உபி மாநில இணையதளத்தில் குழந்தைகளின் மதிய வேளையில் உணவின்போது வழங்கப்படக் கூடிய உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பருப்பு வகைகள், அரிசி ரொட்டி காய்கறிகள் என பட்டியல் நீளுகிறது ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
கிழக்கு உபி யி உள்ள மிர்சாபூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 100 மாணவர்கள் மதிய வேளை உணவாக வெறும் ரொட்டியும் அதை தொட்டு கொள்வதற்கு உப்பையும் கொண்டு சிறார்கள் சாப்பிடும் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முக்கிய திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்காக அவர்கள் சரியான ஊட்டச்சத்து பெற்றிட வழங்கப்படுவது தான் இந்த மதிய வேளை உணவு.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் மாணவர்கள் பள்ளி நடைபாதையின் தரையில் உட்கார்ந்தபடி தங்கள் தட்டுக்களில் ரொட்டியும் தொட்டுக் கொள்வதற்காக சிறிது அளவு உப்பையும் வைத்து கொண்டு சாப்பிடுவதை காண முடிகிறது.
உத்திரப்பிரதேச மாநில அரசின் இணையதளத்தில் மதிய உணவாக குழந்தைகள் எதை உண்ணுகின்றனர் என்பதின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பருப்பு வகைகள், அரிசி, ரொட்டி மற்றும் காய்கறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்கள் மற்றும் பால் ஒரு சில தினங்கள் கிடைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இங்கு நிலைமை படுமோசமாக உள்ளது. ஒரு சமயம் குழந்தைகளுக்கு ரொட்டியும் உப்பும் கிடைக்கும், மறு சமயம் அரிசியும் உப்பும் அரிதாக ஏதேனும் ஒரு நாள் பால் வந்தடையும். ஆனால் அது ஒருபோதும் பகிர்ந்து அளிக்கப்படுவது கிடையாது. வாழைப்பழம் அப்படி தான் பகிர்ந்து அளிக்கப்படாது. கடந்த ஒரு வருடமாக இதே நிலைதான் நீடிக்கிறது” என்று மாணவர் ஒருவரின் பெற்றோர் உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி : “மிற்சாபூறில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மதிய வேளை உணவாக ரொட்டி மற்றும் உப்பு வழங்கப்படுகிறது. இதுதான் மாநிலத்தை ஆளக்கூடிய பாஜகவின் லட்சணமாகும். அரசாங்கத்தால் வழங்கப்படும் வசதிகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது.குழந்தைகள் இதுபோன்ற நடத்தப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். என்று ஹிந்தி மொழியில் பதிவு செய்துள்ளார்.