மாற்றக்கோரி அமித்ஷாவுக்கு கடிதம்!
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் வைத்து அமைதி பேரணி நடத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜை ஆர்.எஸ்.எஸ். தரப்பு அணுகியுள்ளது.புதுக்கோட்டையின் நிலவரத்தை முழுவதும் அறிந்து வைத்துள்ள காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வராஜ் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளார். இவரின் இந்த தீர்க்கமான முடிவை எதிர்த்து பாஜக இளைஞரணி நிர்வாகி டி.எஸ்.பாண்டியராஜ் என்பவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றரை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,கடந்த முறையும் எஸ்.பி. செல்வராஜ் இதேபோல் தான் அனுமதி மறுத்தார் என்றும் அரசியல் […]
முஸ்லிம் தம்பதியினரை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூற வற்புறுத்தி ,பெண்ணிடம் அத்துமீறிய இருவரை பொதுமக்கள் ‘தர்ம அடி’ கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.!
கடந்த சனிக்கிழமை (5-10-19) ஹரியானா மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் ஒரு முஸ்லிம் தம்பதியினர் இரவு 11.30 மணியளவில் பேருந்திற்காக காத்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு பைக்கில் வந்த 2 நபர்கள் தம்பதியினர் இருவரையும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் சில தகாத சொற்களை கூறியும் , ஆபாச செய்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.பிறகு இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த பெண் முன்னே இருவரில் ஒருவன் ஆடையை அகற்றி ஆணுறுப்பை வெளிப்படுத்தி அசிங்கமாக பேசியுள்ளான் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக […]
ஜார்கண்டில் பழங்குடியின கிறிஸ்தவர்கள் அடித்து கொல்லப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!
பரவலான வெறுப்பு குற்றங்கள் காரணமாக ஜார்கண்ட் மாநிலம் சிறுபான்மையினருக்கு திகில் பிரதேசமாகி வருகிறது. பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் கும்பல் கொலைகாரர்கள் தண்டனையில் இருந்து பாதுகாப்பு பெற்று வருகின்றனர்
மோதியின் ஆட்சியின் கீழ் ‘கும்பல் வன்முறை சம்பவங்கள்’ அதிகரித்து வருகின்றன!- சசி தரூர் கடும் தாக்கு!
மதத்தின் பெயரால் நடைபெறும் கொலைகள் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியியின் கீழ் அதிகரித்து வருகின்றன என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அகில இந்திய நிபுணத்துவ காங்கிரஸ் (ஏஐபிசி) கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மோடி ஆட்சியை கடுமையாக சாடினார். “மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல், கடந்த 6 ஆண்டுகளாக நாம் எதை பார்த்து கொண்டிருக்கிறோம்? புனேவில் மொஹ்சின் […]