இந்திய முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளிநாட்டு பல்கலைக்கழக ஆய்வுகள், இது குறித்து 49 பிரபலங்கள் பிரதமருக்கு எழுதிய கடிதம் என்று நிலைமை போய் கொண்டிருக்க “சிறுபான்மையினருக்கு இந்தியா ஒரு சொர்க்க பூமி , இங்கு அவர்கள் முழுப் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் எனினும் நம் அண்டை நாடான பாகிஸ்தான் தான் சிறுபான்மையினருக்கு நரகத்தை போன்றது என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பி.எஸ்.அப்துர் அப்துர் ரஹ்மான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தனியார் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.