உத்தரகண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ பிரனவ் சிங் சாம்பியன் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். இவர் சமீபத்தில் “தமஞ்சே பெ டிஸ்கோ” என்ற பிரபல பாலிவுட் பாடலுக்கு கருப்பு நிற மேல் உள்ளாடையுடன் தனது ஆதரவாளர்களுடன் கைகளில் துப்பாக்கிகளை வைத்து கொண்டு குத்தாட்டம் , கும்மாளம் அடித்து கொண்டே பாலிவுட் ” கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸெய்பூர் ஸ்டைலில் ” உத்தரகாண்ட் மாநிலத்தை நாகரீகமற்ற வார்த்தைகளில் பேசும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.
அமைச்சரின் இந்த குதூகலத்திற்கு காரணம் அவர் கால் ஆபரேஷனுக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளதே.
வாயில பீர்;கைகளில் துப்பாக்கிகளுடன் டிஸ்கோ ஆடிய BJP MLA video:
அவ்வீடியோவில் ஒன்று இரண்டு அல்ல, மொத்தம் 4 உயர் ரக துப்பாக்கிகளோடு, கால்களை உயர்த்தியபடி ஆனந்த குத்தாட்டம் போடுகிறார். அதில் ஒரு சமயத்தில் வாயில் துப்பாக்கியை வைத்து கொண்டும் ஆடுகிறார்.
அவரின் ஆதரவாளர்களும் அவருக்கு தெம்பு அளிக்கும் வகையில் “உங்களை போன்று வேறு எவரும் இம்மாநிலத்தில் இல்லை. நீங்கள் மட்டும் தான் இவ்வாறு செய்ய முடியும் ” என்று புகழ்மாலை சூட்டுகின்றனர்.
அதற்கு மாண்புமிகு அமைச்சர் “உத்தரகண்டில் மட்டுமல்ல, முழு இந்தியாவிலும் இவ்வாறு யாராலும் செய்ய முடியாது” என்று தொண்டர்களின் பாராட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக பிரணவ் சிங் சாம்பியன் கூறுகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு, பிரணவ் சிங் ஒரு வீடியோ வைரலாகியது அதில் அவர் ஒரு பத்திரிகையாளரைக் கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பத்திரிகையாளர் சிங் மீது டெல்லியில் உள்ள சாணக்யபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் அதிரடியாக செயல்பட்ட உத்தரகண்ட் பாஜக தலைவர் நரேஷ் பன்சால், பத்திரிகையாளர்களுடன் முறைகேடாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரணவ் சிங்கை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்திருந்தார்.
மேலும் இந்த வீடியோ குறித்து பேசியுள்ள பாஜக ஊடக தொடர்பாளர் அணில் புலானி, “அந்த வீடியோவை நான் பார்த்தேன். இது கண்டிப்பாக கண்டனத்துக்குரியது. ஏற்கனவே பிரணவ் சிங் மீது இது போன்ற புகார்கள் எழுந்தன. அதனால்தான் அவர் கட்சியிலிருந்து 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து உத்தரகண்ட் பாஜக தலைவர்களுடன் பேசி விரைவில் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்
இவர் வீடியோவில் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வைத்துள்ளது குறித்து இது சட்டபூர்வமாக அனுமதி பெற்றது தானா என்று போலீசார் விசாரிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.