ஆம் அட்மி கட்சி (ஆம் ஆத்மி) எம்எல்ஏ அமானத்துல்லா கானின் உறவினர்கள் கோவில் தலைமை பூசாரி அஜய் பிஷ்த் சிங் ஆளும் மாநிலமான உபியின் மீரட் மாவட்டத்தில், அக்வான்பூரில் வசித்து வருகின்றனர். அமானத்துல்லாவின் வெற்றியை கொண்டாடிய அவரது உறவினர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர் உபி போலீசார்.
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி:
ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ அமானத்துல்லா கான், ஓக்லா தொகுதியில் இருந்து சமீபத்தில் டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரஹம் சிங்கை 71, 827 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார், இவரது தொகுதியில் தான் ஷஹீன் பாக் மற்றும் ஜாமியா பலகலை பகுதிகள் வருகிறது.
அவரது வெற்றி பாசிச கும்பலுக்கு தாங்க முடியாத வயித்தெரிச்சலை உண்டாக்கியது. அதன் ஒரு பகுதியாக தான் உபி போலீசார் அமானத்துல்லா கானின் உறவினர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர் என விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நடந்த சம்பவம்:
செவ்வாய்க்கிழமை மாலை அமானத்துல்லா கானின் வெற்றி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, எம்எல்ஏ வின் சொந்த கிராமமான அக்வான்பூரில் உள்ள அவரது உறவினர்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கினர். இதை அறிந்த போலீசார் அங்கு திரண்டுள்ளனர், அங்கு கூடி இருந்த எம்.எல்.ஏ.வின் உறவினர்களையும் கிராம மக்களையும் கலைத்திட தடியடி நடத்தியுள்ளனர்.
போலீசார் அட்டூழியம்:
ஆண் போலீசார் இளம் சிறுமிகளுடன் தவறாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு சிறுமியின் தலைமுடியை இழுத்தபடியே, கிராம வீதிகளில் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளனர் உபி போலீசார். வெற்றியைக் கொண்டாடுவது தொடர்பான பிரச்சினையில் போலீசாருடன் பிரச்சனை ஏற்பட்ட பின் தப்பி ஓடிய எம்.எல்.ஏ.வின் உறவினர்களை அடையாளம் காண தான் அந்த சிறுமியை போலீசார் இழுத்து சென்றுள்ளனர்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் உறவினர் நூர் உல்லா மீது 144 தடை உத்தரவை மீறியதாக, முக்கிய குற்றவாளியாக சேர்த்துள்ளது உபி போலீஸ். அது தவிர 13 பேர்கள் மீதும் உபி போலீஸ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
காவல்துறை வழக்கம் போல் மறுப்பு:
144 வது பிரிவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது காவல்துறை அத்துமீறியது தொடர்பான செய்திகளை மறுப்பதாகவும் பரிக்ஷத்கர் காவல் நிலைய எஸ்.எச்.ஓ கைலாஷ் சந்த் தெரிவித்தார்.
அமானத்துல்லா பதிலடி:
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமானத்துல்லா, ” எனது உறவினர்கள் சிலர் எனது வெற்றியை கொண்டாடியதில் அப்படி என்ன தவறு உள்ளது என்று எனக்கு புரியவில்லை. இது போன்ற சம்பவங்கள் தான், வெறுப்பு அரசியல் செய்யும் யோகி ஆதித்யநாத்துக்கும் பாஜக வுக்கும் தோல்வியை தேடி தருகிறது.” என கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியினர் சந்திப்பு:
சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் அதுல் பிரதான், மாவட்டத் தலைவர் ராஜ்பால் சிங் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ பிரபுடயால் வால்மீகி ஆகியோர் கிராமத்திற்குச் சென்று நூர் உல்லா மற்றும் எம்.எல்.ஏ.வின் பிற குடும்ப உறுப்பினர்களை சந்தித்தனர். அமானத்துல்லா கானின் உறவினர்களுடன், குறிப்பாக சிறுமிகளுடன் காவல்துறையினர் நடந்து கொண்டதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அப்படியென்ன கொண்டாடி விட்டனர்?:
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை அறிவிக்கப்பட்டதையடுத்து ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லாவின் உறவினர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு விநியோகித்து வந்தனர். இந்த மகத்தான வெற்றியைக் கொண்டாட அவர்கள் “தோல்வாலா” (நாட்டுப்புற டிரம் வாசிப்பவர்) ஒருவருக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இது தான் அவர்களின் கொண்டாட்டம், வேறொன்றையும் அவர்கள் செய்திடவில்லை.
இந்த சமயத்தில் தான் திடீரென பொலிசார் அங்கு வந்து மாவட்டத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் கொண்டாட்டத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். சில கிராமவாசிகள் காவல்துறையினரை ஆட்சேபித்தனர், நாங்கள் யாருக்கும் தொல்லை இன்றி கொண்டாட்டத்தில் தானே ஈடுபட்டுள்ளோம், இதில் என்ன தவறு என கூறியுள்ளனர். இதற்கு பதில் அளிக்காத போலீசார், அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதில் கிராம் மக்கள் பலருக்கு கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
காவல்துறையின் அராஜகம்?:
கொண்டாடிய ஆண்களை குறித்து போலீசார் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் விசாரிக்கத் தொடங்கினர் என எம்.ஏ படித்த மாணவி நஸ்மி (22) கூறுகிறார். இவர் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியுமாவார்.
போலீசார் நூர் உல்லாவின் 17 வயது மகள் ஜைனாவுடன் தவறாக நடந்து கொண்டதாக நஸ்மி கூறுகிறார். ” போலீசார் என்னை மாடியில் இருந்து கீழே இழுத்து வந்தனர், இதனால் சிறுமி தரையில் விழுந்தார். போலீசார் என் கூந்தலை இழுத்து, மற்ற கிராமவாசிகளுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தெருக்களில் நடக்க வைத்தார்கள், இதனால் கொண்டாத்தில் ஈடுபட்ட ஆண்களை அடையாளம் கண்டுவிடலாம் என போலீசார் எண்ணினர் ” என்கிறார் நஸ்மி.
இழி செயல்:
“என்னை இழுத்து கீழே தள்ளி போலீசார் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர், ஒருவர் எனது துப்பட்டாவை பிடித்து இழுத்ததார், அது எனது கழுத்தில் சிவப்பு அடையாளத்தை ஏற்படுத்தியது” என்று நஸ்மி தனக்கு நடந்த கொடுமையை விளக்குகிறார்.
அப்பாவிகளை தாக்கிய உபி போலீஸ்:
நோய்வாய்ப்பட்ட மனைவியைப் பார்ப்பதற்காக கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஏழை கடைக்காரர் ஹக்கீமுதீன் உள்ளிட்ட மற்ற கிராமவாசிகளையும் போலீசார் தாக்கியதாக கிராம மக்கள் தேர்விக்கின்றனர்.. போலீசார் தாக்கியதில் ஹக்கீமுதீனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உபி போலீசார் லட்சணம்:
நாட்டில் மிக மோசமான குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதில் முதல் இடமாக உபி உள்ளது. அதுவும் பாலியல் குற்ற சம்பவங்கள் பாஜக ஆட்சி அமைத்தது முதல் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதில் ஈடுபவர்களில் அதிகமானோர் இந்துத்துவா வினரே என ஊடக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இவர்களில் எவரையும் இந்த உபி போலீஸ் இப்படி செய்ய வக்கில்லை ஆனால் அப்பாவி மக்களை அதுவும் குறிப்பாக முஸ்லிம்களை மட்டும் இப்படி செய்வது இழி செயல் என விமர்சகர்கள் கடுமையாக கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.