கர்நாடகாவில் பிரபல தலித் எழுத்தாளரும் ஆர்வலருமான தேவனூர் மகாதேவா ஆர்எஸ்எஸ் பற்றி எழுதியுள்ள புத்தகம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வலதுசாரிகள் இதை ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிரான பிரச்சாரம் என்கிறார்கள். “ஆர்எஸ்எஸ் ஆலா அகலா” (ஆர்எஸ்எஸ், அதன் ஆழமும் அகலமும்) என்ற புத்தகத்தின் விற்பனை கர்நாடக மாநிலத்தில் சாதனை படைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வியாழன் அன்று மகாதேவாவுக்கு ஆதரவாக, “ஆர்எஸ்எஸ் பற்றி அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கருத்து தெரிவித்துள்ளார். நூலை தடை செய்யத்துடிக்கும் வலதுசாரிகள்: இந்நூலை […]
Activists
தலித் எழுத்தாளரின் கவிதையை பாடப்புத்தகங்களில் இருந்து கைவிட கர்நாடகா பாஜக அரசு முடிவு!
கர்நாடகாவில் பாடநூல் திருத்தம் தொடர்பான சர்ச்சை தொடர் கதையாகி உள்ளது. சூரியனும் சந்திரனும் கடவுள் இல்லை என கூறும் பிரபல தலித் எழுத்தாளர் ஒருவரின் கவிதையை கைவிட ஆளும் பாஜக உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சித்தலிங்கய்யாவின் “பூமி” கவிதையை நான்காம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கி கர்நாடக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத உணர்வுகளை புண்படுத்தியதாக கவிதைக்கு எதிராக எழுந்த புகார்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை […]
‘பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை’ என பதிவிட்ட பாஜக எம்.எல்.ஏ மகள் பணியிடை நீக்கம்!
திரிபுரா மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அனிந்திதா பவுமிக். முறையான டெண்டர் மூலம் மருத்துவமனையின் விலை உயர்ந்த உபகரணம் வாங்கப்படவில்லை என அவர் முகநூலில் பதிவிட்ட காரணத்தால் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திரிபுராவின் தெற்கு மாவட்டத்தின் பெலோனியா சப் டிவிஷனைச் சேர்ந்த ஆளும் பாஜக எம்.எல்.ஏ., அருண் சந்திர பவுமிக் என்பவரின் மகள் தான் அனிந்திதா பவுமிக். “திரிபுராவில் 2018 ல் பாரதீய ஜனதா கட்சி அமைக்கப்பட்ட […]
பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட போது எந்த சிறையில் மோடி வைக்கப்பட்டார்? எப்போது கைது செய்யப்பட்டார்? என ஆர்.டி.ஐ தாக்கல் !
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ளார். தலைநகர் தாக்காவில் பேசிய மோடி தான் பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக பாடுபட்டதாகவும், அதற்காக சிறை சென்றதாகவும் கூறினார். “பங்களாதேஷின் சுதந்திரப் போராட்டம் எனது வாழ்க்கை பயணத்திலும் ஒரு முக்கியமான தருணமாகும் … நானும் எனது சகாக்களும் இந்தியாவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டோம் … அப்போது நான் எனது இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தேன். பங்களாதேஷின் சுதந்திரத்துக்காக சத்தியாக்கிரக போராட்டம் நடத்தி நான் சிறையிலும் அடைக்கப்படும் வாய்ப்பை அப்போது பெற்றேன்” […]
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்போம், இந்தியாவின் புறக்கணிப்பைக் கடுமையாக எதிர்ப்போம் – எஸ்.பி உதயகுமார்
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்போம். இந்தியாவின் புறக்கணிப்பைக் கடுமையாக எதிர்ப்போம் என எஸ்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே வழங்கப்படுகிறது. ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் ஈழத்தமிழருக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய மனித உரிமைகள் மீறல் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த முக்கியமான தீர்மானத்தை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றாய் நின்று வரவேற்போம். பனிரெண்டு ஆண்டு […]
குஜராத்: தலித் ஆர்டிஐ செயற்பாட்டாளரின் கொலை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஜிக்னேஷ் இடைநீக்கம் செய்யப்பட்டார்!
குஜராத்: சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதியின்றி தலித் தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தை பலமுறை எழுப்பியதை அடுத்து, “ஒழுக்கமின்மை” காரணமாக குஜராத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, மாநில சட்டமன்றத்தில் இருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியின் உத்தரவின் பேரில் அவர் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதே போல கடந்த வியாழக்கிழமையும் இதே காரணத்திற்காக ஜிக்னேஷ் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். மார்ச் 2 ம் தேதி போலீஸ்ஸார் […]
நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி பயில நீட் நுழைவுத்தேர்வு! – மே 17 இயக்கம் கண்டனம்
எம்பிபிஎஸ் படிக்கவும், பல் மருத்துவ படிப்பிற்கும் ஏற்கனவே நீட் (NEET) என்னும் தேசிய நுழைவுத் தேர்வு உள்ள நிலையில், வரும் கல்வியாண்டு முதல் நர்ஸிங், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது மோடியின் பாஜக அரசு. இது ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயில்வதை அடியோடு தடுத்தும் நிறுத்தும் செயலாகும். இந்திய ஒன்றிய பாஜக அரசின் இந்த செயலை மே பதினேழு இயக்கம் […]
“அப்பட்டமாக பொய் சொன்ன அமித் ஷா” – ஆர்.டி.ஐ மூலம் அம்பலபடுத்திய ஆர்வலர், ஆவேசம்!
கடந்த அக்டோபரில், உள்துறை அமைச்சர் அமித்ஷா சி.என்.என் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக நேர்காணல் வழங்கினார். அப்போது பேசிய அமித் ஷா “மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன” என்று கூறினார். இதை சி.என்.என் நியூஸ் 18 அல்லது இன்னபிற கோதி மீடியாக்களோ ஒரு பொருட்டாக எடுத்த கொள்ள வில்லை, பேட்டி கண்ட நபரும் இதை எப்படி சொலிகிறீர்கள், இதற்கு ஆதாரம் உள்ளதா என்றும் கேட்கவில்லை. இந்நிலையில் பிரபல ஆர்.டி.ஐ ஆர்வலர் திரு.சாகேத் […]