தில்லி அரசாங்கம் திங்களன்று அறிவித்த லாக்டவுன் மத்தியிலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடரும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள பாராளுமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள இந்த கட்டிடம் நவம்பர் 2022 க்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை லாக்டவுனின் போது தில்லி அரசு கட்டுமான பணிகளை தடை செய்திருந்தாலும், […]
Corona Virus
கும்ப மேளாவில் பங்கெடுத்த 19 கோவிட் பாசிடிவ் நோயாளிகள் உத்தரகண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் ..
புதுடில்லி: ஹரித்வாரில் கும்பமேளாவுக்குச் சென்று தெஹ்ரி மருத்துவமனையில் குணமடைந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பத்தொன்பது கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் தப்பி ஓடிவிட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரகண்ட் மாநிலத்தில் சுகாதார அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் பீதியைத் ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, ராஜஸ்தான் மாநில அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தி உள்ளது. “தப்பி ஓடியவர்கள் கும்ப மேளாவில் பங்கெடுத்தவர்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று சுகாதாரத் துறை அதிகாரி […]
‘ஆனானப்பட்ட பிரதமர் போய் ஒரு சாமியாரிடம் ஏன் விண்ணப்பம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?’ – ஸ்ரீதர் சுப்ரமணியம்
வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் சுவாமி அவதேஷானந்தா என்ற சாமியாரிடம் பேசி இருக்கிறார். கோவிட் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு கும்ப மேளாவில் மிச்சம் இருக்கும் நிகழ்வுகளை மக்களைக் கூட்டாமல் வெறுமனே சடங்கு-ரீதியாக மட்டுமே செய்து முடித்து விடலாம், என்று பரிந்துரைத்து இருக்கிறார்.அதன் விளைவாக ஜூனா அகாடா எனப்படும் சாமியார்கள் குழு கும்ப மேளாவில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. சுவாமி அவதேஷானந்தாவும் கடைசி நாள் சடங்குகளை சனிக்கிழமையே செய்து முடித்து விடுவதாக அறிவித்து இருக்கிறார். இது நல்ல விஷயம்தான். […]
‘கும்பமேளாவிலிருந்து திரும்புபவர்கள் கொரோனாவை ‘பிரசாதமாக’ விநியோகிப்பார்கள்..’ மும்பை மேயர் கிஷோரி கருத்து ..
கும்பமேளாவில் பக்தர்களுக்கும், சாதுக்களுக்கு தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும், அதாவது அடையாளம் என்ற வகையில் மட்டும் கும்பமேளாவை கொண்டாடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கும்ப மேளாவில் இருந்து திரும்புபவர்கள் தத்தம் மாநில மக்களுக்கு கொரோனாவை தான் பிரசாதமாக வழங்குவார்கள் என கருத்து தெரிவித்துள்ளார். கும்பமேளாவிலிருந்து அந்தந்த மாநிலங்களுக்குத் திரும்புபவர்கள் கொரோனாவை ‘பிரசாதமாக’ விநியோகிப்பார்கள் “என்று பிஎம்சி மேயர் […]
கொரோனாவில் இருந்து மீண்ட அமித் ஷா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி..என்ன தான் நடக்கிறது?
கொரோனவால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் தான் கொரோனா நோயில் இருந்து மீண்டு விட்டதாகவும், நெகட்டிவ் ரிசல்ட் வந்து விட்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். குர்கானில் உள்ள மெடந்தா என்ற தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜும் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அமித் ஷாவின் உடல் நிலை குறித்த உண்மை செய்தியை வெளியிட வேண்டும் என நெட்டிசன்கள் ஒருபுறம் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த […]
மருத்துவர்களுக்கு தரமற்ற முகக்கவசங்கள் வழங்கப்படுவதாக வெளியான நியூஸ் 18 செய்தி மாற்றப்பட்ட வினோதம்!
டில்லி AIIMS மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஸ்ரினிவாஸ் ராஜ்குமார் அவர்களுடைய கருத்துக்களின் அடிப்படையில் “மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற N95 முகக்கவசங்கள், மற்றும் PPE – தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு வழங்கப்படாமை” பற்றியும் நியூஸ்18.காம் இணைய தளத்தில் மே-29 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைக் களைவதற்குப் பதிலாக, நடந்தவை என்ன தெரியுமா? முன்னதாக கடந்த ஏப்ரலில், PPE வாங்க ஒதுக்கப்பட்டிருந்த 50 லட்ச ரூபாயை PM CARES-க்கு திருப்பிவிட்டது AIIMS நிர்வாகம். *அச்செய்தி முற்றிலும் […]
வக்ஃபு வாரியம் சார்பாக 51 கோடி கொரோனா நிதி உதவி; குருவாயூர் தேவஸ்தானம் 5 கோடி நிதி உதவி – சங்கிகள்* எதிர்ப்பு !
இந்தியா முழுக்க உள்ள வஃபு போர்டுகள் சார்பாக PM Cares கொரோனா நிவாரண உதவிக்கு ரூபாய் 51 கோடிகள் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. அலிகார் பல்கலை சார்பாக சுமார் 1.5 கோடியும், அலிகார் பல்கலை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 100 கொரோனா படுக்கைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அஜ்மீர் தர்கா நன்கொடை: அஜ்மீர் தர்கா சார்பாகவும் உபி மற்றும் டெல்லியின் சுற்றுப்புறத்தில் இருக்கும் தர்காக்களின் சார்பாகவும் (தர்கா கமிட்டி — காதீம்ஸ் மற்றும் ஷஜ்ஜதா நஸூன்) கணிசமான (1.4 கோடி) தொகை […]
அர்னாப் கோஸ்வாமியை விசாரித்த போலீஸ்காரருக்கு கொரோனா உறுதி; கவலையில் வலதுசாரிகள் ..
முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பவராகவும், மோடியின் பக்தராகவும் விமர்சிக்கப்படும் அர்னாப் கோஸ்வாமி, ரிபப்லிக் தொலைக்காட்சி நிறுவனர் ஆவார். இந்த சேனலின் மூலம் விவாதம் நடத்துகிறேன் என்ற பேரில் அனுதினமும் கலவரத்துக்கு இணையான சூழலை ஸ்டுடியோவுக்கு உள்ளேயே உருவாக்கும் திறன் படைத்தவர் அர்னாப், சங்கிகளின் ஹீரோவாக அறியப்படுபவர். சமீபத்தில் மஹாராஷ்டிரா பால்கர் கும்பல் கொலை வழக்கில் அர்னாப் கூறிய விஷ கருத்துக்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்த அவரது மிகவும் மட்டமான கருத்துக்களுக்காக கோஸ்வாமியை ஏப்ரல் […]
முதல்வர் உதவி கேட்க, ஏய்ம்ஸ் தலைவரையே குஜராத்துக்கு அனுப்பி வைத்த அமித்ஷா; பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசு?
கொரோனாவில் குரோதத்தை காட்டுகிறதா மத்திய அரசாங்கம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அஹமதாபாத்: பெருகி வரும் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மக்கள் பெரும் அளவு பொருளாத ரீதியாகவும் , உடல் நல ரீதியாகவும் பாதிக்கப்பட்ட இந்நிலையில் ஏய்ம்ஸ் தலைவரை குஜராத்துக்கு அனுப்ப ஆர்டர் போட்டுள்ளார் அமித்ஷா. நாட்டிலேயே மகாராஷ்டிராதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து குஜராத்தில்தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. குஜராத்தில் இதுவரை 8,194 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் […]
புர்காவுடன் டெல்லி கோவில், பள்ளி, குருத்வாராக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பெண்; அர்ச்சகர்கள் பாராட்டு!
கடந்த மூன்று மாதங்கள் வரையிலும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்றிருந்த நிலையில் மதக்கலவரங்களுக்கும் குறைவில்லாமல் பதற்றமாக போய்க்கொண்டிருந்த வடக்கு டெல்லியின் சூழல் இப்போது சற்றே தணிந்து வருகிறது. 34 வயதான இப்ரானா சைஃபி என்கிற பெண், தன்னோடு மேலும் 3 புர்கா அணிந்த முஸ்லிம் பெண்களை வைத்துக்கொண்டு, வடக்கு டெல்லியின் அனைத்து கோவில்கள், மஸ்ஜிதுகள், குருத்வாராக்கள் மற்றும் சர்ச்சுகளில் நுழைந்து கொரோனா பரவாமல் தடுக்கும் கிருமிநாசனி தெளித்து வருகிறார். கொரனா வாரியர்ஸ் என தனது குழுவிற்கு பெயர் […]
தன் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர் ஜாஹித் !
டெல்லி AIIMS மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றும் டாக்டர் ஜாஹித் என்ற மருத்துவர் ஒரு கொரோனா நோயாளியைக் காக்கும் போராட்டத்தில் தனது அசாதாரணமான தீரத்தையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு கொரோனா நோயாளியை தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றி அனுமதிக்குமாறு அவருக்கு அழைப்பு வந்தபோது அவரால் நோன்பைத் திறக்க கூட நேரம் ஒதுக்கமுடியவில்லை. அந்நோயாளிக்கு ஏற்கனவே செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மருத்துவர் ஜாஹித் அந்நோயாளியைக் காண ஆம்புலன்ஸிற்குச் சென்ற போது தற்செயலாக அந்நோயாளிக்கு சொருகப்பட்டிருந்த செயற்கைச் சுவாசக் குழல் […]
உபி: காசி விஸ்வநாத் கோவில் அர்ச்சகர்கள் நடுரோட்டில் கூட்டமாக ஒன்றுகூடி பூஜை; வழக்கு பதியப்படுமா?
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மாநில அரசாங்கங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கோரக்பூர் தலைமை பூசாரி அஜய் பிஷ்த் சிங் ஆளும் உபி மாநிலத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாத கோவில் அர்ச்சகர்கள் நடுரோட்டில் கூட்டமாக பூஜை செய்தனர். கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது. மத்திய அரசு மத ரீதியான எந்த ஒரு ஒன்று கூடலுக்கும் தடை விதித்துள்ள நிலையில் இவ்வாறு சட்ட விரோதமாக பல […]
தெலுங்கானா: கோவில் பூசாரி மற்றும் ஊழியர்களுக்கு உதவிய இஸ்லாமியர்கள் !
ஒரு புறம் பாசிச பயங்கரவாதிகளும், மோடியாக்களும் முஸ்லிம்கள் கொரோனா பரப்புவதாக பொய்யான மத வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வந்தாலும், பாதிப்புக்கு உள்ளாக்கப்படும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் சேவை செய்வதில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதாக தெரியவில்லை, அதற்கு காரணம் சராசரி இந்து மக்கள் வேறு, பாசிச பயங்கரவாதிகள் வேறு என்று அவர்கள் அறிந்து வைத்துள்ளது தான். அந்த வகையில் தெலுங்கானா மாநிலம், கோத்தகுடெம் பிரிவு ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் (JIH) இயக்கத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள பஜன் […]
ம.பி: சமூக விலகலை குழி தோண்டி புதைத்த பாஜக சுகாதாரத்துறை அமைச்சர்; முக கவசங்களும் இன்றி கோலாகல கொண்டாட்டம் !
கொரோனா வைரஸ் காட்டுத்தீயாக பரவி வரும் நிலையிலும், இந்தியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லாத ஒரே மாநிலம் பாஜக ஆளும் மத்திய பிரதேசமாக இருந்தது.கடும் விமர்சனங்களுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த 22 ஆம் தேதியன்று தான் நரோட்டம் மிஸ்ராவை சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்தது ஷிவ்ராஜ் சிங் அரசு. காலில் போட்டு மிதிக்கப்பட்ட சமூக விலகல்: பதவி கிடைத்த சந்தோஷத்தில், வெற்றிக்கோலம் பூண்டு நரோட்டம் மிஸ்ரா, அவரது சொந்த ஊரான டாடியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினர் […]
முஸ்லிம்களிடம் காய்கறிகளை வாங்காதீர்கள் என வெறுப்பை கக்கும் பாஜக எம்.எல்.ஏ !
உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ளவர்களிடம் முஸ்லிம் விற்பனையாளர்களிடமிருந்து காய்கறி வாங்க வேண்டாம் என்று பாஜக எம்எல்ஏ சுரேஷ் திவாரி கேட்டுக் கொண்டுள்ளார். “இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள், இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன், யாரும் முஸ்லிம்களிடமிருந்து காய்கறிகளை வாங்கக்கூடாது” என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த வீடியோவில் பர்ஹாஜ் தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் திவாரி கூறுகிறார். எனினும் இவ்வளவு மோசமான வெறுப்பு பேச்சு பேசியது குறித்து அவரிடமே விளக்கம் கேட்கப்பட, ஆம் […]