தங்கள் சொந்த நாட்டில் போதுமான அளவுக்கு உணவு இல்லாததால் பங்களாதேஷின் ஏழை மக்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள கருத்து கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. புதன்கிழமையன்று இதற்கு பதிலளித்த பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் பங்களாதேஷ் குறித்த உள்துறை அமைச்சரின் அறிவு “ சிறிய அளவில்” உள்ளது என தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துக்கள் “குறிப்பாக பங்களாதேஷுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் ஆழமாக இருக்கும்போது ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் அவர் […]
Bangladesh
மோடியின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேஷில் போராட்டம்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பங்களாதேஷ் போலீசார் வியாழக்கிழமை ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். தலைநகர் டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்ற போது, பலரும் கற்களை அதிகாரிகள் மீது வீசியதில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர் என்று பொலிசார் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் மட்டுமே 2000 பேர் இணைந்ததாக போராட்டகாரர்களின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். மோடி மத பதட்டங்களைத் தூண்டுவதாகவும், 2002 ல் […]