சமூக வலைத்தளங்களில் உயிர்ப்புடன் எழுதும் சிலரில் பிரபுகண்ணனனும் ஒருவர், அவர் பாஜக வை எதிர்க்கும் விடயத்தில் சிவ சேனாவிடம் தமிழக அரசியல் கட்சிகள் பெற வேண்டிய பாடம் குறித்து எழுதிய ஆக்கத்தை கீழே தருகிறோம்.
- பாரதீய ஜனதாவை எந்த ஒரு சூழலிலும் நம்பாதீர்கள். அவர்கள் சொன்ன பேச்சை எப்போதுமே காப்பாற்றியது இல்லை. அதனால் நீங்கள் அவர்களிடம் உண்மை பேச கூடாது. அவர்களை ஏமாற்ற எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் ஏமாற்றா விட்டால் அவர்கள் ஏமாற்றுவார்கள். மராட்டியத்தில் EVM மூலம் ஆட்சியை பாரதீய ஜனதா கட்சி பிடிக்கும் என உணர்ந்து தேர்தலுக்கு முன்னர் கூட்டணி வைத்த சிவசேனா தேர்தலுக்கு பிறகு பாரதீய ஜனதாவை எப்படி கவிழ்த்தது என சிந்தியுங்கள். ஒரு வேளை அவர்கள் அதை செய்திரா விட்டால் சிவசேனா இப்போது இருந்திருக்காது.
- எந்த சூழலுக்கும் பாரதீய ஜனதாவின் அடிவருடிகளான வருமானவரித்துறை உள்ளிட்ட அமைப்புக்களுக்கு பயப்படாதீர்கள். சிவசேனா கட்சியினருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய போது சிவசேனா கட்சி அவர்கள் அலுவலகத்திற்கு சென்று பாரதீய ஜனதா கட்சிக்கொடியை கட்டியது.
- மாநில அரசுகள் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பாரதீய ஜனதா கட்சியினரை அடக்கி வையுங்கள். உத்தவ் தாக்கரே மீது பாரதீய ஜனதா அர்னாப் கொசுவாமி அவதூறு பரப்பியதன் பின்னர் அர்னாபை உத்தவ் தாக்கரே வலுவான குற்றச்சாட்டில் சிறைக்கு அனுப்பினார். அதன் பின்னர் தான் கொட்டம் அடங்கியது. மாறாக உத்தவ் தாக்கரே பாரதீய ஜனதா கட்சியுடன் பேரம் பேசி இருந்தால் இன்று அவர் ஆட்சி கவிழ்ந்து அப்பா பிள்ளை இருவரும் சிறையில் இருந்திருப்பார்கள்.
- எதற்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா கட்சி என உங்களை நீங்களே பயமுறுத்தி கொள்ளாதீர்கள். EVM மூலம் மட்டுமே பாரதீய ஜனதாவின் வெற்றி என்பதையும், நாடு முழுவதும் மக்கள் ஆதரவு சிறிதும் இல்லாத கட்சி என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். பிரதமரை வரவேற்க கூட கூட்டணி கட்சிகளை மிரட்ட வேண்டிய இடத்தில் இருக்கும் கட்சியை பற்றி நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்?. இதை நன்றாக புரிந்து கொண்டதாலேயே சிவசேனா பாரதீய ஜனதா கட்சியின் தவறுகள் விடாமல் அம்பலப்படுத்துகிறது.
இந்த நான்கு விடயங்களையும் பின்பற்றும் கட்சிகள் இந்திய அரசியலில் நிலைத்து நிற்கும்.
ஆக்கம்: பிரபுகண்ணன்