ஜந்தர் மந்தரில் பிரஹலாத் மோடி போராட்டம்: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார். பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் ஒன்றிய அரசை கண்டித்து ரேஷன் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் டீலர்கள் சங்கத்தின் தலைவராக பிரஹலாத் மோடி உள்ளார். அகில இந்திய நியாய விலைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பின் (AIFPSDF) துணைத் தலைவராகவும் அவர் உள்ளார். பிரதமர் மோடியின் சகோதரர் பேச்சு: […]
Indian Economy
அனில் அம்பானிக்கு வெளிநாட்டில் ரூ800 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு!
அனில் அம்பானி முன்பு செல்வந்தர்தான் ஆனால் இப்போது அவரிடம் எதுவும் இல்லை என லண்டன் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் வாதம் வைத்திருந்த நிலையில் தற்போது அது பொய் என அம்பலம் ஆகியுள்ளது.வெளிநாட்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகள், பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், ரூ800 கோடிக்கு மேல் அனில் அம்பானிக்கு சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் முதலீடுகள், கணக்கில் வராத சொத்துகள், இருப்பது உறுதியானதையடுத்து, 2015 கருப்புப் பணச் சட்டத்தின் (பிஎம்ஏ) கீழ் ரிலையன்ஸ் (ADA) குழுமத்தின் தலைவர் அனில் […]
டில்லி: லாக்டவுன் உள்ள நிலையிலும் புதிய பாராளுமன்றத்திற்கான கட்டுமான பணிகள் தொடரும் ..
தில்லி அரசாங்கம் திங்களன்று அறிவித்த லாக்டவுன் மத்தியிலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடரும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள பாராளுமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள இந்த கட்டிடம் நவம்பர் 2022 க்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை லாக்டவுனின் போது தில்லி அரசு கட்டுமான பணிகளை தடை செய்திருந்தாலும், […]
₹1.15 லச்சம் வாரா கடன் தள்ளுபடி – மத்திய இணை நிதியமைச்சர் அறிவிப்பு!
நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.15 ரூபாய் லச்சம் கோடி, வாரா கடனை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மோடி அரசு, மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கி வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி, வாரா கடன்கள், நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து முழு ஒதுக்கீடு செய்யப்பட்டவை உட்பட, சம்பந்தப்பட்ட வங்கியின் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து அகற்றப்பட்டதாக நிதிஇணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மக்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். முன்னதாக 2018-2019 நிதியாண்டில் 2.36 லட்சம் கோடி ரூபாய், […]
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்லும் மர்மம் என்ன ?!
ஒரு பேரல் கச்சா எண்ணெயை 110 டாலருக்கு விலை கொடுத்து வாங்கும் போது கூட இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் மட்டுமே. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயரும் காரணத்தால் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. மோடி பிரதமராக வருவதற்கு முன்பு, அதாவது 2013ல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 109-111 டாலர் வரையில் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் […]
‘பெட்ரோல், டீசல் விலை உயர காரணம் முந்தைய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையே’ – பிரதமர் மோடி ..
இந்தியாவில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி இருக்கும் நிலையில், இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி சார்புநிலையை குறைப்பதில் முந்தைய அரசாங்கங்கள் கவனம் செலுத்தியிருந்தால் இன்று நடுத்தர மக்கள் சிரம படும் நிலை உண்டாகி இருக்காது என பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமையன்று தெரிவித்துள்ளார். கடந்த 2019-20 நிதியாண்டில் இந்தியா தனது எண்ணெய் தேவைக்காக 85%, எரிவாயு தேவைக்காக 53% க்கும் அதிகமாக இறக்குமதி செய்தது என மோடி குறிப்பிட்டார். தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக எரிபொருள் விகிதங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து, […]
கொங்கு முதலாளிகளுக்கு கடன் மூட்டை, குஜராத்தி மார்வாடிகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி..
”…வாருங்கள் தமிழகத்து இந்துக்களே!! மார்வாடிகளை வாழவைப்போம், முஸ்லீம் தமிழர்களை விரட்டுவோம், பிற தமிழன் தலையிலே மிளகாய் அரைப்போம்..பாரத் மாதாக்கீ ஜே!!!” என பாஜக-இந்துத்துவ அமைப்புகள் அழைக்கின்றன. நீங்கள் தயாரா..?வட இந்தியா மார்வாடி-பனியா முதலாளிகளுக்கு ரூ68,000 கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன வங்கிகள். இன்று வெளியான அர்.டி.ஐ செய்தி அம்பலப்படுத்துகிறது. கடந்த வாரம் கோவையின் கொடீசியா எனும் சிறு-குறு தொழில் வர்த்தகக் கழகம் இந்தியா முழுவதுமுள்ள சிறு-குறு தொழில்களுக்கான கடனில்/ வரியில்/வட்டியில் சலுகை கேட்டிருந்தனர். நடுத்தர குடும்பத்தினர் ஈ.எம்.ஐ/ […]
பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி லிட்டருக்கு தலா ரூ.18 மற்றும் ரூ.12 வரை உயர்த்தியது மோடி அரசு..
மக்களவையில் இன்று, நாட்டில் கொரோனா பரவிவருவதை காரணம் காட்டி நிதி மசோதா 2020 க்கான திருத்தங்கள் விவாதங்கள் ஏதும் நடைபெறாமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் இந்த மசோதா அவசரகதியாக நிறைவேற்றப் பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி கோவிட் -19 நோயை எதிர்கொள்ள எந்தவிதமான நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எந்த வித நிதி திட்டங்களையும் நிதி அமைச்சர் நிர்மலா அறிவிக்கவில்லை. இன்று நிதி மசோதாவில் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான […]
“காங்கிரஸ் தான் எஸ் வங்கி சரிவுக்கு காரணம்” – நிர்மலாவின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி !
டிவிட்டரில் நேற்று யெஸ் பேங்க் குறித்த சில கேள்விகளை அரசை நோக்கி ப சிதம்பரம் எழுப்பி இருக்கிறார். அவற்றில் முக்கியமான ஒன்று மார்ச் 2014 ல் யெஸ் பேங்க்கின் லோன் 55,633 கோடியாக இருந்திருக்கிறது. மார்ச் 2019ல் அது 2,41,999ஆக உயர்ந்து விட்டிருக்கிறது. அதாவது ஆண்டுக்கு 35 சதம் லோன் அதிகரிப்பு. இது எப்படி நடந்தது, இது குறித்து ரிசர்வ் வங்கிக்கும், நிதியமைச்சகத்துக்கும் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார். முந்தைய காங்கிரஸ் அரசில்தான் யெஸ் பேங்க் சரிவுக்கு வித்திடப் […]
ரூ.20,000 கோடி செலவில் புதிய பாராளுமன்றம், பிரதமர் வீடு உள்ளிட்ட கட்டிடங்களை கட்ட மோடி அரசு முடிவு; ஆனா அதற்கான பணம் இல்லை..
இந்திய பொருளாதாரம் படுமோசமான நிலையில் சரிந்து சென்று கொண்டுள்ள நிலையில் மோடி அரசு மத்திய விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தை ( Central Vista revamp plan) கடந்த ஆண்டு அறிவித்தது. அது என்ன திட்டம் என்று கேட்கிறீர்களா? 20,000 கோடி செலவில் திட்டம் : புதிய முக்கோண வடிவிலான நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதிக்கான புதிய குடியிருப்புகள் மற்றும் சாஸ்திரி பவன், நிர்மன் பவன், உத்யோக் பவன், கிருஷி பவன், வாயு பவன் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை […]
‘ஜிஎஸ்டி நிலுவை தொகை கிடைக்க பெறாத மாநிலம் தமிழகம் மட்டுமல்ல’ – நிர்மலா சீதாராமன் ..
மாநில அரசாங்கங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரியின் நிலுவை தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இதற்காக மாநில அரசாங்கங்கள் மத்திய அரசிடம் பல்வேறு முறை கோரிக்கை வைத்தும் ஜிஎஸ்டி நிலுவை தொகை கிடைத்தபாடில்லை. கடந்த 2017-18 நிதி ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) நிலுவைத் தொகை ₹ 4,073 கோடி. இதை விரைவில் வழங்குமாறு தமிழகத்தின் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இது குறித்து மத்திய அரசிடம் ஏற்கனவே […]
மோடி, ராம்நாத் கோவிந்த் மற்றும் வெங்கையா நாயுடு பயணிக்க ரூ.8,458 கோடியில் பிரத்யேக விமானங்கள்..
இந்த விமானங்கள் தயாரிப்பு குறித்த ஒப்பந்தம் கடந்த 2006ஆம் ஆண்டில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட விமான தயாரிப்பாளர் நிறுவனமான போயிங்குடன் ஏர் இந்தியா நிறுவனம் செய்து கொண்டதாகும்; இந்த விமானங்கள் வி.வி.ஐ.பி-களின் பயணத்திற்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கீடு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய பட்ஜெட் உரையில், சிறப்பு கூடுதல் பிரிவு விமான நடவடிக்கைகளுக்காக (எஸ்.இ.எஸ்.எஃப்) இரண்டு புதிய விமானங்களை வாங்க மொத்தம் ரூ .810.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளின் (2018/19 […]
எல்.ஐ.சி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு !!
மத்தியில் மோடி ஆட்சி அமைந்தது முதல் அரசாங்க நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தனியாருக்கு விற்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ளது எல்.ஐ.சி நிறுவனம். மோடி தலைமையிலான அரசு எல்.ஐ.சி யின் பகுதி பங்குகளை IPO வடிவில் விற்க முடிவு செய்துள்ளது. இது குறித்த முடிவை பிப்ரவரி 1 ம் தேதி, மத்திய பட்ஜெட்டின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்கு நாடு முழுவதிலும் உள்ள எல்.ஐ.சி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடு தழுவிய போராட்டம்: […]
பிரதமர் மோடியின் பாதுகாப்பு செலவு 420 கோடியிலிருந்து 600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது!
பிரதமரைப் பாதுகாக்கும் பணியில் உள்ள சிறப்புப் பாதுகாப்பு படையினரின் ஒதுக்கீட்டை மத்திய அரசாங்கம் ரூ .540 கோடியிலிருந்து சுமார் 600 கோடியாக உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இது ரூ .420 கோடியிலிருந்து சுமார் ரூ .540 கோடியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 3000 பேர் கொண்ட சிறப்பு பாதுகாப்புக் படையினரால் பாதுகாப்பு வழங்கப்படும் ஒரே நபர் பிரதமர் மோடி மட்டுமே. நாட்டின் ஜனாதிபதியும் கூட இந்த பட்டியலில் இல்லை. முன்னாள் பிரதமர் குடும்பத்தினரின் பாதுகாப்பு நீக்கம்: […]
“இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் குருட்டு பட்ஜெட்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
“பொருளாதார தேக்கநிலை, வேலைவாய்ப்பின்மை, நலிவடையும் கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட நாட்டின் முக்கியப் பிரச்னைகள் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், பா.ஜ.க விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் நிதிநிலை அறிக்கையாகவே இந்த பட்ஜெட் இருக்கிறது” என தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: மத்திய பா.ஜ.க அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை ”பொருளாதார தேக்க நிலைமை”, “கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி”, […]